19 Mar 2026 11:31 pmFeatured

மும்பை மும்பையின் பல்வேறு தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து, மலேசியத் தமிழர்களுடன் ஓர் இலக்கியச் சங்கமம் என்கின்ற பெரும் விழா 20 மார்ச் 2026 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை நவிமும்பை தமிழ்ச் சங்க வளாகத்தில் வைத்து நடைபேறவுள்ளது.
மலேசியாவிலிருந்து வருகை தரும் தமிழ் எழுத்தாளர்களுக்கு சிறப்பு செய்யும் விதமாக இந்த விழாவினை ஏற்பாடு செய்துள்ளனர்
மலேசிய எழுத்தாளர் இராஜேந்திரன் பெருமாள் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், மலேசியாவிலிருந்து வருகை தரும் 15-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களுக்குச் சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது.
அத்துடன் இவ்விழாவில் சில நூல்களும் வெளியிடப்பட உள்ளன.
மும்பை மற்றும் மலேசியப் படைப்பாளர்களுக்கிடையிலான இலக்கியப் பரிமாற்றம் மற்றும் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
மும்பையின் பல்வேறு அமைப்புகள் இணைந்து எழுத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கவுள்ளனர்
தமிழால் இணைந்து, தமிழோடு உயர்வோம் என்ற நோக்கில் நடைபெறும் இந்தச் சிறப்புமிக்க இலக்கிய நிகழ்வில் மும்பை வாழ் தமிழ் மக்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு விழாக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.






Users Today : 24
Total Users : 120355
Views Today : 30
Total views : 451835
Who's Online : 0
Your IP Address : 216.73.217.141
Very memorable event.Vazthukkal