27 Sep 2021 11:05 pmFeatured

தலைமை : அலிசேக் மீரான்
சிறப்புரை: மு.மு.அப்துல்லா
26-09-2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் மும்பை புறநகர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இணைய வழி நிகழ்வாக நூல் அறிமுக விழா நடைபெற்றது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினின் முதல் நூறு நாட்களில் நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகள், திட்டப்பணிகள், மக்கள் நலம் சார்ந்த நலத்திட்ட உதவிகள் என பல்வேறு தரப்பட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட தரவுகளையும் செய்திக் கோர்வைகளையும் அடிப்படையாகக் கொண்டு அனைத்தையும் தொகுத்து "முதல் 100 நாட்களில் வரலாறு படைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" என்ற தலைப்பிட்டு திராவிட இயக்க இலக்கிய ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் முனைவர் மு.கலைவேந்தன் உருவாக்கிய தொகுப்பு நூலின் அறிமுகம் இணைய வழியில் நிகழ்ந்தேறியது.
மும்பை புறநகர் மாநிலத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் அலிசேக் மீரான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வினை துணைச் செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன் தொடக்கவுரை ஆற்றினார்.
நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா மாநிலங்களவை உறுப்பினர் (திமுக - புதுக்கோட்டை) கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தலைவரது தொய்வில்லாத தொடர்பணிகளையும் அதற்கு வித்திட்ட தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் சிறப்புகளையும் எடுத்து வைத்து உரையாற்றினார்.
நூலின் வடிவமைப்பு மற்றும் அது தாங்கி வந்த செய்திகளை பார்வையாளர்கள் உணரும் வண்ணம் மிகச்சிறப்பாக கருத்துரையாளர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
திராவிட இயக்க எழுத்தாளர் கவிஞர் சண்.அருள் பிரகாசம், மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன், ஜெத்தா தமிழ்ச்சங்கத்தின் தமிழகப் பிரதிநிதி இராம.விஜயன், மும்பை புறநகர் மாநில திமுகஇலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.ரா.தமிழ்நேசன், திருவையாறு ஔவைப் பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் மு.க.முகில்வேந்தன், பொறிஞர் விக்நேஷ் ஆனந்த் ஆகியோர் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.
சிறப்புரைக்குப் பின் திராவிட இயக்க இலக்கிய ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநரும் தொகுப்பாசிரியருமான முனைவர் மு.கலைவேந்தன் தமது ஏற்புரையில் நிறைவாக பல செய்திகளை எடுத்துப் பேசினார். இறுதியில் மும்பைப் புறநகர் திமுக இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன் நன்றியுரை ஆற்றினார்.
மும்பை தி.மு.கழகத்தின் பொறுப்பாளர் கருவூர் பழனிச்சாமி, மும்பை புறநகர் தி மு க அவைத்தலைவர் ஜேம்ஸ் தேவதாசன், பொருளாளர் பி.கிருஷ்ணன், துணைச் செயலாளர் அ.இளங்கோ, இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
முனைவர் முல்லைக்கோ, பேராசிரியர் கமலா முருகன், தமிழ் எழுத்தாளர் மன்ற ஆலோசகர் பாவலர் முகவை திருநாதன், திரைப்பட இயக்குநர் இசைக்கவி நல்ல அறிவழகன், மற்றும் பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.
மும்பை திராவிடர் கழகத்தின் மேனாள் தலைவர் ம.தயாளன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன், மும்பை புறநகர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைக்கழக நிர்வாகிகள் மேஹ்பூப் பாஷா, கு.மாரியப்பன், வீரை.சோ.பாபு, ஜஸ்டின், ஜீவானந்தம், மகேசன்,
இலக்கிய அணித் துணை அமைப்பாளர் ஜைனுல்லாபுதீன், இளைஞர் அணித் துணை அமைப்பாளர் இரா.கணேசன், அண்ணா கதிர்வேலு, முத்தமிழ்த் தண்டபாணி முகமது அலி, முஸ்டாக் அலி, தேவராசன் புலமாடன் அணுசக்திநகர், தோழர் சக்கையா சென்னை, சு.பெருமாள் முலுண்ட் மேற்கு, உ.சங்கரசுப்பு முலுண்ட் கிழக்கு, சஜாதா சுப்ரமணி சென்னை, ப்ரியா, அபிராமி மற்றும் பல்வேறு இயக்க நிர்வாகிகளும் பிற அமைப்பு உணர்வாளர்களும் நிகழ்வில் முழுமையாகக் கலந்து கொண்டு சிறப்புச் சேர்த்தனர்.






Users Today : 10
Total Users : 108823
Views Today : 10
Total views : 436859
Who's Online : 0
Your IP Address : 216.73.216.150