Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

காதலில் சில பிழைகள் – மீனாட்சி அண்ணாமலை

16 Feb 2022 4:11 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Short Story Pictures annamalai

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-69
படைப்பாளர் - மீனாட்சி அண்ணாமலை, சென்னை

எண்ணெய் கடாயில் பூரியை திரட்டி போட்டுக் கொண்டே, யாழினி  சூடாக சாப்பிடவாம்மா என்று கல்யாணி மகளை அழைத்தாள். வெளிநாட்டில் இருக்கும் என் தோழி போன் செய்கிறாள் என்று அம்மாவுக்கு பதில் சொல்லிக்கொண்டே யாழினி மொட்டை மாடிக்குச் சென்றாள்.

பூரி கரண்டியிலேயே பூரியை கொண்டு வந்த கல்யாணி டைனிங்டேபிளில் உட்கார்ந்திருந்த கணவனை பார்த்து நீங்கள் சாப்பிடுங்கள் என கல்யாணி அன்புடன் கூறினாள்.

மகள் வரட்டும் என்று நாளிதழில் கண்ணை பதித்து கொண்டிருந்தவரை பார்த்து அப்பா மகள் பாசத்திற்கு அளவே இல்லையா என்று கத்தியபடியே கல்யாணி சமையலறைக்குச் சென்றாள்.

பப்ளிக் பிளேசில் மாப்பிள்ளை கை நீட்டி அடித்து விட்டார் என்று மகள் கூறியதும் விசாரணை இல்லாமல் மகளுக்கு விவாகரத்து வாங்கிக் கொடுத்து விட்டீர்கள். நீங்கள் என்னை எத்தனை முறை கைநீட்டி அடித்திருப்பீர்கள். அதற்காக நாம் டைவர்ஸ் வரைக்கும் போய்விட்டோமா என்றாள்.

கல்யாணி நான்கு சுவற்றுக்குள் நடப்பதற்கும் பப்ளிக் ப்ளேசில் நடப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்றார் சுகுமாரன் கோபமாக கல்யாணியைப் பார்த்து.

ஊசி தங்கமாக இருந்தாலும் கண்ணை குத்தினால் வலிக்கத்தானே செய்யும் என்றார். உன் மாப்பிளை தங்கம் தான். ஆனால் ஊசியால் என் பெண்ணை குத்திவிட்டானே, அதுவும் தகாத வார்த்தை என்ற ஊசியால் நீ எருமை மாட்டு ஜென்மம். கடப்பாறைக் கொண்டு குத்தினால் தான் உனக்கு வலிக்கும். ஆனால் என் பெண் மென்மையானவள். குண்டூசியால் குத்தினால் கூட வலி தாங்க மாட்டாள் என்றார் சுகுமாரன்.

கல்யாணி கண்ணில் நீர் தளும்ப, யாழினி கணவனுடன் வாழாமல் அங்குமிங்கும் வீட்டில் நடமாடும் போது எனக்கு மனது வலிக்கிறது. அதனால் தான் கத்தி கூப்பாடு போடுகிறேன் என்றபடி சேலைத் தலைப்பில் கண்ணைத் துடைத்தாள். உங்களுக்கும் வலிக்கும் தானே மகள் எதிரே காட்டிக்கொள்ள மாட்டீர்கள் என்று கணவனின் கண்களைப் பார்த்து கேட்டாள் சுகுமாரனிடமிருந்து பதில் வரவில்லை.

அப்பா நீங்கள் இன்னும் சாப்பிடவில்லையா? ஏன் எனக்காக காத்திருக்கிறீர்களா? என்று கேட்டபடி டைனிங் டேபிளில் யாழினி வந்து அமர்ந்தாள்.

என்னம்மா உன் தோழி என்ன கூறுகிறாள்? என்று சுகுமாரன் கேட்கும் போதே கல்யாணியும், யாழினி உன் முகம் ஏன் வாடியிருக்கிறது என்று கேட்டாள்.

