15 Sep 2023 8:47 pmFeatured

பொடிநுனியும் சொல்லழகும்
கூர்முனை எழுத்தழகும்….,
கதர் உடையும் பேச்சழகும்
சீர்மிகு சிந்தனையும்….,
முத்தமிழே
என்நாளும் தரணியில்
வென்றிடவே….,
மூ கோட்பாடு
நேர்தூக்கி சமமாவோம்
தமிழினமே…!!!
சில நூல்கள் அறுத்தபோதும்
படி நூல்கள் கொண்டு
வாழ்வியல் தொகுத்தாய்..!!!
தமிழ் வாழ்வில் உலகில்
நிலைக்க மலையாய்
பற்பல கதைகள்
பகுத்தாய் படைத்தாய்
தொகுத்தாய் கொடுத்தாய்…!!!
தமிழே மூச்சென்று
தரணியில் புகழ்சேர்த்த
மங்காத மணிமகுடமே
வாழ்கவே வாழ்கவே…!!!
உம்மை புகழ்வது - எம்
தமிழுக்கு இலக்கணம் ...
உமது பிறப்பைப் போற்றுவது
தமிழரின் தலைக்கனம்..!!!
செந்தமிழ் எங்கும்
நிலைக்க செழிக்க…
திராவிடம் எங்கும்
படைக்க கலைகள் செழிக்க.!
தமிழே வாழ்க….!
தமிழாய் வாழ்க
அறிஞர் அண்ணாவைப்போல்
இன்றும் என்றும்
வையகம் உள்ள வரையில்…!!!!
- அன்புடன் ஆசிரியர் முத்துலிங்கம் பிரபு






Users Today : 76
Total Users : 108812
Views Today : 83
Total views : 436848
Who's Online : 0
Your IP Address : 216.73.216.150