11 Sep 2019 8:54 pmFeatured

மும்பையில் கோரேகான் தமிழ் மாநகராட்சி பள்ளி எண் 2ல் தலைமை ஆசிரியராக பணியாற்றிவரும் பொற்செல்வி கருணாநிதி அவர்கள் கடந்த ஆண்டு மும்பை மேயரின் நல்லாசிரியர் விருதினை பெற்றமைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொற்செல்வி கருணாநிதிக்கு வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார்.
அதனை முன்னிட்டு சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை பொற்செல்வி குடும்பத்துடன் மரியாதை நிமித்தம் சந்தித்து தனது நன்றியினை தெரிவித்தார்.
பொற்செல்வி, மு.க.ஸ்டாலின் அவர்களால் முதல் முறையாக மும்பையில் திமுக இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்டிருந்த கருணாநிதி அவர்களின் மனைவியும், முன்னாள் திமுக பிரமுகர் டாக்டர்.கலைச்செல்வன் அவர்களின் மகளும், மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் துணைச் செயலாளருமாவார்
பொற்செல்வி கருணாநிதி அவர்கள் ”மும்பையில் நல்லாசிரியர் விருது பெற்ற என்னை திமுக தலைவர் தளபதி அவர்கள் தனது ஓய்வில்லா அரசியல் பணிகளுக்கு இடையேயும் மறக்காமல் வாழ்த்தியதற்கு நன்றி தெரிவிக்கவே மரியாதை நிமித்தம் குடும்பத்துடன் சென்று சந்தித்தோம்” என்று நெகிழ்ச்சியுடன் தென்னரசுக்கு தெரிவித்தார்.
(படம் இடமிருந்து வலம்: தணிகேஷ் கருணாநிதி, பொற்செல்வி கருணாநிதி, நீத்துமித்ரா மயிலன் கருணாநிதி, சரண்யாதர்சினி கருணாநிதி, சுதா மயிலன்,கிருத்திகா மயிலன் மற்றும் மயிலன்)






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37