எல்லோருடைய வாழ்விலும் ஏதாவது ஒரு கட்டத்தில் துன்பம் வரும் போலும் என்றபடியே யாழினி பூரியை வாயில் வைத்து சுவைத்தாள்.

தோழி என்றாயே நவியாவா அல்லது சுபாவா என்று சுகுமாரன் கேட்டார். நவியா என்ற யாழினியிடம் அவளுக்கு அப்படி என்ன பெருந்துன்பம் வந்து விட்டது என்றார்?

நவியாவின் கணவன் இருவரும்  இன்ஜினியரிங் படிக்கும் போது அவளை அன்பே! ஆருயிரே! என்று உருக உருக காதலித்தான். அவன் செல்வந்தர் வீட்டு பையன் இவள் மிடில் கிளாஸ் தான். வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியமில்லை இருந்தும் திருமணத்திற்கு பின் அவளை அழைத்துக் கொண்டு வெளி நாட்டுக்கு சென்று விட்டான். நவியாவின் கணவன் அலுவலகத்தில் அவனுடன் வேலை செய்யும் பெண்ணுடன் ஊர் சுற்றுவதை பார்த்து நதியா கணவனிடம் நமக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது, இச்செயல் உங்களுக்கு அசிங்கம் என்று தோன்றவில்லையா? என்று கேட்க பளார் என்று அவளை கன்னத்தில்; அறைந்து விட்டு ஆபிஸ் மேட்டரில் தலையிடாதே என்று சொல்லியிருக்கிறான்.

என் மனைவியாய் உனக்கு நான் எந்த குறையும் இல்லாமல் தானே பார்த்து கொள்கிறேன். பர்சனல் விஷயத்தில் அதிகம் தலையிடாதே. பிடிக்கவில்லை என்றால் இந்தியாவிற்ககே  திரும்பிச் சென்று விடு என்று கூறியுள்ளான்.

உன்னுடைய தோழிக்கு நீ என்ன அறிவுரை கூறினாய் என்று சுகுமாரன் கேட்க, நீ தன்மானத்தோடு வாழவிருப்பினால் அவனை விவாகரத்து செய்து விடு நீயும் படித்திருக்கிறாய் வேலை தேடிக்கொள்ளலாம் என்றேன். என்னுடைய கருத்து தவறானதா? என்று அப்பாவைப் பார்த்து யாழினி கேட்டாள்.

இல்லைதான் என்று நீண்ட பெருமூச்சோடு பதிலளித்த அப்பாவிடம், ஆனால் அவளுடைய பேச்சு என் கூற்றை தவறென காட்டியது என்றாள்.

 ஏன் என்று அம்மா. புருவத்தை சுருக்கியபடி கேட்டாள்.

 அவள் பேசியது என்னை குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது. என்ற யாழினியிடம் விஷயத்தைக் கூறு அவள் பழமைவாதியா? இல்லை புதுமைவாதியா என்று   நான்  கூறி விடுகிறேன். என்று பதிலளித்தபடி அப்பா டிபன் சாப்பிட்ட கையை கழுவ சென்றார்.

என் கணவன் அடுத்த பெண்ணை நாட காரணம் அவருக்கு வேண்டிய சுகங்களை  மனைவியாக நான் கொடுக்க தவறிவிட்டேனா? என் மீதும் ஏதாவது குறைகள் இருக்கின்றதா? என்று என்னை பல கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்றாள்.

நீ கூறியது போல் விவாகரத்து பெற்று விட்டால் என் வாழ்க்கை சரியாகிவிடுமா? இந்தியாவிற்கு வந்தால் நீ தானே அவனை தேர்ந்த்தெடுத்தாய் என்று என் பெற்றோர்கள் கேள்வி கணைகளை அள்ளி வீசுவார்கள்.

 அவன் முடிவு என்றைக்காவது ஒரு நாள் மாறுமல்லவா? அதுவரை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்ற நவியா விம்மியபடியே போனை துண்டித்து விட்டாள் என யாழினி கூறி முடித்தாள்.

