10 Nov 2026 12:08 pmEditorial

-வே.சதானந்தன்
வணக்கம் மன்னரே!
வணக்கம் பொன்னரே!

வாரும்.. வாரும் நீ… ண்டநாட்களுக்குப் பின்னர் அவைக்கு வந்துள்ளீர்!?
என்ன செய்ய மன்னரே? மன்னராட்சி முடிவுக்கு வந்தப்பின் மூன்றாம் தலைமுறை மன்னராக நீங்களும் அமைச்சராக நானும் உள்ளோம்.
எனக்கும் எனது குடும்பத்துக்கும் வயிறு என்று ஒன்று உள்ளதே!?
வருவாய் ஈட்டினால்தானே வாழமுடியும்!?
நமக்கும் பசிக்கும்ல… சோறுதானே முக்கியம் என்கிறீர்.. அப்படித்தானே பொன்னரே !? என்று கலகலவென சிரிக்கிறார் மன்னர்.

பொன்னரும் சிரித்தபடி ஆமாம் மன்னரே சங்கம் முக்கியமா ? சோறு முக்கியமா ? என்று கேட்டதற்கு ”சோறுதான் முக்கியம், எனக்கு பசிக்கும்ல” என்று சொல்லி வைரலான அந்த பையன் இன்று வாலிபனாகியிருப்பான் ஆனாலும் உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி மன்னா என்று பாராட்டியபடியே பொன்னரும் சிரித்தார்.
எல்லாம் ஞாபகம் இருக்கவேண்டும் பொன்னரே! என் ஞாபகம் சரியென்றால் தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்து இன்றோடு சரியாக 6 மாதம் ஆகிறதல்லவா….?
ஆம் மன்னா 2026 மே 10ம் தேதி புதிய ஆட்சி பொறுப்பேற்றது, இன்றோடு சரியாக 6 மாதங்கள் ஆகிறது மன்னரே !
அதைப்பற்றி எப்படியான செய்திகளை கொண்டுவந்துள்ளீர் பொன்னரே ஆவலாக இருக்கிறோம் சொல்லும்… நன்றாக விவரியும்.
என்னத்த சொல்ல மன்னரே…..
என்ன பொன்னரே இப்படி சலித்துக்கொள்கிறீர்… உமது பெயரன் வீட்டிலுள்ள அனைவரிடமும் அழுது அடம் பிடித்தான் என்றும், உமது மகளும் அண்ணனுக்குத்தான் ஓட்டுப்போடவேண்டும் என்று சொன்னாள் என்று நீங்கள் அனைவருமே விஜய்க்குத்தானே ஓட்டு போட்டீர்கள். அப்புறம் என்ன சலிப்பு…?
உமது மகளுக்கும் கட்சியில் நல்ல பொறுப்பு கிடைத்திருக்குமே!?
வேண்டாம் மன்னா வேண்டாம் நொந்த புண்ணில் நுகத்தடி கொண்டு இடிக்காதீர்கள் மன்னரே என்றார் சலித்தபடியே…
சரி சரி பொன்னரே உமது ஃபீலிங்ஸ் புரிகிறது… கொஞ்சம் ஆசுவாச படுத்திக்கொள்ளும் பின்னர் அரசியலுக்கு வருவோம்… என்ற மன்னர்
சமீபத்தில் வந்த படங்களை பற்றி சொல்லும் என்றார்…
எனது கணக்குப்படி 10க்கு சொல்வதானால் பக்தாவுக்கு 8.9 ம் ஜெய்லர்-2 க்கு 8.2ம், மண்டாடிக்கு 8 புள்ளியும் கொடுக்கலாம் மற்றப் படங்களை வரிசைப்படுத்தினால் டோரத்தி, விஸ்வநாத் & சன்ஸ், கருப்பு, சர்தார்-2 என சொல்லலாம் என்றார் பொன்னர்.
என்ன பொன்னரே இப்படி சொல்கிறீர்?! ஜெய்லர் படம் நல்ல வசூல் என கேள்விபட்டேனே
உண்மைதான் மன்னரே ரஜினி நடிப்பில் அதிரடி திரைப்படம் 700 கோடிக்கும் மேல் வசூலித்து மாபெரும் சாதனையை படைத்துள்ளது.
அப்புறம் எப்படி பொன்னரே விஜய் சேதுபதி படத்திற்கு அதிக புள்ளி கொடுத்தீர் ?
அதாவது மன்னரே 'பத்தா' திரைப்படம் வழக்கமான ரத்தமும் சதையுமான கேங்ஸ்டர் படம் அல்ல. இது வன்முறை இல்லாத, மனித நேயத்தையும், ரவுடியின் பலவீனத்தையும், குழந்தைத்தனத்தையும் பேசும் ஒரு அரிய மற்றும் அழகான படைப்பு. குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு தரமான சூப்பர் ஹிட் திரைப்படம் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் சபரியாக நடித்துள்ள மாஸ்டர் சாய் பிருத்விராஜ் இவர்களின் நடிப்பு சிறப்பு இன்னும் சொல்வதானால் மாஸ்டர் சாய் பிருத்விராஜ்க்கு விருதுகூட கிடைக்கவாய்ப்புள்ளது
என்ன சொல்கிறீர் பொன்னரே அப்படியானால் அந்த அரசியல்வாதிகளை சாட்டையால் அடித்த அந்த அதிரடி அரசியல் படம் !?
மன்னா கடைசியில் ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிட்டீர்களே என்று சிரித்த பொன்னர். மன்னரே காமடியாக மட்டுமே போயிருக்கவேண்டிய ”பத்தா” பார்வையாளர்களை சீட் முனைக்கே கொண்டுபோகும் அளவுக்கு சீரியசாகவும்.,. சீரியசாக நினைத்த ஜனநாயகன் காமடியாகவும் முடிந்துள்ளது. அதாவது மேற்கண்ட படங்களின் வரிசையில் 10க்கு 5.2 புள்ளி தரத்தில் ஜனநாயகன் கடைசி இடத்தில் சொல்லலாம் என்றார் பொன்னர்.
என்ன பொன்னரே அப்படி சொல்கிறீர்!?
ஆம் மன்னா ஜனநாயகன் திரைப்படம் 2023-இல் தெலுங்கில் வெளியான 'பகவந்த் கேசரி' (Bhagavanth Kesari) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் (மறுஆக்கம்) ஆகும் 'பகவந்த் கேசரி'யில் முன்னணி கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா என்கின்ற பாலய்யா நடித்திருந்தார் அந்தப்படம் அவருக்காகவே எடுத்தது அப்படி ஒரு படத்தில் அவர் நடித்தால் மட்டுமே எடுபடும் அவர் பாணியில் படத்தை எவர் எடுத்தாலும் நடித்தாலும் அது காமடியாகவே மாறும்
சரி பொன்னரே தேநீர் அருந்தி விட்டு இந்திய கபடி, தமிழ்நாட்டு வீராங்கணை கார்த்திகா மற்றும் தமிழ்நாடு அரசியல் பற்றியும் பேசுவோம் நீண்டநாட்களுக்கு பிறகு வந்துள்ளீர் இன்று மதிய உணவும், இரவு உணவும் உமக்கு நம் அரண்மனையிலேயே என்று சிரித்த மன்னர் அவசரம் ஒன்றுமில்லையே பொன்னரே?!
அப்படி ஒன்றுமில்லை மன்னா தேநீர் இடைவெளிக்குப்பின் தொடருவோம்….






Users Today : 7
Total Users : 126598
Views Today : 7
Total views : 459752
Who's Online : 0
Your IP Address : 216.73.216.145