26 Jan 2025 1:12 amFeatured

பல்வேறு பகுதிகளில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது
தமிழ் மொழிக்காக போராடி உயிர் நீத்த தியாகிகளை நினைவுகூர்ந்து அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி உலகெங்கிலுமுள்ள தமிழ் உணர்வாளர்களால் மொழிப் போர் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
அவ்வகையில் மும்பையிலும் மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன
ஆரே காலனி

திமுக மும்பை புறநகர் மாநிலம் ஆரே காலனி கிளை சார்பாக வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிவக்குமார், தலைமை வகித்தார் .மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிஷேக்மீரான், அவைத்தலைவர் தலைவர் ஜேம்ஸ் தேவதாசன் ஆகியோர் தியாகிகள் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் பாண்டுப் ச.சி .தாசன், ஆரே காலனி பாண்டு, முன்னாள் செயலாலர் கு. தர்மலிங்கம் ,முகமது அலி ஜின்னா, சேகர் சுப்பையா, கோவிந்தராஜ், சதாசிவம், தர்நீஷ், பன்னீர் செல்வம் ஆறுமுகம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கல்யாண்

கல்யாண் பகுதியில் மும்பை புறநகர் மாநில திமுக துணைச் செயலாளர் வதிலை பிரதாபன் தலைமையில் நடைபெற்றது அதில் மும்பை புறநகர் மாநில திமுக இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன், அம்பர்நாத் கிளை முத்தமிழ் தண்டபாணி,அம்பர்நாத் கிளை வல்லவன், டோம்பிவிலி கிளைச் செயலாளர் வீரை சோ பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்
பிவாண்டி

பிவாண்டி பகுதியில் நடைபெற்ற வீரவணக்க நாள் கூட்டம் கிளை செயலாளர் மெஹபூப் பாஷா தலைமையில் நடந்தது. மும்பை திமுக மாநில இளைஞர் அணி அமைப்பாளர் ந.வசந்தகுமார், முஸ்டாக் பாய், ஜெயினுல்லாப்தீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
குர்லா-ஜெரிமரி

குர்லா ஜெரிமரி பகுதியில் மும்பை புறநகர் மாநில திமுக துணைச் செயலாளர் அ.இளங்கோ தலைமையில் நடைபெற்றது .
கோரேகான்
கோரேகான் பகுதியில் சோ.பா. குமரேசன் தலைமையில் நடைபெற்றது.
மும்பை மாநகர திமுக

மும்பை மாநகர திமுக சார்பில் கலைஞர் மாளிகை தாராவியில் நடைபெற்றது அவைத் தலைவர் வே.மா. உத்தமன், தானே திமுக ஜாகீர் உசேன், திமுக மூத்த முன்னோடி சண்முகராசன், திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அமரன் உத்தமன் மற்றும் பலர் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.
ஜோகேஸ்வரி

ஜோகேஸ்வரி கிளையில் இன்று கழக மேலவை பிரதிநிதி ஆர்.ரமேஷ் மற்றும் கழக செயளாளர் தமிழினநேசன் முன்னிலையில் கழக உறுப்பினர் ஷேர் அலி,க.சுந்தர்,இப்ராஹிம் பாய், தி.மு.க. மகளீர் அணி மற்றும் பம்பாய் தமிழர் பேரவை கல்வி அறக்கட்டளையால் இயங்கி வரும் பீப்பள்ஸ் வெல்ஃபேயர் ஆங்கில உயர் நிலை பள்ளி முதல்வர், ஆசிரியை ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தினார்கள்.






Users Today : 8
Total Users : 111120
Views Today : 8
Total views : 439503
Who's Online : 0
Your IP Address : 216.73.216.138