 லேசான புன்முறுவலுடன் கல்யாணி மகளை பார்த்து உன்னுடைய கதைக்கும் உன்தோழியின் கதைக்கும் நூலிழைதான் வித்தியாசம் அப்பாவும் பெண்ணும் பூதக்கண்ணாடி போட்டுக் கொண்டு எல்லா செயல்களையும் பெரிதாகவே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றாள்.

யாழினியின் தோழி விவாகரத்து பெறாமல் யோசிக்க காரணம் அவருடன் நான்கு வருடங்கள் வாழ்ந்திருக்கிறாள். ஒரு குழந்தையும் இருக்கிறது. ஆனால் நம்பெண் காதலித்து திருமணம் செய்யவில்லையே! மாப்பிள்ளையுடன் ஒரு வருடம் கூட சேர்ந்து வாழவில்லையே என்றார் சுகுமாரன் .

மியூட்சுவல் டைவர்ஸ் பெற்றுக் கொள்ளலாம் என்று யாழினி கேட்டதற்கு மாப்பிள்ளை பதில் கூறாமல் கையெழுத்து போட்டு விட்டாரே இதுவரை எந்த கேள்வியும் மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து வரவில்லையே? இதுதான் உன் மாப்பிள்ளையின் தராதரம் என்றார்.

எதிலும் குறையை மட்டுமே காண்பவர்களுக்கு ரசிக்க தெரியாது. ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு குறைகள் தெரியாது. என்ற கல்யாணி உங்களுடைய பெண் முதல் ரகம். இரண்டாவது ரகம் உங்களுடைய மாப்பிள்ளை என்றாள் கல்யாணி. முடிந்து போன கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தபின் நீ எதற்கு குப்பையை கிளறிக் கொண்டிருக்கிறாய் என்று சுகுமாரன் பார்த்து மனைவியை கடுமையாக கேட்டார்.

யாழினி தன் அப்பாவிடம் தன்னுடைய கல்லூரி தோழியின் திருமண விழாவிற்கு தோழிகளுடன் வெளியூர் செல்ல இருப்பதாக கூறினாள். ஆபீஸ் செல்வதும் வீட்டிற்கு வருவதுமாக இருந்த தன் மகளுக்கு மாற்றம் வரட்டும் என்று திருமணத்திற்கு செல்ல அவரும் அனுமதித்தார்.

 நகமும் சதையுமாக வாழ்ந்த பெற்றோர் இப்போது எலியும் பூனையுமாக மாறி வீண் விவாதம் செய்து கொண்டிருக்கின்றனர், என்னால் பெற்றோருக்கு மன நிம்மதி குறைந்து போனதா?  நான் அவசரப்பட்டு விட்டேனா? தோழி நவியா கூறியதுபோல் பொறுமையாக சில காலம் இருந்திருக்கலாமா? என பலவிதமான சிந்தனையுடன் பயணித்துக் கொண்டிருந்தாள்.

 திருமண மண்டபத்தில் உட்கார்ந்த கொண்டு மணமேடையை பார்த்துக் கொண்டிருக்கையில், மாப்பிள்ளையின் பக்கத்தில் செந்திலும் அவனுடைய நண்பர்களும் பரிசு பொருட்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

 செந்திலை பார்த்த மாத்திரத்தில் அவளையும் மீறி சட்டென்று புன்னகைத்த யாழினியின் முகத்தில் உடனே சோகம் கவ்விக் கொண்டது.

இளகிய மனம் கொண்ட அவள் செந்திலிடம் சென்று எப்படி இருக்கிறீர்கள்? என்றாள் .அதிர்ச்சியுற்ற செந்தில் வாயை திறந்து பேசாமல் உம்… என்று கூறி  பற்கள் வெளியில் தெரியாமல் சிரித்தான்.

திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டா யாழினிக்கு சிரித்துக் கொண்டே எனக்கு திருமணம் நடந்து விட்டதே என்று செந்தில் வாயைத் திறந்து பதில் கூறினான்.

