30 Aug 2021 4:43 pmFeatured
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம்
தமெரிக்கா தொலைக்காட்சி
அகில உலக மகளிர் பேரவை
Dr. அப்துல் கலாம் புகழ்பாடும் இணையவழி உலக சாதனைப் பட்டிமன்றம்
நேற்று 29-08-2021 ஞாயிறு மாலை 6 மணியளவில் இணையம் வழியாக "அஸிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட்" சார்பாக தொடர் நிகழ்வுகளாக நடைபெற்ற எழுபத்தி ஏழு அமைப்புகளின் எழுபத்தி ஏழு மணிநேரப் பட்டிமன்றம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
உலகெங்கும் இருக்கின்ற இலக்கிய அமைப்புகளில் இருந்து பலர் கலந்து கொண்டு மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் புகழ் பாடும் விதமாக அவரைப் பெருமைப் படுத்தும் பலதரப்பட்ட தலைப்புகளான கல்வி, அரசியல், இலக்கியம், சமுதாயப்பணி, அறிவியல் என்பனவற்றில் ஒரு தலைப்பின் கீழ் வெவ்வேறு பேச்சாளர்கள் பேசுகின்றாற்போல் ஏழு நாட்களும் நிகழ்கின்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அத்தைகைய நிகழ்வினை மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம், தமெரிக்கா தொலைக்காட்சி, அகில உலக மகளிர் பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து நேற்றைய நிகழ்வின் தலைப்பாக "மக்கள் மனதில் கலாம் நிலைத்து நிற்பது" ஏவுகணை நாயகனாகவே! இளைஞர்களின் எழுச்சி நாயகனாகவே! என்று இரு அணிகளில் அணிக்கு மூவர் வீதம் உரையாற்றினார்கள்.
கோயம்புத்தூர் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத்
தலைவர் பேராசிரியர் முனைவர் க.முருகேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மன்றத்தின் ஆலோசகர் ஆறுமுகப் பெருமாள் வரவேற்றுப் பேசினார்.
ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்
இரண்டு அணியினரின் பேச்சுகளையும் கேட்ட நடுவர் பட்டிமன்ற நிறைவுரையில் மக்கள் மனதில் கலாம் நிலைத்து நிற்பது இளைஞர்களின் எழுச்சி நாயகனாகவே! என்று தீர்ப்பு வழங்கினார்.
மன்றத்தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் நன்றியுரை ஆற்றினார். நிகழ்வை மன்றத்துணைத் தலைவர் கவிமாமணி இரஜகை நிலவன் மற்றும் ஆட்சிமன்றக் குழுவைச் சார்ந்த கு.மாரியப்பன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.
நிகழ்வில் உலகெங்குமிருந்து பல்வேறு தமிழமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.