Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்த அர்ஜுன் சம்பத் கைது

06 Nov 2019 3:34 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தின் எதிரே திருவள்ளுவர் சிலை உள்ளது. நேற்று முன்தினம் வள்ளுவர் சிலையின் மீது அடையாளம் தெரியாத சிலர் சாணத்தை வீசியும் கருப்பு காகிதத்தால் கண்களை மறைத்தும் அவமதிப்புச் செய்தனர். இதற்கு அரசியல் தலைவர்கள் தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்ததையடுத்து வள்ளுவர் சிலையை அவமதிப்புச் செய்த நபர்களை பிடிக்க 4 தனிப்படைகளை அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் காவி துண்டு, திருநீறு பூசி, ருத்ராட்சம் மாலை அணிவித்தும் சூடம் ஏந்தியும் பூஜை செய்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவள்ளுவர் ஒரு இந்து. அதனால் இந்து முறைப்படி தான் அவரை வழிபாடு செய்ய வேண்டும். அதன்பேரிலே தான் இன்று எனது தலைமையில் கட்சியினர் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து ருத்திராட்சை மாலை அணிவித்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தோம். அதில் என்ன தவறு இருக்கிறது என்றார். 

 இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் திருவள்ளுவர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட காவி துண்டு, ருத்ராட்சம் மாலை உள்ளிட்டவற்றையும் காவலர்கள் அகற்றினர்.

அர்ஜூன் சம்பத் கைது

தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை அவமதித்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இலக்கியரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் சாதி, மத ரீதியாக வன்முறையை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த சூழலில் திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்த இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டார். கும்பகோணம் அடுத்த உடையாளூரில் கைது செய்யப்பட்ட அவரை போலீசார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கியதாக அர்ஜூன் சம்பத் மீது தஞ்சையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

120180
Users Today : 51
Total Users : 120180
Views Today : 73
Total views : 451616
Who's Online : 0
Your IP Address : 216.73.216.173

Archives (முந்தைய செய்திகள்)