 மேடம் உங்களுக்கு திருமணமாகி விட்டதா? என்று நக்கலுடன் கேட்டான்.

 உங்களால் ஏற்பட்ட காயம் இன்னும் ஆறவில்லை நானும் விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்றாள்.

எங்கே  உங்களின் மனைவி என்று வார்த்தையில் அழுத்தம் கொடுத்து யாழினி கேட்டாள். என்னுடைய அழகான மனைவி இந்தக் கூட்டத்தில் தான் இருக்கிறாள். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்றான். தெரியவில்லை. நீங்களே கையை காண்பித்து யாரென்று காட்டுங்கள் என்றாள். சரி என் செல்லில் காண்பிக்கிறேன் என்றுகூ றி அவர்கள் திருமண போட்டோவை காண்பித்தான்.

பதட்டத்துடன் கண்ணீரை உள்ளடக்கிக் கொண்டு போட்டோவை பார்த்தாள். போட்டோவில் இருப்பது தானே தான் என்றதும் தன்னை அறியாமல் கண்ணீர் துளிகள் கன்னத்தை தடவிக் கொண்டு மார்ப்பில் வந்து விழுந்தது. அழுகையுடன் கூடிய புன்னகை முகத்தில் தெரிந்தது.

உங்களுக்கு செல்லில் பல முறை மெசேஜ் அனுப்பியிருந்தேன். ஏன் பதில் இல்லை என்றவனுக்கு செல் நம்பரை மாற்றி விட்டேன் என்றாள்.

வீட்டிற்கு வாருங்கள் என்று யாழினி கூப்பிட மறுப்புக் கூறாமல் சரி என்றான்.

இருவரையும் பார்த்த யாழினியின் பெற்றோர்கள் ஒரு கணம் தன்னிலை மறந்து பின் உயிர் பெற்றனர். நீண்ட பெருமூச்சை வெளியே கொணர்ந்த பின் வாருங்கள் என்றழைத்தனர்.

இருவரும் காலில் விழுந்தும் மின்சாரம் தாக்கியது போல் கல்யாணியும் சுகுமாரனும் தங்களது கைகளை இறுக பற்றிக் கொண்டனர்.

உங்களின் வீட்டிற்கு செல்ல நல்ல நாள் பார்க்கவா மாப்பிளை என்று சுகுமாரன் நா தழுதழுக்க கேட்டார்.

செந்தில் இனி நமக்கு  எல்லா நாளும் திருநாள் தானே என்று யாழினி கேட்டாள்.  பெற்றோர்கள் இருவரும் தங்களின் பிழைகளை இந்த சின்னஞ்சிறுசுகள் எப்படி திருத்தம் செய்தனர் என்று விடை தெரியாமல் ஆயிரம் யோசனைகளோடு உலா வந்து கொண்டிருந்தனர்.

You already voted!
4.2 30 votes
Article Rating
Subscribe
Notify of
guest
114 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
புருஷோத்தமன் பெ
புருஷோத்தமன் பெ
2 years ago

இம் உம்…ஒரு நிலையில் பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் நினைவுக்கு வந்தது.. பெயர்கள் நிறைய உள்ள கதைகள் எனக்கு படிக்க புரிய நிறைய நேரம் ஆகும்.. திரும்ப படிக்க வேண்டும்… நான் ஒரு ஆணாக, அவள் கல்யாணம் முறிந்து தனி நபராக இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ.. திரும்ப படித்தேன்.. திரும்ப தலைப்பையும் படித்தேன்…தலைப்பை பார்த்து தானே கதையை படிக்க தேர்தெடுத்தேன்… பல தரப்பட்ட எண்ணங்கள்..பிழை என்பது ஊடலோ… ஏன் நமக்கு அடிக்க தோன்றுகிறது… ஆண் என்றாலும் பெண் என்றாலும்.. சில நேரங்களில் வெளி மனிதர் சண்டைகளிலும் கூட ஒருவர் ஒருவர் அடிப்பதை காண்கிறோம்… இல்லை பாத்திரத்தை தூக்கி போடுகிறோம்… கோபம் ஆதங்கம் ஆத்திரம்.. இதற்கு நாம் வேறு நல்ல வடிகால் அமைக்க வேண்டும்..

