Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

நீரின்றி அமையாது மீன்கள்  

27 Jul 2026 11:28 pmFeatured Posted by: Karur R Palaniswamy

You already voted!
"நீரின்றி அமையாது உலகு" என்பது திருவள்ளூரின் வாக்கு. நீர் இல்லாமல் வாழ முடியாது. அந்த நீரோ, மழை இல்லாமல் கிடைக்காது. உயிர் வாழ்தல், தொழில் செய்தல் என எவ்வித உலகியல் செயல்பாடுகளுக்கும் நீர் இன்றியமையாதது. அந்த உயிர்காக்கும் நீர், மழை பொழிந்தால் மட்டுமே கிடைக்கும். மழை இல்லாவிட்டால் உலகில் அறநெறியும், ஒழுக்கமும் நிலைபெறாமல் போய்விடும் என விளக்கினார். அதேபோல் மீன்கள் உருவாக, உயிர் வாழ நமக்கெல்லாம் உணவாக நீர் மிக மிக அவசியம்

"நீரின்றி அமையாது உலகு" என்பது திருவள்ளூரின் வாக்கு. நீர்   இல்லாமல் வாழ முடியாது. அந்த நீரோ, மழை இல்லாமல் கிடைக்காது. உயிர் வாழ்தல், தொழில் செய்தல் என எவ்வித உலகியல் செயல்பாடுகளுக்கும் நீர் இன்றியமையாதது. அந்த உயிர்காக்கும் நீர், மழை பொழிந்தால் மட்டுமே கிடைக்கும். மழை இல்லாவிட்டால் உலகில் அறநெறியும், ஒழுக்கமும் நிலைபெறாமல் போய்விடும் என விளக்கினார். அதேபோல் மீன்கள் உருவாக, உயிர் வாழ நமக்கெல்லாம் உணவாக நீர் மிக மிக அவசியம்.

கவிஞர்கள் மங்கையர் விழிகளை வர்ணிக்கும் பொது கயல் விழியால் என்று வர்ணிப்பர். கயல் என்ற சொல்லும் மீனைக் குறிக்கும் சொல்லாகும். பல்வேறு பண்பாடுகளில் மீனானது புனித தெய்வமாக, பண்பாட்டுச் சின்னமாகவும் சமய அடையாளங்களாகவும் திகழ்கிறது. பல்வேறு கால கட்டங்களில் கதை, இலக்கியம், காவியம், வானுடவியல், வரலாறுகளில் பாண்டிய அரசு கொடி, சின்னம் போன்ற முக்கியப் பாத்திரமாகவும் திகழ்ந்துள்ளது. வானத்தில் உள்ள நட்சத்திரங்களை வின் மீன்கள் எனக் கூறுவர். சோதிடத்தில் 12 ராசிகளில் மீன ராசியும் ஒன்றாகும்.

இயற்கையின் அற்புதமான உயிரினங்களில் முக்கிய இடம் பெறுவது மீன்கள். உலகில் நீரில் வாழும் முதுகெலும்புள்ள உயிரினங்களாக மீன்கள் கருதப்படுகின்றன. கடல்கள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், என நீர் இருக்கும் இடமெல்லாம் பலவகையான மீன்கள் வாழ்கின்றன. மனிதனின் உணவுத் தேவையையும், பொருளாதார வளர்ச்சியையும், சுற்றுச்சூழல் சமநிலையையும் பேணுவதில் மீன்கள் பெரும் பங்காற்றுகின்றன.

பூமியில் உயிரினங்கள் தோன்றுவதற்கு முன் நீரில் வாழும் எளிய உயிரினங்கள் உருவாகின. அவற்றிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்று முதுகெலும்புள்ள உயிரினங்களாக மீன்கள் தோன்றின என்று அறிவியல் கூறுகிறது. சுமார் 50 கோடி ஆண்டுகளுக்கு முன்பே மீன்கள் பூமியில் வாழ்ந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முதலில் தாடையற்ற மீன்கள் தோன்றி, பின்னர் தாடையுள்ள பலவகை மீன்கள் உருவாகின. காலப்போக்கில் இயற்கைச் சூழலுக்கு ஏற்ப அவை பல இனங்களாகப் பிரிந்தன. மீன்கள் தோன்றுவதற்கு முன்பு, நீரில் மிகவும் எளிய அமைப்புள்ள நுண்ணுயிர்கள் மற்றும் மென்மையான உடலமைப் புடைய உயிரினங்கள் தோன்றின என்று அறிவியல் கூறுகிறது.

