15 Jul 2020 11:58 pmFeatured

திரவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களின் அறிக்கைக்கு இணங்க மும்பை திராவிடர் கழகம் மற்றும் மும்பை பகுத்தறிவாளர் கழகம் இணைந்து 15.07.2020 அன்று காலை 10 மணியளவில் மும்பை திராவிடர் கழகத்தின் தலைவர் பெ. கணேசன் தலைமையில், மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் அ.இரவிச்சந்திரன் முன்னிலையில் தாராவி காமராஜர் பள்ளியில் உள்ள காமராஜர் உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் அனைவரும் தந்தை பெரியாரின் சதுக்கம் அருகில் நீட் தேர்வு ரத்து, தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு,ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசின் சார்பில் மருத்துவம் உறுதியாக்குதல்,பத்திரிக்கையாளர்களுக்கான பாதுகாப்பின்மை போன்ற பிரச்சனைகளுக்காக பதாகைகளை கையில் ஏந்தியபடி கொரானா காலகட்டத்தின் விதிமுறைகளை கடைபிடித்து செயலாளர் இ.அந்தோணி, மு.கணேசன், பெரியார் பாலாஜி, கழகத்தின் முன்னால் இளைஞரணி செயலாளர் அய். செல்வராஜ் மற்றும் செல்வம் உள்ளிட்ட பலர் எழுச்சி அறப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.






Users Today : 29
Total Users : 106475
Views Today : 33
Total views : 434202
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37