Meenatchi Annamalai
Meenatchi Annamalai

தங்களின் கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. மிக்க நன்றி🙏.

A MAHALAKSHMI
A MAHALAKSHMI
2 years ago

Excellant Story play. Wishes to writer Mrs.Meenakshi Annamalai.

Meenatchi Annamalai
Meenatchi Annamalai
Reply to  A MAHALAKSHMI
2 years ago

தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி🙏

N.Murugesan
N.Murugesan
2 years ago

Wonderful story .Best wishes for more creations and all duccess

Meenatchi Annamalai
Meenatchi Annamalai
Reply to  N.Murugesan
2 years ago

Thank you🌹

Meenatchi Annamalai
Meenatchi Annamalai
Reply to  N.Murugesan
2 years ago

Thankyousir

Sivakumar
Sivakumar
2 years ago

There is no such thing as rich or poor – but only persons who know how to resolve their personal issues keeping their long time perspective in mind…………. Best Wishes to the Author

Meenatchi Annamalai
Meenatchi Annamalai
Reply to  Sivakumar
2 years ago

Well said sir… thanks

Venkataramanan
Venkataramanan
2 years ago

Excellent story

Meenatchi Annamalai
Meenatchi Annamalai
Reply to  Venkataramanan
2 years ago

Thank you🙏. Sir

Natarajan
Natarajan
2 years ago

கல்யாணி போல அமைதியாக இருந்தால் மற்றும் போதாது – தன் சொந்த கருத்தை நம் அடுத்த தலைமுறைக்கு மெதுவாக புரியவைக்கனும்

Meenatchi Annamalai
Meenatchi Annamalai
Reply to  Natarajan
2 years ago

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி🙏

Harmaan
Harmaan
2 years ago

Excellent story – with a better perspective – could have been better if it had come with a longer narrative

Meenatchi Annamalai
Meenatchi Annamalai
Reply to  Harmaan
2 years ago

Thank you🙏 sir

சமீர் அஹ்மது
சமீர் அஹ்மது
2 years ago

வித்தியாசமான கதை படைப்பு

Meenatchi Annamalai
Meenatchi Annamalai

மகிழ்ச்சி😊

உர்மத் சுல்தானா
உர்மத் சுல்தானா
2 years ago

அருமையான கதை – வாழ்த்துக்கள்

Meenatchi Annamalai
Meenatchi Annamalai

மிக்க நன்றி🙏

ச.கல்யாணசுந்தரம்
ச.கல்யாணசுந்தரம்
2 years ago

மிக அருமையான கதை.
”விவாகரத்து” எனபதை ரத்து செய்வதும் நம்
கையில்தான் உள்ளது என்பதை உணர்த்தியது
அருமை.

வாழ்வில் குறைகளும் ரசிக்கும் தன்மையும்
எதிரிகள்தான் என்ற கருத்து சமுதாயத்திற்கு
இல்லற வாழ்க்கையின் இரகசியத்தை சொல்வது போல் இக்கதை அமைந்துள்ளது
மிகச்சிறப்பு.

இக்கதை போல் மேலும் பல படைக்க வாழ்த்துக்கள்! 💐💐

Meenatchi Annamalai
Meenatchi Annamalai

தங்களின் கருத்து வித்தியாசமாக இருந்தது. மிக்க நன்றி🙏.

Anandamani
Anandamani
2 years ago

Story is good.

Meenatchi Annamalai
Meenatchi Annamalai
Reply to  Anandamani
2 years ago

Thank you🙏.

B. Sundararajan
B. Sundararajan
2 years ago

இந்த கதை யதார்த்தத்தை தோல் உரித்துக் காண்பிக்கிறது. இது தான் உண்மை. வாழ்க்கையில் educated and well educated என்று வித்யாசமே இல்லை. வாழத்தெரிந்தவன்.. வாழத் தெரியாதவன் என்கின்ற வித்யாசம் மட்டுமே உண்டு. வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் common, but who wins is the matter.

