Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

ஆட்டக்காரி – க. கவி பாரதி

15 Feb 2022 9:23 pmFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Short Story Pictures aatakari

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-58
படைப்பாளர் - க.கவி பாரதி-லால்குடி

 “ஏ! எல்லா இங்கப் பாருங்கடி, நம்ம ஆட போறதிலேயே இதாண்டி பெரிய திருவிழா, சுத்துப்பட்டில இருக்குற எல்லா கிராமத்துல இருந்தும் வருவானுங்க , நீங்க ஆடுற ஆட்டத்துல காசு மழ கொட்டணும் டி, கொட்டணும், என்ன புரிதுல “என்று ஆண்மை கலந்த பெண்ணின் குரல் கேட்டு அலங்கரித்துக்கொண்டிருந்த அனைவரும் திரும்பினர். “அது சரி மயிலு எங்க டி, அவ ஆட்டத்த பாகத்தான் கூட்டம் எறும்பு மாதிரி குவிஞ்சுருக்கு “என்று கூறிக்கொண்டே நடந்து அங்குமிங்கும் தேடினாள் அந்த திருநங்கை.

“ஏலே, பெரியக்கா, நாங்களா ஓ கண்ணுக்கு தெரியல, மயிலுதான் தெரிராலோ? “என்று கொஞ்சலுடன் சிணுங்கிக் கொண்டே கேட்டாள் கண்ணாடி பார்த்து முகத்திற்கு பவுடர் பூசிக்கொண்டிருந்தவள்.

“ இந்த சிணுங்கல வெளிய காமி, அடுத்த திருவிழால ஒன்னோட ஆட்டத்த பாக்க மனுசாளுங்க குவிவானுங்க “என்று கூறிக்கொண்டே அங்கு இருந்த ஒரு அறையில் நுழைய சென்றாள் திருநங்கை.

“ ஹும், ஹும் “ என்று அலுத்துக்கொண்டு மீண்டும் பவுடரை  அப்பிக்கொள்ள ஆரம்பித்தாள் அந்த பெண்.

“ இந்தாடி மயிலு,  ஓன்  ஒப்பனைல முடிஞ்சுதுனா வெளிய வாடி, வெளிய ஒரே ஆரவாரம் கதவ ஒடச்சு வந்தாலும் வந்துருவானுங்க “ என்று கிண்டலாக கூறினாள் திருநங்கை.

“எனக்கு எல்லா முடிஞ்சு, மத்தவளா தயாரா? “ என்று கேட்டாள் மயிலு.

“ எல்லா சிறுசுகளும் ஆர்வமா இருக்காளுக, வா போலாம் “என்று கையை பிடித்து இழுத்துக்கொண்டு அறையை விட்டு வெளிய வந்து மற்ற பெண்களையும் அழைத்துக்கொண்டு மேடைக்கு வந்து விட்டுவிட்டு அவள் கீழே இறங்கினாள். எக்கச்சக்கமான கூட்டம் பெரியவர்கள், சிறியவர்கள், பொக்கை வாய் கிழடுகள், கைச்சப்பும் குழந்தை, இளைஞர் இளைஞிகள்,  மதுபிரியர்கள் என அனைவரும் கூடிவிட்டனர்.ஏற்கனவே காதை கிழிக்கும் சத்தம் பாட்டு போட்டவுடன்  பாட்டையே விஞ்சியது. ஆடும் ஆட்டம் மேடையை மட்டும் குலுக்கவில்லை தரையே அதிரும்படி குலுக்கியது. ஆட்டத்தின் வேகம் அதிகமாக ஆக வெடலைப்பயல்கள் குடிமகன்களின் ஆட்டமும் அத்துமீற துவங்கியது. சட்டைப்பையிலிருந்து பணம் காற்றில் பறக்க ஆரம்பித்தது. நேரம் ஆக ஆக வேகம் எடுக்க எடுக்க  மேடையை சூழ்ந்தனர், சிறிது நேரத்தில் மேடை மேலே ஏறிவிட்டனர். ஆனால் இது புதிதல்ல எப்பொழுதும் நடப்பவைதான். சில அத்துமீறலும், சில தகராறும் கூட சில சமயம் நீங்களும்.

