Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

தமிழ் எழுத்தாளர் மன்றம் நடத்திய சூம் வழிக் காணொளி நிகழ்ச்சி-சிறப்பாக நடைபெற்றது

29 Sep 2020 1:25 amFeatured Posted by: Sadanandan

You already voted!

மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் நடத்திய சூம் வழிக்காணொளி நிகழ்ச்சி 27.09.2020 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்றது

இந்நிகழ்வில்  தமிழ் எழுத்தாளர் மன்ற ஆலோசகரும் மும்பை தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவருமான எஸ். இராமதாஸ் அவர்கள்  தலைமையில் நடந்த நிகழ்வில் மன்றத்தின் துணைப் பொருளாளர் அந்தோணி ஜேம்ஸ் வரவேற்புரை ஆற்றினார். துணைச் செயலாளர் பொற்செல்வி கருணாநிதி  தொடக்கவுரையாற்றினார்.

இந்நிகழ்வில் இந்திய ரிசர்வ் வங்கியின் (சென்னை) துணைப் பொதுமேலாளர் டாக்டர் ரத்தினம்  சண்முகசுந்தரம் (Asst. General Manager - Reserve Bank of India CHENNAI) சிறப்புரையாற்றினார்

நிறைவாக தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் நன்றியுரை ஆற்றினார்.

மன்றத்தின் அனைத்துப் புரவலர்கள், ஆலோசகர்கள் மற்றும் அங்கத்தினர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் கவியரசரின் திரையிசைப் பாடல்களின் மேல் பற்றுள்ள அனைத்து தமிழ் அன்பர்களும்  கலந்து கொண்டு இன்புற்று மகிழ்ந்தார்கள்.

நிகழ்வின் தொடக்கமாக சமீபத்தில் மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமண்யம் அவர்களின் நினைவாக மன்றத்தின் பொருளாளர் அ.இரவிச்சந்திரன் இரங்கலுரை ஆற்ற அதைத் தொடர்ந்து துயர உணர்வின் வெளிப்பாடாக  இரண்டு நிமிடம் அமைதி காக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்துகொண்டு ரிசர்வ் வங்கியின் உதவிப் பொது மேலாளர் (AGM - of RESERVE BANK OF INDIA CHENNAI)  ஆற்றிய மிகச் சிறப்பான உரையைக் கேட்டு அனைவரும் மகிழ்ந்து பாராட்டினார்கள். கவியரசரின் பாடல்களில் தமிழ் இலக்கியங்களாகக் கருதப்படுகின்ற திருக்குறள், திருவிளையாடல் புராணம், குறுந்தொகை, தேவாரம், சிலப்பதிகாரம், திருவாசகம், ராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை என்பனவற்றிலிருந்து உள்வாங்கி கவியரசரால் எழுதப்பட்ட பாடல்கள் எவையெவை என்றும் எப்படியெல்லாம் அவைகள் எழுதப்பட்டுள்ளன என்றும் விளக்கிய பாங்கு பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.

தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் புரவலர்கள் அலிசேக் மீரான், மெய்யப்பன் மற்றும் லெமூரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன் ஆலோசகர்கள் பாவலர் முகவை திருநாதன், கருவூர் பழனிச்சாமி, ரிசர்வ் வங்கியில் பணியாற்றும் ஏனைய தமிழுணர்வாளர்கள் மதிவாணன் கே.ஏ.கணேசன், சாருலதா, சேகர், அருண், கவிஞர் ஜெகநாதன், மற்றும் பலர் நிகழ்வைப் பாராட்டி மகிழ்ந்தார்கள்.

முத்தாய்ப்பாக கவியரசு கண்ணதாசன் நிகழ்ச்சி என்பதாலும் எஸ்.பி.பி அவர்களின் மறைவை ஒட்டிய நிகழ்வென்பதாலும் TMS Narasimman என்ற புகழுடன் அழைக்கப்படும் நரசிம்மன் இசைக் குழுவினரின் இசையுடன் கூடிய பாடல்கள் பாடப்பட்டன.

நிகழ்வில் மும்பை மட்டுமின்றி தமிழகம்,கர்நாடகம் மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் தமிழ் உணர்வாளர்கள் பலரும்  நிகழ்வில் கலந்து கொண்டு இன்புற்றார்கள்.

You already voted!
4.7 3 votes
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
SEKAR M
SEKAR M
5 years ago

very nice program

க.தீ.சிங்காரம்
க.தீ.சிங்காரம்
5 years ago

மேலும் பல நிகழ்ச்சிகள் தொடர வாழ்த்துகள்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

104921
Users Today : 13
Total Users : 104921
Views Today : 17
Total views : 432085
Who's Online : 0
Your IP Address : 216.73.216.111

Archives (முந்தைய செய்திகள்)