Meenatchi Annamalai
Meenatchi Annamalai
Reply to  B. Sundararajan
2 years ago

தங்களின் விமர்சனம் என்னை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது நன்றி🙏.

K balasubramanian
K balasubramanian
2 years ago

K balasubramanian

புஷ்பா லக்ஷ்மீபதி. திருமயிலை
புஷ்பா லக்ஷ்மீபதி. திருமயிலை
2 years ago

காலத்திற்கேற்ற சிறந்த கதை. கருத்தை சமுதாயம் உணர்வது நன்று. பாராட்டுகள். எழுத்தாளர் இதுபோன்ற படைப்புகளை மென்மேலும் வழங்க வேண்டுகின்றேன். புஷ்பா லக்ஷ்மீபதி. திருமயிலை

Meenatchi Annamalai
Meenatchi Annamalai

மிக்க நன்றி🙏

இலக்குமீபதி. திருமயிலை
இலக்குமீபதி. திருமயிலை
2 years ago

மிகசிறந்த கதை பாங்கு. எழுத்தாளர் நம்மை அறியாமலேயே குடும்பத்திற்குள் அழைத்துச்செல்கிறார். சுமுகமான முடிவு. இன்றைய காலகட்டதில் விவாகரத்து கோறும் ஒவொருவரும் உணரவேண்டிய உன்னதமான கருத்து. பாராட்டுக்கள்

Meenatchi Annamalai
Meenatchi Annamalai

தங்களின் கருத்தை ஏற்றுக் கொண்டேன். நன்றி🙏

Perumal. P
Perumal. P
2 years ago

Very nice story. Yes it is possible but well, educated women never accept.

Meenatchi Annamalai
Meenatchi Annamalai
Reply to  Perumal. P
2 years ago

Thank you❤🙏

Meenatchi Annamalai
Meenatchi Annamalai
Reply to  Perumal. P
2 years ago

Thank🙏🌹 you

Meenatchi Annamalai
Meenatchi Annamalai
Reply to  Perumal. P
2 years ago

Thank you🙏🌹

R Balavijayalakshmi
R Balavijayalakshmi
2 years ago

👍👍👍👍👍👍

Meenatchi Annamalai
Meenatchi Annamalai
Reply to  R Balavijayalakshmi
2 years ago

Thank you🙏

R Balavijayalakshmi
R Balavijayalakshmi
2 years ago

அருமையான கதை. தற்காலத்திற்க்கு ஏற்ற கதை. புதிய மணமான தம்பதியர் அவசியம் படிக்க வேண்டிய கதை.

Meenatchi Annamalai
Meenatchi Annamalai
Reply to  R Balavijayalakshmi
2 years ago

நன்றி🙏💕

JOSEPH Gandhi
JOSEPH Gandhi
2 years ago

அருமையான நல்ல தரமான கதை.
இக்கால பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல புத்திமதிகளைக்
கூறி அவர்கள் சொல்வதின் உண்மைத்தன்மையை ஆய்ந்து அறிந்து விவாகரத்து வரை செல்லாமல் விட்டுக்கொடுத்து வாழ வழிகாட்டியாக இருக்கவேண்டும்.

Meenatchi Annamalai
Meenatchi Annamalai
Reply to  JOSEPH Gandhi
2 years ago

தங்களுடைய விளக்கம் மிக அருமை நன்றி🙏💕

ஹர்ஷத்
ஹர்ஷத்
2 years ago

சூப்பரோ….. சூப்பர்……

Meenatchi Annamalai
Meenatchi Annamalai
Reply to  ஹர்ஷத்
2 years ago

மிக்க நன்றி

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092530
Users Today : 4
Total Users : 92530
Views Today : 6
Total views : 410193
Who's Online : 0
Your IP Address : 18.191.211.66

Archives (முந்தைய செய்திகள்)