அவற்றில் முக்கியமானவை- ஒற்றை அணு உயிரினங்கள் (Single-celled organisms), அமீபா, பாக்டீரியா போன்ற மிக எளிய உயிர்கள் முதலில் தோன்றின. பாசி மற்றும் நுண்ணுயிர்கள் நீரில் ஒளிச் சேர்க்கை செய்து உயிர்வாழ்ந்தன.  மென்மையான உடலுடைய கடல் உயிரினங்கள் ஜெல்லி மீன் போன்ற எளிய அமைப்புடைய உயிரினங்கள். முதுகெலும்பில்லா உயிரினங்கள் டிரைலோபைட் போன்ற கடல்வாழ் உயிரினங்கள். தாடையற்ற ஆரம்ப உயிரினங்கள் இவையே பின்னர் முதன்மையான மீன்களாக வளர்ச்சி பெற்றன.  அறிவியல் ஆய்வுகளின்படி, முதலில் கடலில்தான் உயிர்கள் தோன்றின. கோடிக்கணக்கான ஆண்டுகளாக நடந்த பரிணாம வளர்ச்சியின் விளைவாக எளிய நுண்ணுயிர்களிலிருந்து மீன்கள் உருவாகின. உலகில் தற்போது அறிவியல் அடிப்படையில் சுமார் 34,000-க்கும் மேற்பட்ட மீன் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அவற்றில்:  மென்மையான உடலமைப்பைக் கொண்ட தாடையற்ற மீன்கள் (Jawless Fishes), பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாக தாடைகள் மற்றும் செதில்கள் கொண்ட தாடை மீன்கள் (Jaw-bearing Fishes); டெவோனியன் காலத்தில் (Devonian Period) மிகச் சிறப்பாக வளர்ச்சியடைந்த மீன் இனம்; காலப்போக்கில் மீன்களின் உடல் அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு எலும்பு மீன்கள் (Bony Fishes) மற்றும் குருத்தெலும்பு மீன்கள் (Cartilaginous Fishes), சுறாக்கள் போன்ற குருத்தெலும்பு மீன்களாகவும், செதில்கள் மற்றும் முட்களுடைய சாதாரண எலும்பு மீன்களாகவும் பரிணமித்தன.

உலகில் ஆயிரக்கணக்கான மீன் இனங்கள் காணப்படுகின்றன. அவற்றை வாழும் இடம் மற்றும் உடலமைப்பின் அடிப்படையில் பல வகைகளாகப் பிரிக்கலாம்.

1. நன்னீர் மீன்கள் (Freshwater):  கரைந்த ஆக்ஸிஜன் அளவு  (Dissolved Oxygen) பொதுவாக 6 முதல் 9 mg/L வரை இருக்கும் தூய்மையான ஆறுகள் மற்றும் ஏரிகளில் ஆக்ஸிஜன் அதிகம் காணப்படும். நன்னீர் மீன்கள் ஆறுகள், குளங்கள், ஏரிகள் போன்ற இடங்களில் வாழும் மீன்கள். சுமார் 15,000-க்கும் மேற்பட்ட இனங்கள் நன்னீரில் வாழ்கின்றன.   பல மீன்கள் இங்கு இனப்பெருக்கம் செய்கின்றன. இதில் உப்பு மிகவும் குறைவாக இருக்கும். ஆறுகள், ஏரிகள், குளங்கள் போன்ற இடங்களில் ஆக்ஸிஜன் அளவு அதிகமாக இருப்பதால் பல மீன்கள் எளிதில் வாழ்கின்றன. நீரின் வகை வெப்பநிலை பொதுவாக 20°C – 30°C, உப்புத்தன்மை மிகக் குறைவு  (0.5 ppt க்கும் குறைவு, 

