08 Aug 2019 8:36 pmFeatured

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல் கூட்டம் மும்பை தி.மு.க. தலைமை பணிமனை, தாராவி கலைஞர் மாளிகையில் 7.08.2019 புதன்கிழமை மாலை 7.00 மணியளவில் பொறுப்பாளர் கருவூர் இரா. பழனிச்சாமி தலைமையில், அவைத் தலைவர் வே.ம.உத்தமன் முன்னிலையில் நடைபெற்றது.
காங்கிரசின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏக்நாத் காய்க்வாட் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலையிட்டு சிறப்புரையாற்றினார். மராத்திய மாநில முன்னாள் அமைச்சரும், தாராவி தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான வர்ஷாதாய் கெய்க்வாட் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ. இரவிச்சந்திரன், பாந்திரா கிளை செயலாளர் க.மு.மாணிக்கம், இளைஞரணி துணை அமைப்பாளர் க. மூர்த்தி, வக்கோலா சேலம் மா. சீனிவாசன் ஆகியோர் புகழுரை வழங்கினர்.
பணகுடி ம.சண்முகவேல், சாந்திவிலி தாலுகா காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவர் அருண்குமார், தாராவி கிளை பொருளாளர் எம். அலி முகமது, அலுவலகச் செயலர் க. இராசன், தோ.செ. கருணாநிதி வழக்கறிஞர் எம்.இ. ஜோ, எஸ், சிற்றரசன், ஸ்டீபன் மார்க், மதன்ராஜா மதி, களந்தை கே.பி. சண்முகவேல், மூ.முனீஸ்வரன், அ. கண்ணன், வழக்கறிஞர் பொ. குருசாமி,
சி. நல்லரசன், ஆரே காலனி வி. கே. சிவா, உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர்
திரு என்.,வி. சண்முகராசன் இறுதியில் நன்றி கூறினார்.






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37