Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா – மும்பை மற்றும் புறநகர் திமுக சார்பில்

18 Sep 2022 5:59 pmFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Pictures anna bd

பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா மும்பையில் மாநகர திமுக மற்றும் புறநகர் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது.

மும்பை திமுக சார்பில் முப்பெரும் விழா

தந்தை பெரியார் பிறந்த சமூக நீதி நாள் ,பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், கழகம் தோன்றிய நாள் ஆகிய முப்பெரும் விழா மும்பை தி.மு.க. தலைமை பணிமனை தாராவி கலைஞர் மாளிகையில் 15.09.2022 வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் அவைத்தலைவர் வே.ம.உத்தமன் தலைமையில் நடைபெற்றது.

பொறுப்பாளர் கருவூர் இரா.பழனிச்சாமி வரவேற்புரையாற்ற, மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ. கணேசன் பெரியார் திருவுருவப் படத்திற்கும், பணகுடி மா. சண்முகவேல் பேரறிஞர் திருவுருவப் படத்திற்கும், முத்தமிழறிஞர் திருவுருவப் படத்திற்கு என்.வி.சண்முகராசன் மாலையிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ. இரவிச்சந்திரன், தானே கேஏ. ஜாகிர் உசேன், வக்கோலா பகுதி செயலாளர் சேலம். மா.சீனிவாசன,
ம. நீதி துரை, ஜெ. சுகுமாறன் ஆகியோர் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் பெருமைகளை, சமூக நீதிக்காக ஆற்றிய பணிகளை எடுத்துரைத்தனர். அவர்கள் வழி தொடர்ந்து தளபதி ஸ்டாலின் அவர்கள் முதல்வர் பொறுப்பேற்ற பின் திராவிட மாடல் ஆட்சியை திறம்பட நடத்துவதை பெருமையுடன் கூறினர்.

விழா நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த க. இராசன், ரவிரஜினி, முருகன், எ. திருச்செல்வன், ஜே.பி. நாஞ்சிலின், பி. அன்பில்ரஞ்சன், எஸ். மாசிலாமனி, சித்திக் தஸ்லீம் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மூத்த தலைவர் என்.வி.சண்முகராசன் அவர்கள் நன்றி கூறினார்.

புறநகர் திமுக சார்பில் பாண்டுபில்

பாண்டுப்பில் பம்பாய் திருவள்ளுவர் மன்றத்தில் மும்பை புறநகர் திமுக அவைத்தலைவர் ஜேம்ஸ் தேவதாசன் தலைமையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா நடைபெற்றது. கழகப் பேச்சாளர் முகமதலி ஜின்னா, எஸ்.எஸ்.தாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மும்பை கல்யாண்.

மும்பை புறநகர் திமுக அம்பர்நாத் கிளை முன்னாள் செயலாளர் அண்ணா கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவில் துணைச்செயலாளர் கவிஞர் வதிலை பிரதாபன்
மும்பை புறநகர் திமுக இலக்கிய அணித்தலைவர் வே.சதானந்தன், திவா கிளைச் செயலாளர் வேல்முருகன், அம்பர்நாத் முத்தமிழ் மன்றச் செயலாளர் முத்தமிழ் தண்டபாணி, கல்யாண் தமிழ் நற்பணி மன்ற ரகுநாத பெருமாள், பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

புத்தகம் அறிமுகம்

அந்நிகழ்வில் தாயகத்தில் வெளியிடப்பட்ட அண்ணா கதிர்வேல் எழுதிய எங்கிருந்தாலும்.... என்ற புத்தகம் கவிஞர் வதிலை பிரதாபன் அறிமுகப் படுத்தப்படுத்தினார். கலந்துகொண்ட அனைவருக்கும் புத்தகம் வழங்கப்பட்டது

மும்பை புறநகர் பிவாண்டி கிளை சார்பில்

மும்பை புறநகர் திமுக பிவாண்டி கிளை சார்பில்ல் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவில் பிவாண்டி கிளைச் செயலாளர் மெகபூப் பாஷா, பொருளாளர் முஷ்டாக் அலி, மும்பை இளைஞர் அணி துணை அமைப்பாளர் கணேசன், பேராசிரியர் சம்பத், ஷான் பாஷா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மும்பை புறநகர் ஜெரிமரி கிளை சார்பில்

மும்பை புறநகர் திமுக ஜெரிமரி கிளை சார்பில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவில்
மும்பை புறநகர் திமுக துணைச்செயலாளர் அ.இளங்கோ தலைமையில் நடைபெற்றது. ஜெரிமரி பகுதி மக்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்

மும்பை புறநகர் திமுக சீத்தாகேம்ப் கிளை

மும்பை புறநகர் திமுக சீத்தாகேம்ப் கிளை சார்பில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவில் சீத்தாகேம்ப் கிளை பொறுப்பாளர் தலைமையில் நடைபெற்றது.


You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
1 year ago

வாழ்த்துக்கள் ஐயா

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092567
Users Today : 6
Total Users : 92567
Views Today : 6
Total views : 410273
Who's Online : 0
Your IP Address : 13.59.103.67

Archives (முந்தைய செய்திகள்)