கடந்த பதினைந்து வருஷக்காலம் நடனக்கலையில் சுற்றுவட்டாரத்தில் பெரும் புகழ்பெற்ற  மயிலு, மேடையில் ஏறினாள் இறங்கும்வரை அசராதவள்,  திடிரென்று அவள் வேகம் குறைந்தது கண்கள் நிலைகுலைந்தன.

மேடையைவிட்டு அகல நினைத்தவளை, கூட ஆடிக்கொண்டிருந்த பெண்கள் தடுக்க முயன்றனர். உதறிவிட்டு செல்லத் துணிந்தவளை ஒரு நடுத்தரவயது ஆண் போதையில் அவள் கையை இறுக்கப் பிடித்துக்கொண்டு, “ எங்க டி போற, வந்து என் கூட ஆடு டி “ என்று போதையில் உளறினான். அவனை பெரு முயற்சியோடு மூக்கில் ஒரு குத்து குத்திவிட்டு ஓடினாள். “ அயோ !ரத்தம், ரத்தம் “என்று அலறியவனை பொருட்படுத்தாமல் அங்கிருந்து ஓடி சென்று அலங்கார செய்த அறைக்குள் நுழைந்து கதவைத் திறந்து பார்த்தனர். நல்லவேளை உள்தாப்பாள் போடவில்லை.பின்னாடி ஓடிவந்த திருநங்கை வேகமாக கதவை எட்டி உதைத்து கத்த ஆரம்பித்தாள், “ஏண்டி, பொட்டசிறுக்கி, ஆம்பளையா அடிக்கிற அளவுக்கு என்னடி திமிரு உனக்கு, அவனுங்க இல்லன்னா ஓன் வயித்த எப்படி நெரப்புவ இந்த ஆடுகாலிய நம்பி இம்மா பெரிய திருவிழாக்கு வந்து, ஏன் வயித்துல நெருப்ப அள்ளி கொட்டிக்கிட்டேனே, நாசமா போடி, எங்கயாச்சு தொலைஞ்சு போ, சேத்துத்தொல “ என்று தலையையடித்துக்கொண்டு சபித்துக்கொண்டே வெளியே சென்றாள்.

மயிலு ஏனோ ஓ.. என்று அழுதுக்கொண்டிருந்தாள். அவள் எத்தனையோ வசவுகளை வாங்கியிருக்கிறாள். அப்பொழுதெல்லாம்  அழாதவள், இப்பொழுது ஏன் அழுகிறாள் என்று ஒரு சிறுபெண் ஆவளுடன் ஆடியவள் அவளிடம் பயிற்சிபெற்றவள் அவள் அருகே சென்று தோலைப் பிடித்து “அக்கா, நீ அவ திட்ரனாலயா அலற “ என்று கேட்டாள்.

“ம்.. ம்.. “ என்று கூறிக்கொண்டே இல்லை என்று தலையாட்டினாள்.

“ பின்ன “ என்று கண்கள் கலங்க கேட்டாள்.

“ மா… “என்று முனுகினால் அழுகையுடன். அவள் கூறியது புரியாமல் “என்ன “என்று மீண்டும் கேட்டாள்.

“ ஏன் அம்மா, அப்பா “ என்று உறக்க கூறி முகத்தைப் புதைத்து கொண்டு அழுதாள்.

“என்ன கா சொல்ற, உனக்கு குடும்பம் இருக்கா, பின்ன ஏன் இங்க… “ என்று பரிதாபமாக கேட்டாள்.

“ம் “ என்று கூறிவிட்டு அவள் கண்களை மயிலு பார்த்தாள். அவளுக்கு மயிலு கண்களில் அவளது கடந்தக்காலம் தெரிந்ததோ என்னவோ….

“அம்மா, அம்மா “ என்று அமைதியான மாலைப்பொழுதில் , தெருவில் கண்முன் தெரியாமல் அலறிக்கொண்டு வந்து புத்தகப்பையை வாசலிலையே போட்டுவிட்டு உள்ளே ஓடினாள் மயிலு. சூரியன் மறைந்து சிறு ஒளி இருந்தது.மாடத்திலுருந்து பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தவள், பாத்திரத்தை கீழே போட்டு ஓடி வந்தாள், “ஏண்டி என்னாச்சு, பள்ளிக்கூடத்த விட்டு லேட்டாதான் வரன்னு சொன்ன, அடி என்னடி கோலம் இது “என்று அவளைப் பார்த்து அப்படியே நின்றாள்.”அம்மா “ என்று ஓடிச்சென்று கட்டிக்கொண்டு அழுதாள்.

