18 Nov 2025 3:03 pmFeatured

பேரவை தலைவர் மா.கருண் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது
இந்தியப் பேனா நண்பர் பேரவை, மும்பை நண்பர்கள் சந்திப்பு 16. 11. 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு பேரவைத் தலைமையகத்தில் பேரவை தலைவர் மா. கருண் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது. பேரவைப் பொதுச் செயலாளர் ஜெ. ஜான் கென்னடி, பொருளாளர் கோ. செல்லத்தம்பி, அறங்காவலர் பா. மலர்விழி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சு. பாஸ்கர், ஜெயந்தி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கருத்துரையாற்றினர்
நவம்பர் மாதம் திருமண நாள் காணும் பேரவைக் குடும்ப உறவுகள் . ஜெயந்தி கிருஷ்ணமூர்த்தி, . லட்சுமி தங்கமுத்து தம்பதியருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்தும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
பேரவை சார்பாக, கடந்த மாதம் மட்டும் ரூபாய் ஒரு லட்சத்து பத்தாயிரம் (1,10,000) மருத்துவ உதவி, கல்வி ஊக்கத்தொகை, கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்குப் பங்களித்த அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்தும், பாராட்டும் பதிவு செய்யப்பட்டது
டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி [01.12.2025] புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில், பேரவைத் தலைவர் தலைமையில் நடைபெறவிருக்கும் புதுக்கோட்டை மாவட்டப் பேரவை உறவு அ. ஜஸ்டின் ஞானதிரவியம் இல்ல திருமண விழா, மணமக்களுக்கும், கலந்து சிறப்பிக்கவிருக்கும் பேரவை உறவுகளுக்கும் வாழ்த்து பதிவு செய்யப்பட்டது.
டிசம்பர் மாதம் ஏழாம் தேதி (07. 12. 2025) பெங்களூருவில். பேரவைத் தலைவர் தலைமையில் தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் பங்கேற்க்கும் நட்புச் சங்கம விழா ஆலோசனைக் கூட்டம் சிறப்புடன் நடைபெறவும், மும்பையிலிருந்து ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கும் பொதுச் செயலாளர், பொருளாளர், அறங்காவலர், செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வின் போது வந்து குடும்ப வாழ்வாதாரம் மற்றும் மருத்துவ உதவி வேண்டிய ஏழை தாய் வாணி துரைராஜ் அவர்களின் மருத்துவ சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டு இரு மாதங்களுக்கான மருந்துகள் வாங்குவதற்கு ரூபாய் 3000/_ பேரவை சார்பாக உடனடியாக வழங்கப்பட்டது. வாழ்வாதார உதவியாக ரூ. 5000/_ பேரவை சார்பாக வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
புதிய புகைப்பட அடையாள அட்டை அறிமுகம்
பேரவை உறுப்பினர்களுக்கு புதிய புகைப்பட அடையாள அட்டை வழங்க அதனுடைய நகல் பேரவை தலைவர் அறிமுகம் செய்தார். அனைவரும் மகிழ்வுடன் ஒப்புதல் அளித்தனர். நவம்பர் மாதம் மிகவும் சிறப்பாக கிளை நண்பர்கள் சந்திப்பு நிகழ்வுகள் நடத்திய கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, கோயம்புத்தூர், புதுடில்லி கிளைகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும் சிறப்பு வாழ்த்துகள் பதிவு செய்யப்பட்டது. த. லட்சுமி நன்றியுரையாற்ற, தேனீர் விருந்துடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.







Users Today : 26
Total Users : 106472
Views Today : 30
Total views : 434199
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37