18 Aug 2019 1:18 amFeatured


மனித உரிமை அமைப்பின் சார்பில் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனித உரிமை கல்வி நூல் வெளியீடு மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை திரிசூலத்தில் நடைபெற்றது
இந்நிகழ்வுக்கு அமைப்பின் தலைவர் டாக்டர். ஏ. ஜோசப் தலைமை தாங்கினார், மேனாள் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் ஐ.ஏ.எஸ்
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற தலைவர் முனைவர் வதிலை பிரதாபன்,தமிழ் வளர்ச்சி கழகத்தின் விரிவுரையாளர் முனைவர் அர்த்தநாரீஸ்வரர்,
நமது போலீஸ் பத்திரிக்கை ஆசிரியர் ராஸ்மிருமி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.முனைவர் அமலோர் பவராணி வரவேற்புரையாற்றி நிகழ்வினை தொகுத்தும் வழங்கினார்.
மும்பை தமிழருக்கு தமிழ்த் தாய் விருது
சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வில் மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் அவர்களுக்கு “தமிழ்த்தாய்” விருது அளித்து சிறப்பிக்கப்பட்டார். முனைவர் வதிலை பிரதாபன் ஏற்கனவே தமிழய்யா கல்வி கழகம் மற்றும் தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டு துறை வழங்கிய ’தமிழ் அன்னை’ விருது மற்றும் பல்வேறு விருதுகளை தனது படைப்புகளுக்காக பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தென்னரசு மாத இதழின் சிறப்பு ஆசிரியர் என்பதில் தென்னரசு மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது

விழாவினை முன்னிட்டு திரிசூலம் கிராமத்தைச்சார்ந்த 50 ஏழை பெண்களுக்கு சேலையும் 50 ஆண்களுக்கு டி-சர்ட்டுகளும் இலவசமாக வழங்கினர்.






Users Today : 8
Total Users : 106618
Views Today : 8
Total views : 434367
Who's Online : 0
Your IP Address : 216.73.216.1