Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

தனி நாடு, தனி கொடி-நித்யானந்தா ராக்ஸ்!?

04 Dec 2019 10:39 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

பெங்களூருவை சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா, 2013ஆம் ஆண்டு தனது மூன்று மகள்களையும் பெங்களூரில் நித்யானந்தா நடத்தும் கல்வி நிறுவனத்தில் சேர்த்துள்ளார். ஆனால் அவர்கள் பெங்களூரில் இருந்து அஹமதாபாத்திலுள்ள நித்தியானந்தாவின் நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த செய்தி அறிந்து அதிர்ச்சியான ஷர்மா, தனது மகளை பார்க்க அஹமதாபாத்திற்குச் சென்றுள்ளார். அங்கு அவரை மகள்களை பார்க்க அனுமதிக்கவில்லை. இதையடுத்து ஷர்மா, தனது மகள்களை மீட்டுத் தருமாறு உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையும், குஜராத் மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  பின்பு தொடர் புகார் வந்து கொண்டிருப்பதால் ஹீராபூரில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தை மூட குஜராத் அரசு உத்திரவிட்டுள்ளது.   

இந்த நிலையில்  தென்-அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி எல்லைகள் அற்ற, நாடுகள் அற்ற, வெர்ச்சுவல் இந்து நாட்டைக் கட்டமைக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்

அந்த தீவிற்கு அவர் கைலாசம் என பெயர் வைத்துள்ளதாகவும், தற்போது அவருடன்   குஜராத்தில் புகார் கூறிய ஜனார்த்தன ஷர்மாவின் மூத்த மகளும், சில பெண் சீடர்களும் 30 க்கும் மேற்பட்ட பெண் பக்தர்களும் அங்கு சென்றுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. மேலும் இதற்கென்று தனி 'வெப்சைட்' ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு அந்த தீவை தனி நாடு போல் உருவாக்க நித்தியானந்தா திட்டமிட்டு வருவதாக கூறுகின்றனர். மேலும் அந்த தீவிற்கு தனி கொடி, தனி பாஸ்போர்ட் ஏற்படுத்த போவதாக கூறுகின்றனர்

 இந்த தீவு வாங்கும் அளவுக்கு நித்தியானந்தாவிற்கு பணம் எப்படி வந்தது என்று கேள்வி எழுந்து வருகிறது. ஆனால் இந்த பணம் எல்லாம் உலகம் முழுவதும் இருக்கும் நித்தியானந்தா பக்தர்களிடம் நிதியாக பெற்ற பணம் என்று கூறிவருகின்றனர். மேலும் எத்தனை கோடிக்கு இந்த தீவை வாங்கினார் என்று இதுவரை எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை

நித்யானந்தா.

தனது கனடா நாட்டு சீடரான சாரா லாண்ட்ரியிடம் தனிப்பட்ட முறையில் பேஸ்புக் மெசஞ்சரில் உரையாடிய நித்யானந்தா, வாடிகன் போல குட்டி நாட்டை அமைக்கவுள்ளதாககுறிப்பிட்டுள்ளார்.

நித்யானந்தா கட்டமைக்கும் அந்த நாட்டிற்கு நித்யானந்தா கைலாசா என்று பெயர் வைத்துள்ளார்.

kailaasa.org  என்ற இணையதளத்தில் நித்யானந்தா வெளியிட்டுள்ள தனது நாடு குறித்த முக்கிய அம்சங்கள் வருமாறு:

கைலாசத்தில் பின்பற்றப்படும் அதிகாரப்பூர்வ மொழிகள் ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் தமிழ்.  

10 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. 200 கோடி  இந்துக்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தெற்காசியாவில் 56 அசல் வேத நாடுகளையும், உலகளாவிய இந்து புலம்பெயர்ந்தோரையும் கொண்டுள்ளது.

கைலாசா பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர் பதினொரு பரிமாணங்களிலும், கைலாசா உட்பட பதினான்கு  உலகங்களிலும் இலவசமாக  அனுமதிக்கப்படுவார்கள்.

சுகாதாரத்துறை, மாநிலத் துறை, தொழில்நுட்பத் துறை, அறிவொளி பெற்ற நாகரீகத் துறை, கல்வித் துறை, மனித சேவைகள் துறை, வீட்டுவசதித் துறை, வர்த்தகத் துறை, கருவூலத் துறை என 10  துறைகள் உள்ளன. 

ஒவ்வொரு  நாட்டை போலவே  ஒரு பல்கலைக்கழகம் இருப்பதாகக் இணையதளம் கூறுகிறது.

சொந்த தொலைக்காட்சி சேனல் மற்றும் ஒரு நித்யானந்தா டைம்ஸ் பத்திரிக்கை உள்ளது.

கைலாசா நாட்டில்  உலகளாவிய இலவச சுகாதாரம், இலவச கல்வி, இலவச உணவு மற்றும் கோயில் சார்ந்த வாழ்க்கை முறையின் மறுமலர்ச்சி ஆகியவற்றைக் கொடுக்கிறது.

கைலாசாவின் கொடி நந்தியுடன் நித்தியானந்தாவைக் கொண்டுள்ளது.

கைலாசாவின் தேசிய விலங்கு நந்தி (புனித காளை).

கைலாசாவின் தேசிய பறவை நாகம் - தங்க நிறமுடைய பறவை ஆகும் இரண்டு உயர்த்தப்பட்ட இறக்கைகள், இரண்டு சிவப்பு கண்கள், நான்கு கால்கள் தரையில் தொடும் சிங்கத்தின் வடிவத்தில், நான்கு கால்கள் நகங்களால் மேல்நோக்கி, மற்றும் ஒரு விலங்கு வாலுடன் இருக்கும்.

நாட்டின் சின்னம் பரமசிவன், பராசக்தி, நித்யானந்தா மற்றும் நந்தி.

கைலாசா ஒரு இந்து முதலீடு, ரிசர்வ் வங்கி, கிரிப்டோகரன்சி ஏற்றுக்கொள்ளப்படும், எதிர்காலத்தில் ஒரு 'தர்ம பொருளாதாரம்' ஏற்படுத்தப்படும்.

நாட்டின் தேசிய மலர் தாமரை
கைலாசாவின் தேசிய மரம் ஆலமரம்

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092648
Users Today : 26
Total Users : 92648
Views Today : 31
Total views : 410390
Who's Online : 1
Your IP Address : 3.147.67.195

Archives (முந்தைய செய்திகள்)