29 Jul 2019 2:21 amFeatured

இதுவரை தமிழகம், மற்றும் புதுவையில் மட்டும் முரசொலி அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வந்த பாவேந்தர் பாரதிதாசனார் பாடல் ஒப்புவித்தல் போட்டி இவ்வாண்டு முதல் மும்பையிலும் நடைபெற உள்ளது.
இவ்வாண்டு பள்ளி மாணவர்களுக்கும் அடுத்த ஆண்டு முதல் பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் தனித்தனியாக நடைபெறும்.
ஒவ்வொரு பிரிவிற்கும் எட்டு பரிசுகள் முரசொலி அறக்கட்டளை சார்பாக வழங்கப்படும்.
முதல் பரிசு உரூபாய்- 5000/-
இரண்டாம் பரிசு உரூபாய்- 3000/-
மூன்றாம் பரிசு 2000/-
ஐந்து ஆறுதல் பரிசுகள் உரூபாய்- 1500/-
இது மட்டுமின்றி முதல் பரிசு பெறுபவர் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு மேலும் பரிசுகள் பெறவும் வாய்ப்புள்ளது. பரிசு பெறுபவர் சென்னை சென்று வருவதற்கான புகைவண்டி கட்டணத்தையும் முரசொலி அறக்கட்டளை ஏற்றுக் கொள்ளும்.
மாநில அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு
முதல் பரிசு உரூபாய்- 15000/-
இரண்டாவது பரிசு உரூபாய்- 10000/-
மூன்றாவது பரிசு உரூபாய் 5000/-
ஐந்து ஆறுதல் பரிசுகள் உரூபாய் -3000/-
மும்பையில் நடைபெறும் போட்டிகளை மும்பை புறநகர் திமுகழகம் ஒருங்கிணைத்து நடத்துகிறது.
முதல் நிலை போட்டிகள் வருகின்ற 18.08.2018 ஞாயிறு அன்று பகல் 11.00 மணிக்கு பாண்டுப் பிரைட் உயர்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெறும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தங்களது பள்ளியின் விவரத்துடன் மும்பை புறநகர் மாநில திமுக நிர்வாகிகளிடம் பதிவு செய்து கொள்ளும்படி மும்பை புறநகர் திமுக கேட்டுக்கொள்கிறது






Users Today : 35
Total Users : 120477
Views Today : 35
Total views : 451970
Who's Online : 0
Your IP Address : 216.73.217.141