அவள் தலைமுடி கலைந்து, ஆடை அங்கங்கே கிழிந்து, கழுத்தில் கோடு கோடாக கீறி இருப்பதை பார்த்துவிட்டு செய்தியை உணர்ந்தவளாய் வேகமாக தள்ளிவிட்டு “அடி, அசடே “என்று தலையில் அடித்துக்கொண்டு கீழே விழுந்து கதறினாள். தெருவே வாசலில் கூடிற்று, “வயசுக்கு வந்த பொம்பளபிள்ளைய படிக்க அனுப்பாதனு ஊர்ல இருக்கவன்ல சொன்னானே, அந்த கடவுள் நல்ல பாடம் புகட்டிருச்சு, ஏன் குலத்தையே அழுகாகிருச்சே “என்று புலம்பிவிட்டு ஆவேசம் வந்தவளாய் வெளக்கமாற்றை எடுத்து அவளை அடித்துக்கொண்டே வஞ்சித்தாள்.

“ஏண்டி இங்க வந்த, எங்கயாச்சும் போய் செத்து தொலையாம, பிஞ்சுப் போன செருப்ப கூட வீட்ல வைக்காதவருடி ஒங்கப்பா “, என்று வீட்டைவிட்டு துரத்தினாள். வாசலில் நின்றுக்கொண்டிருந்தவள் “மா… “என்று தேமிக்கொண்டே அழைத்தாள். கோவம் தணிந்து அழைப்பாள் என்று எண்ணியதில் ஏமாற்றம் தான் மிஞ்சியது. “ஒங்கப்பா வரங்குலயும் போயிரு இல்ல அவரு கையாலேயே செத்துருவ “. “என்ன பாத்துட்டு இருக்கீங்க இவள அடிச்சு தொரத்துங்க “என்று வெளியில் வந்து தெரு மக்களிடம் கூறி விட்டு உள்ளே சென்று கதவை அடித்து சாத்தினாள்.

இரக்கமற்ற மனங்கள் தெருவின் சாபக்கேடு என்றும் அந்த தெரு ஜாதியின் பேரில் செய்த அக்கிரமம் அவர்கள் மனிதாபிமானத்தை மறந்துவிட்டு அவளை உதைத்து கீழே தள்ளி வயிற்றில் மிதித்து தலை மயிரை அறுத்து வீட்டின், வேலையில் உள்ள சொந்தக்கோபத்தையெல்லாம் காட்டிய திருப்பிதியில் சென்றனர்.

“ அன்னைக்கே செத்தர்லானுதான் நெனச்சே. ஆனா நான் ஏன் சாகனும், என்ன அந்த நிலைமைக்கு ஆக்குன மிருகம் உயிரோட இருக்கும்போது, அந்த நிலைமைக்கு யார் காரணம்ன்னு ஒரு வார்த்தக்கூட கேக்காம என்ன அடிச்சு தொரத்துநோங்க சந்தோசமா இருக்கும்போது. பெத்தவங்களும், இந்த சமுதாயமும் என்ன நிராகரிச்சிட்டா செத்தர்னுமா, இல்ல கடைசி சந்தர்ப்பம்னு ஒன்னு இருக்கு அதா நா, நா என்ன கைவிட்டுட்டா அதா என்னோட தோல்வி. அதே சமயம் அவன கொன்னுட்டா, அவன மாறி இருக்க எல்லாரும் இல்லாம போயிருவாங்களா, இல்ல காலமுழுக்க இந்த சமுதாயத்துட்ட நா நல்லவன்னு நிரூபிச்சுட்டே இருக்க முடிமா?. பெத்தவங்களே நம்பல மத்தவங்க?..  பசியில சாகக்கடக்குற நிலமைலதான் அக்காவ பாத்தேன். அப்பறந்த இதெல்லாம்.

