30 Jun 2022 6:03 pmFeatured

ஏழரை மணிக்கு பதவியேற்பு
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்திருப்பதால், பா.ஜ.க ஆதரவுடன் புதிய அரசு பதவியேற்கவிருக்கிறது.
சிவசேனா எம் எல் ஏக்கள் ஏக்நாத் ஷிந்தேவுடன் கைகோர்த்ததால் உத்தவ் தாக்கரே தலைலையிலான அரசு பெரும்பானையை இழந்தது
இந்நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று இரவு தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து
இன்று பிற்பகல் ஏக்நாத் ஷிண்டே கோவாவிலிருந்து அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்துடன் மும்பை வந்துசேர்ந்தார். அவர் மும்பை விமான நிலையத்திலிருந்து தென் மும்பைக்குச் சென்றபோது, அவரது கார் சென்ற வழித்தடத்தில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. நேராக பட்னாவிஸ் இல்லத்துக்கு ஷிண்டே சென்றார். அங்கிருந்து தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் ராஜ்பவன் சென்று ஆளுநர் பகத்சிங் கோஷாரியாவைச் சந்தித்துப் பேசினர்.
சட்டமன்றத்தில் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்ட நிலையில் இந்த சந்திப்பின்போது அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ-க்கள் கொடுத்திருந்த ஆதரவு கடிதத்தை ஏக்நாத் ஷிண்டே ஆளுநரிடம் கொடுத்ததை.
ஏற்று ஷிண்டேவை ஆட்சியமைக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், ஆளுநரைச் சந்தித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், ``மகாராஷ்டிராவின் முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே இன்று மாலை 7:30 மணிக்கு பதவியேற்பார்" எனத் தெரிவித்தார். இரண்டு முறை முதல்வராகப் பதவி வகித்த தேவேந்திர பட்னாவிஸ், மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்னாவிஸ் ஷிண்டேவை முதல்வராக அறிவித்திருக்கிறார்.






Users Today : 11
Total Users : 108824
Views Today : 11
Total views : 436860
Who's Online : 1
Your IP Address : 216.73.216.150