09 Aug 2025 4:35 pmFeatured
தமிழரின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட முதுபெரும் தமிழறிஞரும் மேனாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு பாண்டூப் பிரைட் மேனிலைப்பள்ளியில் வைத்து புறநகர மாநிலத் தி.மு கழகப் பொறுப்புக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் தேவதாசன் தலைமையில் 07-08-2025 வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெற்றது.
மாநில திராவிட முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர் அலிசேக் மீரான் நினைவேந்தல் நிகழ்வுச் சிறப்புரை ஆற்றினார்.
பொறுப்புக் குழு உறுப்பினர்கள் பி.கிருஷ்ணன், வதிலை பிரதாபன், அ.இளங்கோ, ந.வசந்தகுமார், வே.சதானந்தன், ஜைனுல்லாபுதீன், வீரை சோ பாபு, மெஹபூப் பாஷா, சிவக்குமார் சுந்தர்ராஜ், சிலுவை தாசன் மற்றும் கழகப் பேச்சாளர் ப.அ.முகமதலி ஜின்னா ஆகியோர் நினைவேந்தலுரை ஆற்றினர்.
Dr.இ.குமரேசன், கோவிந்தராஜ், முஸ்தாக் அலி, ராஜா, பொ.பேலஸ்துரை, முத்தமிழ் தண்டபாணி, ச.பழனி, எம்.ஈ.முத்து, சேர்மன்துரை, அப்துல் லத்தீப், , எம்.உதயசூரியன், பி.ஆறுமுகம், வி.தில்லை, கே.கலியபாபு, த.வெங்கடேசன், எஸ்.பெருமாள், து.செல்லததுரை, அ.பாலமுருகன், ஏ.பாண்டு, ப.சங்கரசுப்பு, வி.கே.சிவா, கே.டி.ராமு அம்பர்நாத் ஆகியோர் கலந்து கொண்டு கலைஞரின் திருவுருவப் படத்திற்கு புகழஞ்சலி செலுத்தினார்கள்
ஆரே மில்க் காலனி கிளைக் கழகம் சார்பாக
முன்னதாக மும்பை புறநகர் மாநில திமுகழக ஆரே மில்க் காலனி கிளைக் கழகம் சார்பாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாநிலக் கழகப் பொறுப்புக் குழு உறுப்பினர் சிவக்குமார் சுந்தர்ராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார் மாநிலப் பொறுப்பாளர் அலிஷேக் மீரான் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் .
மாநிலக் கழகப் பொறுப்புக்குழு உறுப்பினர் அ.இளங்கோ முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மூத்த திமுக பிரமுகர் கு .தர்மலிங்கம், அ.கனகராஜ், துரை செல்லையா, மு. கோவிந்தராஜ், வி.கே.சிவா, இளைஞர் அணி செ.ரமேஷ், பெ.சதாசிவம், மு.ராதாகிருஷ்ணன், மகளிர் அணிையைச் சேர்ந்த ம.கனிமொழி, விடுதலைச் சிறுத்தை வேலு பழனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இறுதியில் மாநில தி.மு கழகப் பொறுப்பாளர் அலிஷேக் மீரான் நினைவேந்தல் சிறப்புரை ஆற்றினார்.
மற்றும் கிளைக்கழக உணர்வாளர்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டு முத்தமிழறிஞர் கலைஞருக்கு நினைவேந்தல் செய்தனர்..
ஜெரிமெரி குர்லா திமுக கிளை சார்பாக முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றது
ஜோகேஷ்வரி கிளை கழகத்தின் சார்பில் நடைபெற்ற நினைவேந்தல்