21 Dec 2019 11:43 pmFeatured

டோம்பிவிலியில் பள்ளி மற்றும் கல்லூரி நடத்தி வரும் எஸ்.ஐ.எ என்கின்ற சவுத் இந்தியன் அசோசியேசன் சார்பில் சிறப்பு தமிழ் பட்டிமன்றம் 23.12.2019 திங்கள் கிழமை மாலை 6.30 க்கு டோம்பிவிலி கிழக்கில் பாலாஜி கோவில் பின் புறம், எம்.ஐ.டி.சி, ஜிம்கானா சாலையில் அமைந்துள்ள எஸ் ஐ எ கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெறுகிறது.
பட்டிமன்றம்-நடுவர் சுகிசிவம்
வாழ்க்கை என்பது போராட்டமா ? பூந்தோட்டமா ? என்ற தலைப்பில் நடைபெரும் பட்டிமன்றத்தில் கலைமாமணி சுகிசிவம் நடுவராகவும் நகைச்சுவை பட்டிமன்ற பேச்சாளர்கள் மோகன சுந்தரமும், மணிகண்டனும் தமிழகத்தில் இருந்து வந்து கலந்துகொள்கிறார்கள். பிற பட்டிமன்ற பேச்சாளர்களாக மீனாட்சி வெங்கடேஷ், புவனா வெங்கட், அன்னபூரணி ஜம்புநாதன், வ.இரா.தமிழ்நேசன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
அனுமதி இலவசம்
நிகழ்விற்கான அனுமதி இலவசம், தமிழ் மக்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்கும்படி நிர்வாகிகள் கேட்டுக்கொள்கிறார்கள்






Users Today : 33
Total Users : 119241
Views Today : 47
Total views : 450395
Who's Online : 1
Your IP Address : 216.73.216.17