 உதாரணம்: கெண்டை (Cat fish), ரோகு (Rohu), கட்லா (Catla)

2. கடல்  நீர் மீன்கள்  (Sea water Fish):  கரைந்த ஆக்ஸிஜன் அளவு நன்னீரை விட சற்றுக் குறைவு, உப்புத்தன்மை அதிகம் (சுமார் 35 ppt), உப்பு நீரின் வெப்பநிலை பொதுவாக 22°C – 32°C, கடல் மற்றும் பெருங்கடல்களில் வாழும் மீன்கள் சுமார் 18,000 முதல் 20,000 வரை இனங்கள் காணப்படுகின்றன.  கடல் நீரில் உப்பு அதிகம் இருக்கும். பெரிய மீன்கள் மற்றும் கடல் உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. ஆழ்கடலில் வெப்பநிலை குறையக்கூடும். சில பகுதிகளில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும். பொதுவாக 5 முதல் 7 mg/L வரை இருக்கும்.  கடல் நீரில் உப்பு அதிகமுள்ளதால் ஆக்ஸிஜன் கரைதல் சற்றுக் குறையும்.   

உதாரணம்:  மத்தி மீன் (Sardines), கானாங்கெளுத்தி (Mackerel),  சால்மன் (Salmon): அறுக்குளா (Kingfish),   வஞ்சிரம் (Seer Fish), சூரை (Tuna)

 சாளை (Sardine),  குரூப்பர், சீ பாஸ், பீனேயஸ் spp. போன்ற இறால்கள்(Prawns).

3. கலப்பு நீர் மீன்கள்  (Brackish Water):  கரைந்த ஆக்ஸிஜன்  இடத்திற்கு ஏற்ப மாறுபடும்,  கலப்பு நீரின் வெப்பநிலை  20°C – 32°C; உப்புத்தன்மை மிதமான அளவு (0.5 – 30 ppt),  நன்னீரும் உப்புநீரும் கலக்கும் பகுதிகளில் வாழும் மீன்கள்.

ஆற்று நீரும் கடல் நீரும் கலக்கும் இடங்களில் இந்த நீர் காணப்படும். எனவே உப்புத்தன்மையும் ஆக்ஸிஜன் அளவும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்.

மில்க்ஃபிஷ், திலாப்பியா, சேற்று நண்டுகள், சில இறால்கள் மற்றும் முல்லட்

4. அலங்கார மீன்கள் (Aquarium fishes): அலங்கார மீன்கள்   என்பவை வீடுகள், அலுவலகங்கள் போன்ற இடங்களில் அழகிற்காகவும், மன அமைதிக்காகவும் கண்ணாடித் தொட்டிகளில் வளர்க்கப்படும் வண்ணமயமான சிறிய மீன்கள் ஆகும். இது ஒரு சிறந்த பொழுது போக்காகவும், தற்போது பலரால் வருமானம் தரும் தொழிலாகவும் உள்ளது.

தங்க நிற மீன்கள் (Goldfish): மிகவும் பிரபலம். மெதுவாக நீந்தும் அழகான இந்த தங்க நிற மீன்கள் பல வண்ணங்களிlலும் கிடைக்கின்றன.   

அரோவானா (Arowana) மீன் வாஸ்து சாஸ்திரத்தின்படி மிகவும் மங்களகரமான மற்றும் செல்வத்தை ஈர்க்கும் 'செல்வ மீன்' (Dragon Fish) என்று அழைக்கப் படுகிறது. அரோவானா மீன் வலிமை மற்றும் அழகுக்கான நற்பெயரைக் காட்டிலும் மிகவும் விலையுயர்ந்த மீன் ஆகும்.  வீட்டின் வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் வைப்பது  வீட்டில் நேர்மறை ஆற்றலைப் பெருக்கவும், அதிர்ஷ்டத்தை ஈர்க்கவும் வாஸ்து மற்றும் ஃபெங் சுய் (Feng Shui) வழிகாட்டுதல் களுக்கு  உதவும் என நம்புகின்றனர்.    கருப்பு நிற மீனும் (எதிர்மறை ஆற்றலை உறிஞ்ச) இருப்பது அவசியம். மென்மையான தோற்றம் மற்றும் விசிறி போன்ற நீண்ட துடுப்புகளைக் கொண்ட ஏஞ்சல் (Angel fish); பிரகாசமான வண்ணங்களை

