Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

பேரறிஞர் அண்ணாவின்  57 ஆவது நினைவேந்தல் பொதுக்கூட்டம்-மும்பை புறநகர் மாநில திமுக சார்பில்

02 Feb 2026 11:21 pmFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Pictures anna memorial day2

அறிவுலக ஆசான், தென்னாட்டு பெர்னாட்ஷா, இந்நாட்டு இங்கர்சால்
தமிழ்நாடு என்று தன் தாய்க்கு பெயர் சூட்டிய தனயன்.
* 30 வயதில் நீதி கட்சியின் பொதுச் செயலாளர்.
* 40 வயதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர்.
* தன் எழுத்தால்,தன் பேச்சால் , தன் திறமையால் இளைஞர்களை இவரை போல ஈர்த்த அரசியல் தலைவர் இந்தியாவில் யாரும் இல்லை.

தமிழகத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினேன்
இரு மொழிக் கொள்கையை அமுல்படுத்தினேன். 
சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தேன். 
எனக்குப் பின்னர் வரும் ஆட்சியாளர்கள் இதை மாற்ற முயன்றால்
மக்கள் போராடுவார்கள் என்கின்ற அச்சம் அவர்களுக்கு ஏற்படும்.
அந்த அச்சம் இருக்கும் வரை இந்த தமிழ்நாட்டை அண்ணாதுரை தான் ஆள்கிறான்.

என்று சொன்ன பெருமகனார் 1969 ஆண்டு பிப்ரவரி 3ம் நாள் இம்மண்ணை விட்டு மறைந்தார்

அவரின் 57 ஆவது நினைவேந்தல் கூட்டம் மும்பை புறநகர் மாநில தி.மு.கழகம் சார்பில் வருகின்ற 03-02-2026 செவ்வாய்க்கிழமை மாலை சரியாக 6:00 மணியளவில் பாண்டுப் பிரைட் மேனிலைப்பள்ளியில் வைத்து நடைபெற உள்ளது

            மும்பை புறநகர் மாநில திராவிட முன்னேற்றக் கழகப் பொறுப்புக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் தேவதாசன் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் புறநகர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்புக் குழு உறுப்பினர் முனைவர் வதிலை பிரதாபன் துவக்க உரையாற்றுகிறார்

நினைவேந்தல் சிறப்புரை:

          மும்பை புறநகர் திராவிட முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர் அலிஷேக் மீரான்,,  மும்பை திராவிடர் கழகத்தலைவர் பெ.கணேசன் மற்றும் இந்தியப் பேனா நண்பர் பேரவைத் தலைவர் மா.கருண் ஆகியோர் நினைவேந்தல் சிறப்புரையாற்றுகிறார்கள்.. 

         நிகழ்வினை திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி அமைப்பாளர் ந. வசந்தகுமார் தொகுத்து வழங்குகிறார்.

நிகழ்வேந்தலுரை:

          பொறுப்புக் குழு உறுப்பினர்கள் பி கிருஷ்ணன், அ. இளங்கோ, வே சதானந்தன், எஸ்.பி குமரேசன், வீரை சோ பாபு, சா சி தாசன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ. ரவிச்சந்திரன்  ஆகியோர் நினைவேந்தலுரை ஆற்றுகிறார்கள்.

மும்பை புறநகர் திமுகவின் அனைத்து கிளைக் கழக நிர்வாகிகளும். உறுப்பினர்களும் கிளைக்கழக நிர்வாகிகளும் இயக்க உணர்வாளர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு பேரறிஞருக்குப் புகழஞ்சலி செலுத்துகின்றனர்

You already voted!
5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Rajendran.V
Rajendran.V
1 month ago

விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் ஐயா.

Jheeva
Jheeva
1 month ago

Prompt message

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

111449
Users Today : 4
Total Users : 111449
Views Today : 4
Total views : 439900
Who's Online : 0
Your IP Address : 216.73.216.190

Archives (முந்தைய செய்திகள்)