Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுகவினர் போராட்டம் உதயநிதி ஸ்டாலின் கைது.

13 Dec 2019 11:52 amFeatured Posted by: Sadanandan

You already voted!

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுக்க திமுகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போராட்டம் செய்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று முதல்நாள் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு பின் நேற்று இந்த மசோதா சட்டமானது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக   அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது


மத்திய அரசு நிறைவேற்றி உள்ள இந்த மசோதாவை வாபஸ் வாங்க வேண்டும் என்று தமிழகத்தில் திமுக கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகிறது. திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பாக இந்த போராட்டம் நடந்து வருகிறது. முதலில் சென்னையில் சைதாப்பேட்டை பகுதியில் மட்டும் பேரணி நடத்துவதற்கு போலீசார் அனுமதி வழங்கினார்.

ஆனால் திமுகவின் பலர் கூடியதால், அந்த போராட்டம் அண்ணா சாலை வரை வந்தது. திமுகவினர் எல்லோரும் சேர்ந்து சைதாப்பேட்டை முதல் அண்ணா சாலை வரை கண்டன ஆர்ப்பாட்ட போராட்டம்,. திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடந்தது

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் பல இடங்களில் குடியுரிமை சட்ட நகல் எரிப்பு போராட்டமும் நடைபெற்றது. குடியுரிமை சட்ட நகலை கிழித்து உதயநிதி உள்ளிட்டோர் போராட்டம் செய்தனர். கிழிக்கப்பட்ட மசோதாவை திமுகவினர் பின் கொளுத்தினார்கள்.

இதனால் சென்னையில் திமுக போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த போராட்டத்திற்கு மக்கள் பலரும் ஆதரவு அளித்தார்கள். இந்த நிலையில் சட்ட நகலை கிழித்த உதயநிதி உள்ளிட்ட முக்கியமான திமுக உறுப்பினர்கள் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092526
Users Today : 11
Total Users : 92526
Views Today : 19
Total views : 410187
Who's Online : 0
Your IP Address : 3.134.118.95

Archives (முந்தைய செய்திகள்)