Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 99 ஆவது பிறந்தநாள் விழா – கல்யாண் கிளை மும்பை புறநகர் மாநிலம் சார்பில்

11 Jun 2022 10:45 pmFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Pictures kalainger

திராவிட முன்னேற்றக் கழகம், கல்யாண் கிளை மும்பை புறநகர் மாநிலம் நடத்தும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 99 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

12-06-2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் டோம்பிவிலி மேற்கில் உள்ள ஜோந்தலே மேல்நிலைப் பள்ளியில் (இரயில் நிலையம் அருகில்) வைத்து முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் (99) தொண்ணூற்றி ஒன்பதாவது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

தலைமை

மும்பை புறநகர் திமு கழகத்தின் துணைச் செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கல்யாண் கிளைக்கழகச் செயலாளர் மு.மகேசன் வரவேற்புரையாற்றுகிறார்.

சிறப்புரை

திராவிட முன்னேற்றக் கழகம்- மும்பை புறநகர் மாநில செயலாளர் அலிசேக் மீரான் நிகழ்வில் கலந்து கொண்டு கலைஞரின் இயக்கப்பணிகள், சமூகம் மற்றும் இலக்கியப் பணிகள் பற்றி சிறப்புரை ஆற்றவுள்ளார்.

நலத்திட்ட உதவி

மும்பை புறநகர் மாநிலத் திமு கழகத்தின் அவைத்தலைவர் ஜேம்ஸ் தேவதாசன் கலைஞரின் பிறந்தநாள் மகிழ்வுரையுடன் நலத்திட்ட உதவிகளை வழங்கிச் சிறப்பிக்கவுள்ளார்.

வாழ்த்துரை

மும்பை மாநிலத் திமுகழகப் பொறுப்பாளர் கருவூர்.ஆர்.பழனிச்சாமி, மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன், மும்பை புறநகர் திமுகழகத் துணைச் செயலாளர் அ.இளங்கோ, இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.ரா.தமிழ்நேசன், இளைஞரணி மாநில அமைப்பாளர் ந.வசந்தக்குமார்,

மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன், புறநகர் திமுகழக கலை இலக்கியப் பேரவை அமைப்பாளர் பாவலர் நெல்லை பைந்தமிழ், இலக்கிய அணிப் புரவலர் கவிமாமணி இரஜகை நிலவன், துணை அமைப்பாளர் ஜைநுல்லாபுதீன், அம்பர்நாத் திமுகழகத்தைச் சார்ந்த முத்தமிழ் தண்டபாணி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

முன்னிலை

புறநகர் திமுகழகப் பொருளாளர் பி.கிருஷ்ணன், மும்பை மாநிலத் திமுகழக அவைத்தலைவர் வே.ம.உத்தமன், மும்பை புறநகர் மாநில இலக்கிய அணிப் புரவலர் சோ.பா.குமரேசன்,

டோம்பிவிலி கிளைக்கழக செயலாளர் வீரை.சோ.பாபு, பாண்டூப் கிளைக்கழக செயலாளர் கு.மாரியப்பன், பீவண்டி கிளைக்கழகச் செயலாளர் மெகபூப் பாட்சா சேக்,இளைஞரணி துணை அமைப்பாளர் இரா.கணேசன்,

பிவண்டி கிளை அவைத்தலைவர் முகமது அலி, அம்பர்நாத் கிளைக்கழக செயலாளர் ஜஸ்டின், தானே கிளைக்கழக செயலாளர் பாலமுருகன், முலுண்ட் கிளைக்கழக செயலாளர் எஸ்.பெருமாள், திவா கிளைக்கழக செயலாளர் வேல்முருகன், டோம்பிவிலி கிளைக்கழகம் அ.வேலையா, பிவண்டி கிளை பொருளாளர் முஷ்டாக் அலி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

நெறியாள்கை

மும்பை புறநகர் திமுகழக இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன் நெறியாள்கை செய்கிறார்.

நன்றியுரை

நிறைவாக கல்யாண் கிளைக்கழக அவைத்தலைவர் க.ஜீவானந்தம் நன்றியுரை ஆற்றவுள்ளார்.

நிகழ்வில் வருகை புரியவுள்ள கல்யாண், டோம்பிவிலி, திவா, அம்பர்நாத், திப்பண்ணா நகர் வாழும் பொது மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

115726
Users Today : 28
Total Users : 115726
Views Today : 32
Total views : 445566
Who's Online : 1
Your IP Address : 216.73.217.169

Archives (முந்தைய செய்திகள்)