22 Nov 2019 9:06 pmFeatured

மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி அதிக இடங்களை வென்று முதலிடத்தில் இருந்த நிலையில் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட சிக்கலால், சிவசேனா, பாஜக கூட்டணி முறிந்தது. இதைத் தொடர்ந்து எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ்,சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்காக குறைந்த செயல் திட்டத்தை வகுத்து ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்காக மூன்று கட்சிகளுக்கு இடையே பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளன.
இந்த சூழலில் இன்று மூன்று கட்சிகளின் தலைவர்களும் மும்பையில் கூடி ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், “அனைத்துக் கட்சித் தலைவர்களும் மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்க வேண்டும் என்பதை ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
நாளை (23/11/2019) மூன்று கட்சிகளின் சார்பிலும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெறும் என்றும் ஆலோசனை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருப்பதாகவும். ஆளுநரை எப்போது சந்திப்பது என்பது குறித்து நாளை நாங்கள் முடிவு செய்வோம்” என்றும் தெரிவித்துள்ளார். இழுபறியாக நீடித்து வந்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது என்பதே இப்போதைய நிலை. ஆனால் ஆளுநரை சந்தித்தப்பின் என்ன நடக்கும் என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.






Users Today : 37
Total Users : 119985
Views Today : 40
Total views : 451343
Who's Online : 0
Your IP Address : 216.73.216.186