06 Feb 2021 11:21 amFeatured

பேரறிஞர் அண்ணா அவர்களின் 52 வது நினைவு நாள்
மும்பை நகர மற்றும் புறநகர் திமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது
மும்பை புறநகர் திமுக சார்பில்
மும்பை புறநகர திமுகசார்பாக பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவேந்தல் கூட்டம் பாண்டூப் பிரைட் மேனிலைப்பள்ளியில் புறநகர திமுக அவைத்தலைவர் ஜேம்ஸ் தேவதாசன் தலைமையில் நடைபெற்றது.
தலைமைகழக திமுக பேச்சாளர் முகமதுஅலி ஜின்னா பேரறிஞர் அண்ணாவின் திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து தொடக்கவுரையாற்றினார்.
மும்பைபுறநகர திமுக செயலாளர் அலிசேக்மீரான் பேரறிஞர் அண்ணாவின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி நினைவேந்தல் உரையாற்றினார்.

மேலும் இவ்விழாவில் புறநகர திமுக துணை செயலாளர் அ.இளங்கோ, மும்பை திமுக இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார், புறநகர திமுக இலக்கிய அணி புரவலர் சோ.பா.குமரேசன், இலக்கிய அணி துணைஅமைப்பாளர் வெ.அ.ஜெயினுலாபுதீன், இந்திய பேனா நண்பர்கள் பேரவை நிறுவனர் மா.கருண் ,
மற்றும் கோரேகாவ் கிளை செயலாளர் சக்திவேல், பாண்டூப் கிளை துணை செயலாளர் சேர்மன் துரை,பிவண்டி கிளை பொருளாளர் முஸ்தாக்அலி ,பகத்சிங் நகர் சக்திவேல்,பாண்டூப் கிளை ஆசிரியர் குமாரசெல்வன்,ஆசிரியர் இராதாகிருஷ்னன் ,ஆரோக்கிரசாமி ,எஸ் முகுந்தன்,முருகேசன் ,திருமதி சுலபா கருண்,தா பாண்டியன் ,கரண் மற்றும் பலர் கலந்துகொண்டு பேரறிஞர் அண்ணாவின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
மும்பை நகர திமுக
பேரறிஞர் அண்ணா அவர்களின் 52 வது நினைவு நாளினையொட்டி 3.02.2021 புதன்கிழமை அன்று மாலை 5 மணிக்கு மும்பை மாநகர் தி.மு.க.தலைமைப் பணிமனை தாராவி கலைஞர் மாளிகையில் பொறுப்பாளர் கருவூர் இரா.பழனிச்சாமி அவர்கள் தலைமையில் மூத்த தலைவர்கள் என்.வி.சண்முகராசன் பாந்திரா க.மு.மாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் மலரஞ்சலி செலுத்தி நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அதுசமயம் துணைச்செயலாளர் இடையன் குளம் சு.பாஸ்கர் மூத்த தலைவர் பணகுடி ம.சண்முகவேல் இளைஞர் அணி துணை அமைப்பாளர் க.மூர்த்தி மலபார் குன்று கிளைச் செயலாளர் சேரை ச.பிரகாஷ் தாராவி கிளை பொருளாளர் எம.அலி முகமது எம.ராஜசேகரன் ராஜுபெருமாள் தோ.செ.கருணாநிதி மும்பை தி.மு.க.தலைமை மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.






Users Today : 12
Total Users : 106593
Views Today : 12
Total views : 434337
Who's Online : 0
Your IP Address : 216.73.216.1