04 Jun 2019 11:45 pmFeatured

மும்பை - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 96 வது பிறந்த நாள் விழா முன்னிட்டு மாதுங்கா, இரட்சண்ய சேனை ஆதரவற்றோர் இல்லக் குழந்தைகளுக்கு இலவச உணவு 3.06.2019 திங்கட் கிழமை இரவு 8.00 மணியளவில் மும்பை தி.மு.க சார்பில் பொறுப்பாளர், கருவூர் இரா. பழனிச்சாமி அவர்களின் தலைமையில், அவைத் தலைவர் வே.ம. உத்தமன் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
நிகழ்வில் பொருளாளர் ச. பொன்னம்பலம், புறநகர் தி.மு.க. இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் தமிழ்நேசன், மும்பை தி.மு.க. துணைச் செயலாளர் எஸ். பாஸ்கர், பாந்திரா கிளை செயலாளர் க.மு.மாணிக்கம், தானே கே.ஏ.ஜாகிர் உசேன், மலபார் குன்று செயலாளர் சேரை பிரகாஷ், இளைஞரணி துணை அமைப்பாளர் க. மூர்த்தி, தாராவி கிளை பொருளாளர் அலி முகமது, ஸ்டீபன் ஜெயராஜ், வழக்கறிஞர் ஜோ, களந்தை சண்முகவேல், முனீஸ்வரன், மாரி செட்டியார், மதன் ராஜா மதி, ஜி.முத்து, அலுவலகச் செயலர் க. இராசன் உட்பட மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.






Users Today : 15
Total Users : 111127
Views Today : 17
Total views : 439512
Who's Online : 0
Your IP Address : 216.73.216.138