19 Sep 2022 8:46 pmFeatured

மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் மற்றும் அமெரிக்க வலைத்தமிழ் தொலைக்காட்சி இணைந்து நடத்திய பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் கருத்தரங்கம் 18-09-2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் இணையம் வழியாக நடைபெற்றது.
தலைமை
நிகழ்வினை மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் ஆலோசகர் இலக்கியச்செல்வர் வெ.பாலு தலைமையேற்று நடத்தினார்.
மன்ற ஆலோசகரும் பாபா அணுமின் நிலைய அறிவியலாளருமான ந.கனகசபை வரவேற்புரை வழங்கினார்.
தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் பாவரசு வதிலை பிரதாபன் தொடக்கவுரை ஆற்றினார் முன்னதாக பாவலர் கார்முகில் பழனிசாமி மொழி வாழ்த்தும் நிறைவாக நிர்வாகக்குழு செயலாளர் வே.சதானந்தன் நன்றியுரையும் ஆற்றினார்கள்.
கருத்தரங்கத் தலைமை:
தமிழ் வளர்ச்சித்துறை, சென்னை இயக்குநரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநருமான (கூடுதல் பொறுப்பு) முனைவர் ந .அருள் கருத்தரங்கத் தலைமையேற்று நடத்தினார்.
கருத்தரங்கத் தலைப்புகள்:
அண்ணா வளர்த்த அறநெறி அரசியல் என்ற தலைப்பில் தமிழ் எழுத்தாளர் மன்ற ஆலோசகர் முனைவர் கார்முகில் பழனிச்சாமி
அண்ணா ஒரு கலங்கரை விளக்கம் என்ற தலைப்பில் தமிழ் எழுத்தாளர் மன்ற கருத்துரைஞர் பேராசிரியர் முனைவர் ச.பிரியா
அண்ணா காட்டிய இலக்கிய நெறி என்ற தலைப்பில் தமிழ் எழுத்தாளர் மன்றம் முன்னணிப் பேச்சாளர் நற்றமிழ் நாவரசி பிரவினா சேகர்
அண்ணா எனும் பேராளுமை என்ற தலைப்பில் எழுத்தாளர் மன்றம் முன்னணிப் பேச்சாளர் நற்றமிழ் நாவலர் செல்வி ராஜ் உரையாற்றினார்கள்.
தமிழ் எழுத்தாளர் மன்றக் காப்பாளரும்,சாகித்ய அகடெமி புதுடில்லி மேனாள் இணைச்செயலாளருமான முனைவர் அ.சு.இளங்கோவன் வாழ்த்துரை வழங்கினார்.
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றப் புரவலர்கள் அலிசேக் மீரான் கவிஞர் அரியக்குடி மெய்யப்பன், , மன்ற ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் கு.மாரியப்பன், ஆலோசகர் பாவலர் முகவை திருநாதன், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் க.கணேசன்
மன்ற முன்னணிப் பேச்சாளர்கள் புவனா வெங்கட், முனைவர் துர்காதேவி, கி.வேங்கடராமன் மற்றும் பல நிர்வாகிகளும் அங்கத்தினர்களும் கலந்து கொண்டனர்.
தமிழ் இலமூரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன் வா.மு.சே.திருவள்ளுவன்,மதுரை சண்முக சுந்தரம் பன்னிருகைவடிவேலன் மற்றும் பல்வேறு தமிழமைப்பைச் சார்ந்தவர்களும் முகநூல் மற்றும் வலையொளி மூலமாக நிகழ்வில் கலந்து மகிழ்ந்தார்கள்.
நிகழ்வை வலைத்தமிழ் தொலைக்காட்சி அமெரிக்கா சார்பாக சுரேஷ் சிறப்பாக ஒருங்கிணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37