24 Jun 2025 10:32 amFeatured
கவிஞர் சல்மா எம்.பி - நல உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்
மும்பை புறநகர் மாநில திராவிட முன்னேற்றக் கழகம் ஆரே காலனி கிளைக் கழகம் சார்பில் வருகிற 28-08-2025 - சனிக்கிழமை அன்று மாலை 6.00 மணியளவில் ஆரே காலனி, யூனிட் எண்.7, நெல்லை விநாயகர் கோவில் திடலில் வைத்து முத்தமிழறிஞர் கலைஞரின் 102 ஆவது பிறந்தநாள் விழா வெகுச் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா மும்பை புறநகர் மாநிலப் பொறுப்பாளர் அலிசேக் மீரான் தலைமையில் நடைபெறவுள்ளது.
விழாவில் நாடாளுமன்ற மேலவை உறுப்பினரும், முன்னாள் அரசு சமூகநல வாரியத் தலைவருமான கவிஞர் சல்மா எம்.பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.
பொறுப்புக்குழு உறுப்பினர்களான சிவக்குமார் சுந்தர்ராஜ் வரவேற்புரையும், வதிலை பிரதாபன் தொடக்கவுரையும் ஆற்றவுள்ளனர்
தந்தை பெரியார் படத்தை பொறுப்புக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் தேவதாசனும், பேரறிஞர் அண்ணா படத்தை ஆரே காலனிக் கிளைக் கழக முன்னோடி கு.தர்மலிங்கமும், முத்தமிழறிஞர் கலைஞர் படத்தை மாநில இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமாரும் திறந்து வைக்கிறார்கள்.
விழாவில், கழக உறுப்பினர் உரிமை அட்டைகளை கழகத் தோழர்களுக்கு வழங்குவதுடன் அந்தப் பகுதிவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் கவிஞர் சல்மா எம்.பி வழங்கவுள்ளார்.
பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பி.கிருஷ்ணன், அ.இளங்கோ, வே.சதானந்தன், வெ.அ. ஜெய்னுலாபுதீன் வீரை சோ. பாபு. மெஹபூப் பாஷா சோ.பா குமரேசன், ச. சிலுவை தாசன் மற்றும் மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன், கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் பாவலர் நெல்லை பைந்தமிழ், புறநகர் திமு கழகப் பேச்சாளர் முகமதலி ஜின்னா, ஆரே காலனி கிளை பாண்டு, இளைஞர் அணித் துணை அமைப்பாளர் கவிஞர் வீரமணி
இலக்கிய அணித் துணை அமைப்பாளர் பொய்சர் மூர்த்தி, சீத்தாகேம்ப் கிளை மா.கதிரவன், ஆரே காலனி காங்கிரஸ் கமிடடிப் பேச்சாளர் செல்லக்கண்ணு ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
ஆரே காலனிக் கிளைக் கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் - சேகர் சுப்பையா, கனகராஜ், தமிழ்ச் செல்வன், சுரேஷ் குமார், கட்டமுத்து, முனியன் கோவிந்தராஜ், கிருஷ்ண மூர்த்தி கணேசன், பொன்னுசாமி ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.
கல்யாண் கிளைக் கழக அவைத்தலைவர் க.ஜீவானந்தம், ஜோகேஸ்வரி கிளைக் கழகம் தமிழினநேசன், தானே கிளைச் செயலாளர் அ. பாலமுருகன், முலுண்டு கிளைச் செயலாளர் எஸ்.பெருமாள், வாஷி கிளைக்கழகச் செயலாளர் பழனி, முலுண்ட் கிளை அ.பாலசுப்ரமணியம் மால்வாணி எஸ். பி. செழியன், அம்பர்நாத் முந்தமிழ் தண்டபாணி பிவாண்டி கிளை பொருளாளர் முஸ்டாக் பாய்,
வாஷி கிளைக் கழகத் தோழர்கள், தில்லை. ஆறுமுகம், எம்.இ.முத்து, குலசேகரன், ஜி.பசுபதிநாதன், சயான் கிளைக் கழகச் செயலாளர் சு.சுடலையாண்டி, செம்பூர் கிளைக் கழகச் செயலாளர் நம்பி, ஆழ்வார் சீத்தா கேம்ப் கிளைக்கழகம் ராஜேந்திரன், அம்பர்நாத் கிளைக் கழகச் செயலாளர் ஜஸ்டின், திவா கிளைக்கழகச் செயலாளர் வேல்முருகன், அந்தேரி மேற்கு தி.மு.கழக எம்.பொன்மணி, விஜயகுமார் (கோரெகாவ் கிளை)
பரமசிவம் (செம்பூர்), பாண்டூப் கிளைக் கழக தோழர்கள் செல்லத்துரை, உதயசூரியன், மாரி, அம்பர் நாத் கிளை ஆனந்தரமேஷ் பொன்னையா, ஜோகேஷ்வரி கிளைக்கழக தோழர்கள் ரமேஷ், க.சுந்தர், செய்யதுபாய், அம்பர்நாத் கிளை ராமு, ஊடகவியலாளர் கலியபாபு ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
இறுதியில் ஆரே காலனி கிளைக் கழக முன்னோடி துரைராஜ் நன்றியுரையுடன் விழா நிறைவுறுகிறது.
மும்பையின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் கழக உணர்வாளர்கள் யாவரும் விழாவில் கலந்து மகிழும்படி அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
Good news.