24 Sep 2019 7:19 pmFeatured

பாகிஸ்தான் எல்லையில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அளவுகோலில் 6.3- ரிக்டராக பதிவாகியுள்ளது. மாலை 4.30 மணி அளவில் பாகிஸ்தானில் மிர்பூர் நகரத்தை மையம் கொண்டு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் இஸ்லாமாபாத், பெஷாவர், டிராவல்பிண்டி, லாகூர் உள்ளிட்ட நகரங்களில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சியால்கோட், சர்கோதா, மன்சேரா, குஜ்ரத், சித்ரல், மலாகண்ட், ,முல்தான் உள்ளிட்ட பாகிஸ்தான் நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

டெல்லியிலும் உணரப்பட்டது
ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், டெல்லி, உள்ளிட்ட மாநிலங்களில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. டெல்லியில் நாடாளுமன்றம் அமைந்துள்ள இடம், பத்திரிக்கையாளர் மன்றம் அருகேயும் நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் அடுக்ககங்களில் இருந்த மக்கள் அச்சத்தில் வெளியேறினர்.
நிலநடுக்கம் 10 கி.மீ.ஆழத்தில் மையம் கொண்டு இருந்ததால் பல சாலைகள் பிளந்து சேதமாகின. பிளந்த சாலைகளின் நடுவில் கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி கொண்டன. நிலநடுக்கத்தால் பாகிஸ்தான் நகரங்களில் பல கட்டிடங்கள் சேதமாகியுள்ளன. வீடுகளை விட்டு வெளியேறி மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உயிர்சேதம்
இதனிடையே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலநடுக்கத்தால் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






Users Today : 15
Total Users : 106596
Views Today : 17
Total views : 434342
Who's Online : 0
Your IP Address : 216.73.216.1