14 May 2025 10:15 pmFeatured
13-05-2025 மாலை 6 மணியளவில் நடைபெற்ற முதல் பொறுப்புக் குழுக் கூட்டம் பொறுப்பாளர் அலிசேக் மீரான் தலைமையில் பாண்டூப் பிரைட் மேனிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது.
பொறுப்புக் குழு உறுப்பினர்களாக தலைமைக் கழகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள பி.கிருஷ்ணன், வதிலை பிரதாபன், ஜேம்ஸ் தேவதாசன், இளங்கோ அப்பாத்துரை, வே.சதானந்தன், வீரை.சோ.பாபு, மெஹபூப் பாஷா, ஜெயினுல்லாபுதீன், சிவக்குமார் சுந்தர்ராஜ், சோ.பா.குமரேசன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
மும்பை மாநில தி.மு.கழக இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார் முன்னிலை வகித்தார்.
தி.மு.கழகத் தலைமைக் கழகத்தால் கடந்த 08-05-2025 அன்று மும்பை புறநகர் மாநில கழகப் பொறுப்புக் குழு அறிவிக்கப்பட்டது.
முதல் பொறுப்புக்குழுக் கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மும்பை புறநகர் திராவிட முன்னேற்ற கழகம் மேலும் செவ்வனே இயங்கிட பன்னிரண்டு பேர்களைக் கொண்ட பொறுப்புக் குழுவினை நியமித்த கழகத் தலைவர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்ளப்பட்டது.
பொள்ளாச்சி குற்ற செயலில் ஈடுபட்டவர்களுக்கு சட்டப்பூர்வமாக உரிய தண்டனை பெற்றுத் தந்த தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களுக்கு இந்த பொறுப்புக் குழு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது
ஆளுநரின் அத்துமீறிய அதிகார வரம்பைக் கட்டுப்படுத்தி முறைப்படுத்தும் விதமாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடி உரிய நீதியை பெற்றுத்தந்த தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களை இந்த பொறுப்புக்குழு நெஞ்சாரப் பாராட்டுகிறது
மத்திய அரசு நிதி உதவி தரவில்லை என்றாலும் இரு மொழிக் கொள்கையை கடைப்பிடிப்பதில் தமிழ்நாடு உறுதியாக இருப்பதைக் குறித்து இந்த பொறுப்புக்குழு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது
மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு குறைந்த அளவிலான ரயில்களே இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல அவதிப்படுகின்றனர். எனவே, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து தினசரி ரயில்கள் விட தமிழ்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து உரிய முறையில் ரயில்களை விட ஆவண செய்திட இந்த பொறுப்புக் குழு வேண்டுகிறது.
போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அத்தோடு கழக வளர்ச்சிக்காக கிளைக் கழகங்களைக் கட்டமைப்பது மற்றும் கூடுதலாக உறுப்பினர்களை கிளைகளில் இணைப்பது போன்ற கருத்துகளும் பகிரப்பட்டன.
வாழ்த்துக்கள் அய்யா. மும்பையில் திராவிடக் கொள்கை மலரட்டும்,மணக்கட்டும். தங்களின் சமூகச் சிந்தனை வளர வாழ்த்துக்கள் அய்யா.
அருமை, அய்யா. தங்களைப் போன்ற சிந்தனையாளர்களுடன் திராவிடக் கொள்கைகள் மும்பையில் மணக்கும். வாழ்த்துக்கள், உங்கள் சமூகச் சித்தனைக்கு.
சிறப்பான செய்திகளை தென்னரசு தொடர்ந்து வழங்கி வருகிறது வாழ்த்துக்கள்