02 Jul 2025 12:56 amFeatured
டோம்பிவிலி தன் விஜய் இசை குழுவின் இருபதாவது ஆண்டு விழா தமிழிசை ஜாம்பவான்களான எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா, எஸ் பி பாலசுப்ரமணியன், கவியரசு கண்ணதாசன் ஆகியோரின் பிறந்தநாள் விழா மற்றும் ஆர்.டி.ராஜன் உள்ளிட்ட தன்விஜய் இசைக்குழுவைச் சார்ந்த பாடகர்கள் சிலரின் பிறந்தநாள் விழா உள்ளடக்கிய முப்பெரும் விழா டோம்பிவிலி மேற்கில் உள்ள ஜோந்தலே பள்ளியில் வைத்து (29.06.2025) சிறப்பாக நடைபெற்றது.
அவர்களின் பாடல்களை பாடி இசைக்குழுவினர் அவர்களுக்கு சிறப்பு சேர்த்தனர். கலைஞர் மு கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் ஜூன் மாதத்தில் வருவதாலும் அவரும் திரை இசை பாடல்கள் எழுதி இருப்பதால் அவரது பிறந்த நாளையும் நினைவில் நிறுத்தி அவரது சில பாடல்களும் பாடப்பட்டது
பாடகர்கள் அனந்தராமன், சேஷாஸ்திரி, பாலசுந்தர் ஆர்.டி ராஜன், தீபா, வாணிஸ்ரீ, பவானி, கிருஷ்ணன் கோபால் மற்றும் நண்பர்கள் ஹரி கிருஷ்ணன், வெங்கட் சுப்பிரமணியன், வே,சதானந்தன், சூரிய நாராயணன், கணேசன், கணேஷ், வீரை சோ பாபு மற்றும் பொதுமக்களும் இசை ஆர்வலர்களும் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
தன்விஜய் இசைக் குழுவின் இருபதாவது ஆண்டு விழாவினை முன்னிட்டு பாடகர்களுக்கு நினைவு பரிசு(கேடயம்) வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்
எண்பதுகளில் ஊருக்கொரு இசைக்குழு உண்டு. நெல்லை உமாபதி, பிரபாகர் போன்றோர் நெல்லையின் இசை அடையாளமாகத் திகழ்ந்தனர்.
கரோக்கி வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் மூலப் பாடலின் ஒவ்வொரு இசைக்கருவியின் ஒலியும் சிறிதும் வேறுபடாமல் வாசிக்கும் திறமைசாலிகள் அந்தக் குழுக்களின் பலம்.
79-இல் வெளி வந்த “நினைத்தாலே இனிக்கும்” திரைப்படம் இந்த இசை உணர்வாளர்களை ஊக்குவிக்கும் விதமாக அமைந்தது.
40 வருடங்கள் கடந்து நம் இன்றைய (அறிவியல்) உலகம் நாம் விரும்பும் பாடலை விரும்பும் நேரத்தில் கேட்க முடியும் வகையில் வசதி படைத்துள்ளது.
ஆனாலும் டோம்பிவிலி மக்கள் கலைஞர்களை ஊக்குவிப்பதில் சிறந்து விளங்குபவர்கள்..அறிவியல் ஒருபுறம் இருக்க “கரோக்கி” என்றாலும் நேரில் கைதட்டி பாடுபவர்களின் திறமையை மதிப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.
தன்(லக்ஷ்மி) விஜ(யலக்ஷ்மி)ய் இசைக்குழுவுக்கு வகுப்பறை நிறைந்த வரவேற்ப்பு வியக்க வைத்தது.அதுவும் கடைசிப் பாடல் வரை ரசித்து கைதட்டி வாழ்த்திய அந்த உள்ளங்கள் 1980 காலக் கட்டத்தை நினைவு படுத்தும் நிஜம்.
பாடிய அனைவரும் சிறப்பு.
வாழ்த்துகள்….. வெங்கஎண்பதுகளில் ஊருக்கொரு இசைக்குழு உண்டு. நெல்லை உமாபதி, பிரபாகர் போன்றோர் நெல்லையின் இசை அடையாளமாகத் திகழ்ந்தனர்.
கரோக்கி வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் மூலப் பாடலின் ஒவ்வொரு இசைக்கருவியின் ஒலியும் சிறிதும் வேறுபடாமல் வாசிக்கும் திறமைசாலிகள் அந்தக் குழுக்களின் பலம்.
79-இல் வெளி வந்த “நினைத்தாலே இனிக்கும்” திரைப்படம் இந்த இசை உணர்வாளர்களை ஊக்குவிக்கும் விதமாக அமைந்தது.
40 வருடங்கள் கடந்து நம் இன்றைய (அறிவியல்) உலகம் நாம் விரும்பும் பாடலை விரும்பும் நேரத்தில் கேட்க முடியும் வகையில் வசதி படைத்துள்ளது.
ஆனாலும் டோம்பிவிலி மக்கள் கலைஞர்களை ஊக்குவிப்பதில் சிறந்து விளங்குபவர்கள்..அறிவியல் ஒருபுறம் இருக்க “கரோக்கி” என்றாலும் நேரில் கைதட்டி பாடுபவர்களின் திறமையை மதிப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.
தன்(லக்ஷ்மி) விஜ(யலக்ஷ்மி)ய் இசைக்குழுவுக்கு வகுப்பறை நிறைந்த வரவேற்ப்பு வியக்க வைத்தது.அதுவும் கடைசிப் பாடல் வரை ரசித்து கைதட்டி வாழ்த்திய அந்த உள்ளங்கள் 1980 காலக் கட்டத்தை நினைவு படுத்தும் நிஜம்.
பாடிய அனைவரும் சிறப்பு.
வாழ்த்துகள்….. வெங்கட்