29 Jun 2022 2:24 amFeatured

நடிகை மீனா சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல நடிகர்களுடன் நடித்த முன்னணி நடிகையாக வலம் வந்தவர்
மீனாவுக்கு கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் கம்ப்யூட்டர் என்ஜினீயரான தொழிலதிபர் வித்யாசாகருடன் திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர் நடிகர் விஜயின் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
மீனாவுக்கு தனது கணருடன் பெங்களூரில் வசித்து வந்தார். மேலும் சென்னையிலும் குடும்பத்துடன் அவர் தங்குவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு மீனா மற்றும் அவரது கணவர் வித்யாசாகர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
புறா எச்சம் கலந்த காற்றால் பாதிப்பா?
பெங்களூரில் அவர்கள் வசித்த வந்த வீட்டுக்கு அருகே நிறையப் புறாக்கள் வளர்க்கப்படும் இடம் இருந்ததாகவும், அந்த புறாக்களின் எச்சம் கலந்த காற்றினை சுவாசித்ததால் வித்யாசாகர் கடந்த சில ஆண்டுகளாக நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அண்மையில் மீனாவின் குடும்ப உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இந்த தொற்றிலிருந்து மீண்ட வித்யாசாகருக்கு நுரையீரல் தொற்று தீவிரமடைந்துள்ளது.
இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சில வாரங்களுக்கு முன்பு வித்யாசாகருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், பொருந்தக்கூடிய நுரையீரல் கிடைக்காததால் அறுவை சிகிச்சை நடைபெறாமல் இருந்துள்ளது. இந்நிலையில், அவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று(28.06.2022) அவர் காலமானார்.
நடிகை மீனாவின் கணவர் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.






Users Today : 76
Total Users : 108812
Views Today : 83
Total views : 436848
Who's Online : 0
Your IP Address : 216.73.216.150