கொண்ட ஃபைட்டர் ஃபிஷ் (Bettar Fish); சற்று பெரிதாக வளரக்கூடிய புத்திசாலித் தனமான மீன்.  ஆஸ்கார் (Oscar Fish); பராமரிக்க மிகவும் எளிதான குறைந்த செலவில் ஆரம்ப நிலையாளர்களுக்கு ஏற்ற கப்பி மற்றும் மோலி (Guppy & Molly) முதலியன.  கோமாளி மீன் (Clownfish): உப்பு நீர் மீன்வளர்ப்பில் (Aquarium) ஆரம்பநிலைக்கு மிகவும் உகந்த, அழகிய மீன். 

            மீன்கள் மனிதனுக்கு மிகச் சிறந்த சத்துணவாக விளங்குகின்றன. குறிப்பாக புரதம், ஒமேகா–3 கொழுப்பு அமிலம், கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் D, வைட்டமின் B12 போன்ற பல சத்துகள் மீன்களில் உள்ளன. மருத்துவப் பயன் சில மீன் எண்ணெய்கள் உடல்நலத்திற்கு மருந்தாகப் பயன்படுகின்றன.  இதய நோய் அபாயத்தை குறைக்க உதவும்.  மூளை வளர்ச்சிக்கும் நினைவாற்றலுக்கும் நல்லது.  கண் பார்வைக்கு உதவுகிறது.  எலும்புகளை வலுப்படுத்துகிறது.  உடலுக்கு தேவையான உயர்தர புரதத்தை வழங்குகிறது.  குழந்தைகள் வளர்ச்சிக்கு மற்றும் முதியோருக்கு மீன் உணவு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. அதிக எண்ணெயில் பொரித்ததை விட, குழம்பு அல்லது ஆவியில் வேகவைத்த மீன் உடலுக்கு அதிக நன்மை தரும்.

ஒமேகா–3 கொழுப்பு அமிலம்,  மீன்களில் காணப்படும் இந்த நல்ல கொழுப்பு,   இது பல இறைச்சிகளில் குறைவாகவே இருக்கும். குறைந்த தீய கொழுப்பு, ஆட்டிறைச்சி அல்லது மாட்டிறைச்சியை விட பல மீன்களில் தீய கொழுப்பு குறைவாக உள்ளது.  உயர்தர புரதம்,  மீனில் உள்ள புரதம் உடலால் எளிதில் செரிமானமாகிறது. பல இறைச்சி வகைகளை விட எளிதில் ஜீரணமாகும்.

 ஆனால் கவனிக்க வேண்டியது காய்கறி மற்றும் பருப்பு வகைகளும் மிகவும் அவசியமானவை ஒரே மீன் உணவு மட்டும் போதாது, சமநிலையான உணவுமுறை தான் சிறந்தது,  அதனால், காய்கறி + பருப்பு + மீன் ஆகியவற்றை இணைத்து உண்பது உடல்நலத்திற்கு மிகச் சிறந்ததாகும்.

மத்தி மீன் (Sardines): தமிழக கடலோரப் பகுதிகளில் எளிதாகக் கிடைக்கக்கூடியது, ஒமேகா-3 சத்துக்கள் நிறைந்த மீன். செறிவான மீன் எண்ணெயின் நன்மைகளுடன் நாக்கில் சுவையேற்றும் சுவை. ஆரோக்கியமும் சுவையும் விரும்புபவர்கள், இந்த அழகிய மீன்களை வாங்கிச் சுவைத்துப் பயன் பெறலாம்.

கானாங்கெளுத்தி (Mackerel): ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த,                சத்துக்கள் நிறைந்த கடல் மீன்.

அறுக்குளா (Kingfish or Surmayi ): Scomberomorus guttatus (பொதுவான சீர் மீன்),   மற்றும் Scomberomorus commerson. உணவிற்கு மிகவும் விரும்பப்படும் ஒரு பிரபலமான மீன் வகை. இந்த மீனில் முட்கள் மிகக் குறைவாகவும்,  சதைப்பகுதி மென்மையாகவும் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.

