27 Feb 2021 11:00 amFeatured

மும்பை மாநகர் தி.மு.க. பொருளாளர் ச. பொன்னம்பலம் அவர்கள் 79 வயதாகும் அவர் உடல்நிலை சரியில்லாத நிலையில் தாயகத்தில் 20.02.2021 சனிக்கிழமை அன்று தாயகத்தில் காலமானார்.
அன்னாரது மறைவையொட்டி மும்பை மாநகர் தி.மு.க. பொறுப்பாளர் கருவூர் இரா. பழனிச்சாமி அவர்கள் தலைமையில் மும்பை புறநகர் தி.மு.க. செயலாளர் அலிசேக் மீரான், மும்பை தி.மு.க. அவைத்தலைவர் வே.ம. உத்தமன் ஆகியோர் முன்னிலையில் இரங்கல் கூட்டம் 26.02.2021 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் மும்பை தலைமைக் கழகப் பணிமனை தாராவி கலைஞர் மாளிகையில் நடைபெற்றது.
திரு பொன்னம்பலம் அவர்கள் முன்னாள் செயலாளர் அய்யா த.மு.பொற்கோ அவர்களுடனும், தற்போது வரை மும்பை மாநகர் தி.மு.க. வில் பொருளாளர் பொறுப்பு வகித்து சிறப்பாக பணியாற்றியவா், எளிமையானவர். மும்பை தி.மு.க. வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றியவர்.
அவரது திருவுருவப்படத்திற்கு மும்பை தி.க. தலைவர் பெ.கணேசன், புறநகர் தி.மு.க. இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.இரா. தமிழ்நேசன், மூத்த தலைவர்கள் திரு என்.வி.சண்முகராசன், பணகுடி மா.சண்முகவேல், பாந்திரா க.மு.மாணிக்கம், துணைச் செயாலாளர் இடையன்குளம் எஸ். பாஸ்கர், இளைஞர் அணி துணை அமைப்பாளர் க. மூர்த்தி, தானே கே.ஏ.ஜாகிர் உசேன், தாராவிக் கிளை பொருளாளர் அலி முகமது, டோம்பிவிலி கிளைச் செயலாளர் வீரை சோ. பாபு, சாந்தா குருஸ் தி.மு.க. கிளைச் செயலாளர் சேலம் மா. சீனிவாசன், தே. ஸ்டீபன்ராஜ், . கவிஞர் ஜெ. சுகுமாறன், ம. சுகுமாரன், சஞ்சய் காலே, மும்பை தி.க.பொருளாளர் அந்தோனி, கா. ஜீவா, பிரோஸ் கான் மற்றும் பலர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.






Users Today : 24
Total Users : 113300
Views Today : 27
Total views : 442510
Who's Online : 1
Your IP Address : 216.73.217.34