Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

யோகி,மாயாவதி பிரசாரம் செய்யத் தடை தேர்தல் ஆணையம் அதிரடி

15 Apr 2019 8:31 pmFeatured Posted by: Admin

You already voted!

மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசியதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆத்தியநாத், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ஆகியோர் அடுத்த சில நாட்களுக்கு பிரச்சாரம் செய்யத் தடை விதித்து தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் 72 மணிநேரமும், மாயாவதி அடுத்த 48 மணிநேரத்துக்கும் பிரச்சாரம் செய்யக்கூடாது. தடை நாளை காலை 6 மணியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.
ஆதித்யநாத்:
உ.பி. முதல்வர் ஆதித்யநாத் சமீபத்தில் மீரட் நகரில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, இரு மதங்களுக்கு இடையே
மோதல் உண்டாக்கும் வகையில் பேசியுள்ளார். மேலும், மாயாவதி தற்போது முஸ்லிம்கள் மீது அதிக அக்கறை காட்டுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
மாயாவதி:
தியோபந்த் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மாயாவதியும், மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசி, குறிப்பிட்ட கட்சியினருக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று கோரி இருந்தார். இரு தலைவர்களும் பேசிய வீடியோ ஆதாரம் தேர்தல் ஆணையத்திடம் அளித்து புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் இரு தலைவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. ஆனால், இருவரும் அளித்த விளக்கம் தேர்தல் ஆணையத்துக்குத் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்பதால், மாயாவதியும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தும்
தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடத் தடை விதித்து தேர்தல் ஆணையம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு இன்று வந்தபோது பதில் அளித்த தேர்தல் ஆணையம் தரப்பு
மாயாவதி, ஆதித்யநாத் தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது
நாளை மீண்டும் விசாரணை நடைபெறும் நிலையில் தேர்தல் ஆணையம் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

120181
Users Today : 0
Total Users : 120181
Views Today :
Total views : 451617
Who's Online : 0
Your IP Address : 216.73.216.173

Archives (முந்தைய செய்திகள்)