24 Dec 2020 10:43 pmFeatured

தினகரன் பத்திரிகை ஆசிரியரும் சமூக சிந்தனையாளரும் மனிதநேயமிக்க பண்பாளருமான இராபர்ட் அமல்ராஜ் மறைவுச்செய்தி அறிந்து மிகவும் வருந்துகின்றோம் என மும்பை புறநகர் மாநிலத் திராவிட முன்னேற்றக் கழகச் செயலாளர் அலிசேக் மீரான் தெரிவித்துள்ளார்.
மும்பை இலக்கிய உலகில் படைப்பாற்றல் உள்ளோரை மட்டுமல்ல புதிதாக எழுதிக்கொண்டிருந்த பலரது கவிதைகள் கட்டுரைகளை தமது நாளிதழில் பிரசுரித்து மேலும் எழுதத்தூண்டியதோடு இலக்கியப் பயணம் செல்ல பேருதவியாக இருந்தார் என்று சொல்வது மிகையாகாது.
மும்பை புறநகர் மாநிலத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிகழ்வுச் செய்திகளையும் மாற்றுக்கருத்து இல்லாமல் பிரசுரித்ததோடு மேலும் கழக உணர்வாளர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் அமைந்தது என்று அறிந்து மகிழ்கின்ற அளவிற்கு சமூகப் பணியில் ஆர்வம் நிறைந்தவராக இருந்த இராபர்ட் அமல்ராஜ் அவர்களின் இழப்பு பெரிதும் வருந்தத்தக்கது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் மும்பை புறநகர் மாநிலத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என செயலாளர் அலிசேக் மீரான் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






Users Today : 3
Total Users : 117759
Views Today : 3
Total views : 448368
Who's Online : 0
Your IP Address : 216.73.217.150