25 Apr 2025 9:33 amFeatured
டோம்பிவிலி தமிழ் மக்கள் சங்கத்தின் வெள்ளிவிழா துவக்க நிகழ்ச்சியாக ”சங்கீத மேகம்” என்கின்ற மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறது
டோம்பிவிலி தமிழ் மக்கள் சங்கம் ஆரம்பித்த 25 ஆண்டை சிறப்பாக கொண்டாட முடிவெடுத்து அதன் துவக்க நிகழ்ச்சியாக ”சங்கீத மேகம்” என்கின்ற மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறது.
27.04.2025 ஞாயிறு அன்று மாலை 4 மணிக்கு செம்பூர் ஃபைன் ஆர்ட் சொசைட்டியின் சிவசாமி ஆடிட்டோரியத்தில் வைத்து நடைபெரும் இந்நிகழ்ச்சியில் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் புகழ் பாடகி ஸ்ரீஷா, பாடகர் சிவா, பாடகி விஜயலக்ஷ்மி, பாடகர் ஞானசேகர் உள்ளிட்ட பாடகர்கள் சென்னையின் புகழ்பெற்ற ஃப்ரெண்ட்ஸ் ஆர்கெஸ்ட்ராவின் இசையில் பாடவுள்ளனர் பிரபல பட்டிமன்ற புகழ் புவனா வெங்கட் நிகழ்வினை தொகுத்து வழங்குகிறார்.
நிகழ்வில் மும்பையின் பிரபலங்கள், தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், டோம்பிவிலி தமிழ் மக்கள் சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் இசை ஆர்வலர்கள் பெருமளவில் கலந்து கொள்கின்றனர்.