சத்துக்கள்: புரதச்சத்து (Protein) மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் (Omega-3 fatty acids) நிறைந்துள்ளன     

சாளை மீன் –Sardine:  ஒமேகா–3, கால்சியம் மற்றும் வைட்டமின் D அதிகம் உள்ளது. இதயம் மற்றும் எலும்புகளுக்கு நல்லது.

வஞ்சிரம் - Seer Fish:   உயர்தர புரதச்சத்து நிறைந்தது. உடல் வளர்ச்சிக்கும் தசை வலிமைக்கும் உதவுகிறது.

சூரை மீன் – Tuna:  புரதம் மற்றும் நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது.

கெண்டை மீன் – Catfish:  புரதச்சத்து மற்றும் கனிமச் சத்துகள் நிறைந்த நன்னீர் மீன்.

ரோகு மீன்–Rohu:  எளிதில் செரிமானமாகும். குழந்தைகள் மற்றும் முதியோருக்கு நல்ல உணவாக கருதப்படுகிறது.

சால்மன் மீன் – Salmon:  காலா (கிழங்கான்) மீன் ஒமேகா–3 மிக அதிகம் கொண்ட உலகப் புகழ்பெற்ற சத்துணவு மீன்.  

வவ்வால் மீன்- Pomfret : வடக்கில் 'ஹல்வா' என்று பொருத்தமாகப் பெயரிடப்பட்ட இது, வெண்ணெய்க் கட்டி போல சுவைக்கும். உண்ணக்கூடிய மீன்களிலேயே இது மிகவும் சுவையானது என்று கருதப்பட்டாலும்,  தர வரிசையில் இது இரண்டாம் இடத்தையே பெறுகிறது. இதில் கருங்கொத்து மீன், வெள்ளிக்கொத்து மீன் என வகைகள் உள்ளன, குழம்பு, பொரியல் அல்லது ஆவியில் வேகவைத்துச் சாப்பிட இது ஒரு அற்புதமான மீன்.

அயிரை மீன் (Loaches):  இந்தச் சிறிய மீன்களை  மீன் குழம்பில் சமைக்கும் போது மிகவும் சுவையாக இருக்கும்.   பரவலான ரசிகர் பட்டாளம் உள்ளது.  அயிரை மீன் மிகச்சிறிய நன்னீர் மீன் வகையாகும்.  எலும்பு மற்றும் பற்கள் பலப்பட எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் எளிதாகக் கிடைக்கிறது.   ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் (Omega-3) இதயத்தை ஆரோக்கியமாக வைத்து, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.  மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, நரம்பியல் ஆரோக்கியத்தைப் பேண உதவுகிறது.  இதில் உள்ள துத்தநாகம் (Zinc) மற்றும் இரும்புச்சத்து (Iron) உடலுக்குத் தேவையான ஆற்றலையும், நோய் எதிர்ப்புச் சக்தியையும் தருகிறது. வைட்டமின் ஏ மற்றும் டி நிறைந்துள்ளதால், கண் பார்வை தெளிவு பெறவும், தோல் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகின்றன. 

ஓங்கில் டால்பின்கள் Dolphin:

 ஆற்று ஓங்கில் அக்டோபர் 5, 2009 அன்று இந்திய தேசிய நீர் விலங்காக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது, உயிரினங்களின் மனிதனை அடுத்து அறிவுத் திறன் உடைய உயிரினங்களில் முக்கியமான டால்ஃபின் மீன்களிடம் இந்தப் பழக்கம் உள்ளது என்றால் அது மிகவும் ஆச்சரியமான விடயமாகும். டால்ஃபின்கள் தனித்துவமான ஒலியலைகளை இதற்குப் பயன்படுத்துகின்றன. அதாவது டால்ஃபின் கன்றுகள் தனது தாயை அழைப்பதற்கு ஒவ்வொன்றும் வித்தியாசமான ஒலியலைகளை உபயோகிக்கின்றன. இதே உபாயத்தை ஆண் டால்ஃபின்கள் தனது ஜோடியை அழைப்பதற்கும் பயன்படுத்துகின்றன.

