05 Mar 2021 9:22 amFeatured

மும்பை மாநகர் தி.மு.க.சார்பில் இலவச நல உதவிகள் வழங்கும் விழா
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 68 வது பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு இலவச நல உதவிகள்
3.03.2021 புதன்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில் மும்பை தலைமைக் கழகப் பணிமனை தாராவி கலைஞர் மாளிகையில் மும்பை திமுக பொறுப்பாளர் கருவூர் இரா. பழனிச்சாமி அவர்கள் தலைமையில், புறநகர் திமுக செயலாளர் திரு அலிசேக் மீரான், அவைத்தலைவர் திரு ஜேம்ஸ் தேவதாசன் மற்றும் முன்னணி தலைவர்கள் 20 க்கும் மேற்பட்ட ஏழைத் தாய்மார்களுக்கு இலவச சேலை மற்றும் ஐந்து கிலோ அளவிளான அரிசி உள்ளிட்ட வீட்டுச்சாதனப் பொருள்கள் வழங்கி உரையாற்றினர்.
மும்பை திமுக அவைத்தலைவர் திரு வே.ம. உத்தமன், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் திரு ந. வசந்தகுமார், மும்பை திமுக மூத்த தலைவர்கள் திரு என்.வி.சண்முகராசன், பாந்திரா க.மு.மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மும்பை தி.க.தலைவர் திரு பெ.கணேசன், புறநகர் திமுக இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.இரா.தமிழ்நேசன், துணைச் செயலாளர் இடையன் குளம் எஸ். பாஸ்கர், இளைஞர் அணி துணை அமைப்பாளர் க.மூர்த்தி, தாராவிக் கிளை பொருளாளர் அலி முகமது, சாந்தா குருஸ் கிளைச் செயலாளர் சேலம் மா.சீனிவாசன், டோம்பிவிலி கிளைச் செயலாளர் வீரை சோ. பாபு, மும்பை தி.க.பொருளாளர் அ. கண்ணன், தாராவி கிளை தே. ஸ்டீபன் ராஜ், ஆரே காலனி சிவபெருமாள், ஜி.முத்து, எஸ்.ஜீவா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்
அவைத்தலைவர் வே.ம. உத்தமன் அனைவருக்கும் இனிப்பும் இரவு உணவும் வழங்கி சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார். தானே கிளை கே.ஏ.ஜாகிர் உசேன் நன்றி கூறினார்.






Users Today : 6
Total Users : 108819
Views Today : 6
Total views : 436855
Who's Online : 1
Your IP Address : 216.73.216.150