எனக்கு ஒன்னு மட்டும்தான் புரில… ஆட்சில வர எல்லா அரசுமே இதுவரை பெண்களுக்கு சலுகை, முன்னுரிமைன்னுதான் குடுக்குறாங்க. பொண்ணுங்க முன்னுரிமை கேக்கல சம உரிமைதான் கேக்குறாங்க, அதுக்குப்பேருதா சமத்துவம். இதுக்கு நம்ம அரசு ஒவ்வரு பொண்ணுக்கும் இலவசமா தற்காப்பு பயிற்சின்னு ஏதாச்சும் ஒரு கலை கட்டாயம்னு ஒரு திட்டம் கொண்டு வந்தா என்ன?... அப்புடி வந்தா எந்த பொண்ணுக்கும் இனி எந்த நிலைமையும் வராது…. இதுக்கும் எதிர்ப்புகள் வரும் ;”இது ஒரு தனிப்பட்ட பொண்ணோட விருப்பம், கட்டாயப்படுத்த முடியாதுனு “ஆனா எந்த பொண்ணுக்கும் இந்த மாறி சூழ்நிலை ஒருமுறையாச்சு வரும்.. இது மாதிரி வரலானாலும் பல நேரங்கள சோதனைக்குடுக்குர மாதிரி  நெறைய தொல்லைகள் வரும்.. அப்போ எல்லா பொண்ணுங்களுக்கு தன்ன காப்பாத்திக்கிற நிலைமை வரும்.

அந்த நிலைமைல அவுங்களுக்கு தோன்ற ஒரே விஷயம் இதுதான். பாதிக்கப்பட்ட எந்த பொண் ண்வேணுனாலும் கூப்ட்டு கேளு, எல்லாருக்கும் இதா தோணுச்சானு.. கண்டிப்பா ஆமான்னுதா சொல்லுவாங்க. ஆனா அவுங்க வீட்டோட கட்டுப்பாடுகள் ;அட்கோடக்கமா இருக்கனும், குனிஞ்ச தல நிமிர கூடாது, சத்தமா பேச கூடாது, அந்த கட்டுப்பாட்ட உடைக்க அந்த பொண்ணால  முடியாது ஆனா அரசால முடியும், சட்டத்தால முடியும், அத பெற்றோர்களும் கேட்டுதான் ஆகணும்…..தெளிஞ்ச தண்ணீல பூக்குற மலர புகழறதும் சாக்கடை தண்ணீல பூக்குற மலர சபிக்கிறதும் மனுசங்க இயல்பு. இதுல பூ மேலயும் தப்பில்ல, சாக்கடை மேலயும் தப்பில்ல, சாக்கடையாக்கின மனுசங்க மேலதான் எல்லா தப்பும்,  ஆனா அனுபவிக்கிறது, ஹும் “என்று பெருமூச்சு விட்டுவிட்டு “நா பாரு என்ன என்னவோ பேசுறேன், நீ போ… “என்று கூறிவிட்டு படுத்தாள் ; அந்த பூ சாக்கடையிலேயே மூழ்கிப்போனது பாவம் அவள்கதையே கேட்ட அப்பெண்ணுக்கு காலையில்தான் தெரிந்தது .அதற்கு காரணம் பெற்றவரை பார்த்த பித்தோ? பாரத்தை இறக்கி வைத்த பூரிப்போ?....

“ பெண் கூந்தலை அலங்கரிக்காத மலர், கடவுளின் பாதத்தை அலங்கரிக்கும் என்பதை மனிதர்கள் மறந்துவிடுவது ஏனோ?... “ (இது உண்மை கதையல்ல, ஆனால் உண்மையாய் இருப்பதில் ஆச்சர்யமில்லை “

You already voted!
3.9 14 votes
Article Rating
Subscribe
Notify of
guest
5 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Shivaranjani
Shivaranjani
2 years ago

Kavi super ma

Dhinesh
Dhinesh
2 years ago

சிறப்பு

Deepan
Deepan
2 years ago

சிறப்பு

நவிலன்
நவிலன்
2 years ago

நகராத மேகமே
நகராத மகளே – நீரினை
சிந்தவேண்டிய நிலைமைவரலாம்
நகருங்கள், நகருங்கள்
மனிதியே
மனிதன் என்ற சொல்லுக்குள் அடங்காதே.

Poornima
Poornima
2 years ago

Nice👌

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092532
Users Today : 6
Total Users : 92532
Views Today : 11
Total views : 410198
Who's Online : 0
Your IP Address : 3.128.199.210

Archives (முந்தைய செய்திகள்)