30 May 2022 10:18 amFeatured

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் கோவிலை புனரமைப்பதாக கூறி ரூ50 லட்சம் வசூலித்து மோசடி செய்ததாக பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது.
இக்கோவில் சிலைகளை கடந்த ஆண்டு மர்ம நபர்கள் உடைத்ததாக எழுந்த புகாரால் பெரும் சர்ச்சை வெடித்தது. அப்போது மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஆனால் மாற்று மதத்தினர்தான் கோவில் சிலைகளை இடித்து தள்ளியதாக இந்து அமைப்பினர் புகார் தெரிவித்தனர்.
அத்துடன் பாஜக ஆதரவாளரும் இளைய பாரதம் யூ டியூபருமான கார்த்திக் கோபிநாத் என்பவர் இணையம் மூலம் சிறுவாச்சூர் கோவிலை புனரமைக்கப் போவதாக கூறி நிதி வசூல் செய்தார்.
கார்த்திக் கோபிநாத் மொத்தம் ரூ50 லட்சம் வசூல் செய்ததாகவும் இத்தொகையில் அவர் மோசடி செய்ததாகவும் புகார் கூறப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை ஆவடி போலீசார் கார்த்திக் கோபிநாத்தை கைது செய்தனர்.
அவரிடம் இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.






Users Today : 76
Total Users : 108812
Views Today : 83
Total views : 436848
Who's Online : 0
Your IP Address : 216.73.216.150