05 Aug 2026 1:54 pmFeatured

மும்பை புறநகர் மாநில திமுக சார்பில்
தமிழரின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட முதுபெரும் தமிழறிஞரும் இனத்தின் அடையாளமாய், மொழியின் எழுச்சியாய் நிருவாகத்தின் அறிவூற்றாய் வாழ்ந்தவரும், மேனாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு பாண்டூப் பிரைட் மேனிலைப்பள்ளியில் வைத்து புறநகர மாநிலத் தி.மு கழகப் பொறுப்புக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் தேவதாசன் தலைமையில் 07-08-2026 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது.
மாநிலத் திராவிட முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர் அலிசேக் மீரான் நினைவேந்தல் நிகழ்வுச் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
பொறுப்புக் குழு உறுப்பினர்கள் பி.கிருஷ்ணன், வதிலை பிரதாபன், அ.இளங்கோ, ந.வசந்தகுமார், வே.சதானந்தன், ஜைனுல்லாபுதீன், வீரை சோ பாபு, மெஹபூப் பாஷா, சிவக்குமார் சுந்தர்ராஜ், சிலுவை தாசன் ஆகியோர் நினைவேந்தலுரை ஆற்றவுள்ளார்கள்.
புறநகர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்துக் கிளைக் கழகங்களின் நிருவாகிகளும் கழக உணர்வாளர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு கலைஞருக்குப் புகழஞ்சலி செலுத்தவுள்ளார்கள்.
எதிர்க்கட்சித் தலைவரும் மேனாள் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை 05-08-2026 புதன்கிழமை நடைபெறவிருந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க விடாமல் தடுக்கும் எண்ணத்திலும் பழிவாங்கும் நோக்கத்திலும் கைது செய்தமைக்காக மும்பை புறநகர் மாநிலத் திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாகத் தமது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.






Users Today : 13
Total Users : 118872
Views Today : 15
Total views : 449974
Who's Online : 0
Your IP Address : 18.97.9.172
Nice announcement