ஓங்கில் (Dolphin): ஓங்கில் என்பது நீரில் வாழும் ஒரு பாலூட்டி ஆகும். இவை திமிங்கலம் மற்றும் கடற்பன்றிக்கு நெருக்கமான இனத்தைச் சேர்ந்தவை. பதினேழு வகையான பேரினங்களில், சுமார் நாற்பது வகையான ஓங்கில்

இனங்கள் உள்ளன. டால்பின்கள் ஊனுண்ணிகள் ஆகும். இவை மீன்களை உணவாகக் கொள்கின்றன. பொதுவாக இவை 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. ஓங்கில்கள் அறிவுக் கூர்மை வாய்ந்த விலங்குகளில் ஒன்றாகும். இவை மனிதர்களுடன் நன்கு பழகுகின்றன. பெரும்பாலான டால்பின்கள் நீரின் அடியில் மற்றும் வெளியே இருபகுதியிலும் தீவிர கண்பார்வை கொண்டவை. அவைகள் மனித விட பத்து மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட அதிர் வெண்களை கேட்க முடியும். டால்பின்கள் மிமிக்ரி கூட செய்யும்!

பறக்கும் மீன் எக்சோசீடசு (Exocoetus): பறக்கும் மீன் என்பது பறக்கும் மீன் பேரினமாகும். இது ஒரு எலும்பு மீன் வகையினைச் சார்ந்தது. உடல் முழுவதும் வட்டவுறு செதில்களால் மூடப்பட்டிருக்கும். வாய் அகலமானது, தாடைகள் பற்களைக் கொண்டுள்ளன. இது ஒரு கடல் மீன். வால்பகுதியில் வயிற்றுப்புற மடல்  ஹைபோபாடிக் துடுப்பாகக் காணப்படும்.

மீன்கள், இறால் மற்றும் கடல் உணவுகள் சர்வதேச சந்தையில் அதிக தேவை உள்ளவை. மீன் ஏற்றுமதி மூலம் நாடுகள் கணிசமான அந்நியச் செலாவணியை ஈட்டுகின்றன. மீன்பிடித்தல், மீன் பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல் மற்றும் மீன் குஞ்சு பொரிப்பகங்கள் மூலம் கிராமப்புற மற்றும் கடலோர மக்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புடன் மீன் வளர்ப்பை இணைப்பதன் மூலம் நிலத்தின் பயன்பாடு மேம்படுத்தப்பட்டு, குறைந்த செலவில் கூடுதல் வருமானம் கிடைக்கிறது. மீன்கள் மற்றும் மீன்வளர்ப்பு (Aquaculture) துறை உணவு பாதுகாப்பு, ஏற்றுமதி வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்குவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்களிக்கிறது.  இந்தியாவில் மீன்வளத் துறையை மேம்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  மீன்பிடித் தொழில் பல லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. சுற்றுச்சூழல் சமநிலை, நீரியல் சூழலை சமநிலைப்படுத்த மீன்கள் உதவுகின்றன.  மீன்கள் மனித வாழ்வுக்கும் இயற்கைக்கும் இன்றியமையாத உயிரினங்களாகும். அவற்றின் வாழ்க்கை முறையையும், நீரின் முக்கியத்துவத்தையும் அறிந்து பாதுகாப்பது மனிதனின் கடமையாகும். நீர்நிலைகளை தூய்மையாக வைத்தல், அதிகப்படியான மீன்பிடியைத் தவிர்த்தல் போன்ற செயல்களின் மூலம் மீன்வளத்தையும் இயற்கை வளத்தையும் பாதுகாக்கலாம்.

*****

(Thanks to  ChatGPT, http://ta.wikipedia.org/s9hc, Britannica, Google Search)

 

You already voted!
5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

117685
Users Today : 12
Total Users : 117685
Views Today : 19
Total views : 448251
Who's Online : 0
Your IP Address : 216.73.217.55

Archives (முந்தைய செய்திகள்)