10 Apr 2025 1:03 amFeatured
ஆண்டு விழா, பட்டிமன்றம், நூல் வெளியீடு
வருகின்ற 13.04.2025 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு டோம்பிவிலி மேற்கிலுள்ள ஜோந்தலே பள்ளியில் வைத்து தென்னரசு மின்னிதழின் (www.thennarasu.net) ஆறாம் ஆண்டு விழா நடைபெறவிருக்கிறது.
விழாவுக்கு தென்னரசு மின்னிதழின் சிறப்பாசிரியரும் மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் தலைவருமான பாவரசு வதிலை பிரதாபன் தலைமை தாங்குகிறார்.
தென்னரசு மின்னிதழின் பொறுப்பாசிரியர் கருவூர் இரா பழனிச்சாமி துவக்கவுரையாற்றுகிறார்.
தென்னரசு மின்னிதழின் துணை ஆசிரியர் வெங்கட் சுப்ரமணியன் வரவேற்புரையாற்ற, முதன்மை ஆசிரியர் வே.சதானந்தன் மகிழ்வுரையும் நன்றியுரையுமாற்றுகிறார்.
வாழ்த்துரை
மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான், மும்பை புறநகர் மாநில திமுக அவைத்தலைவர் ஜேம்ஸ் தேவதாசன் சவுத் இந்தியன் அசோசியேஷன் மேனாள் தலைவர் டி.என்.முத்துகிருஷ்ணன் மும்பை மாநில திமுக. இளைஞர் அணி அமைப்பாளர் ந.வசந்தகுமார், தெ.ஆ.தி.ம.சங்க மேனாள் தலைவர் கே.வி.அசோக்குமார், மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் இரஜகை நிலவன், மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்ற ஆலோசகர் பாவலர் முகவை திருநாதன், பகுத்தறிவாளர் கழக தலைவர் அ.ரவிச்சந்திரன், மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்ற சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சாக்ரடீஸ் கணேசன், டோம்பிவிலி தமிழ் மக்கள் சங்கத் தலைவர் வெ.இராஜேந்திரன், தென்னரசு விளம்பரப் பிரிவு பொறுப்பாளர் வீரை சோ பாபு, தமிழின ரயில் பயணிகள் சங்க பொதுச்செயலாளர் தி.அப்பாதுரை ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்
முன்னிலை
அம்பர்நாத் முத்தமிழ் மன்றச் செயலாளர் முத்தமிழ் தண்டபாணி, கல்யாண் தமிழ் நற்பணி மன்றப் பொருளாளர் க.ஜீவானந்தம் விகடன் குழும பத்திரிக்கையாளர் ஐயம்பெருமாள், வணக்கம் மும்பை வார இதழ் ஆசிரியர் ஜெயா ஆசீர், தமிழ் அறம் செய்திகள் ஆசிரியர் தமிழ் அறம் ராமர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்
சிறப்பு அழைப்பாளர்கள்
P.கிருஷ்ணன், எம்.பி.சிவா, ஜெ ராஜா, எல்.என் ஹரிஹரன், பிரவீனா சேகர், சு.செல்லப்பா, மெஹ்பூப் பாஷா ஷேக், ஆர் டி ராஜன், கோபால் (LIC), முஷ்டாக் அலி, சோ.வேல்முருகன், அருணாச்சலம், அ.வேலையா, L.இரமேஷ் பாபு, பவுல் சத்தியராஜ், கண்ணன் (T.C), பாலமுருகன், அனந்த ரமேஷ். பொன்னையா, எம். அசோக்குமார்,அருண் ஆறுமுகம், திருஞானசுந்தரம், ஜஸ்டின் துரைராஜ், எம்.மகேஷ் (LIC) , எஸ் சாமி , வெங்கடேஷ் (T.C), சிந்து (தினகரன்), இ.பெருமாள் , ரகுநாத பெருமாள், ச. சுரேஷ், தமிழரசன், சூரியநாராயணன், இ முத்து, உ. சுரேஷ், லலிதா பர்குரு, புவனேஸ்வரி, என்.இரத்தினம், பவானி, உமா சுந்தர், ஜெ.கலைச்செல்வன், ரவிமுனியசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர்மற்றும் பல தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்
பட்டிமன்றம்
இன்றைய வாழ்வியல் முறையால் உறவுகள் வளர்ந்துள்ளனவா? தளர்ந்துள்ளனவா? என்றத் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது
பாவலர் நெல்லை பைந்தமிழ் நடுவராக இருந்து நடத்தும் இப்பட்டிமன்றத்தில்
வளர்ந்துள்ளன என்ற தலைப்பில் அணித்தலைவர் கவிஞர் வெங்கட் சுப்ரமணியன், கி,வெங்கடேஷ்,, ஜீனத் நஃபீலா ஆகியோரும்
தளர்ந்துள்ளன என்ற தலைப்பில் அணித்தலைவர் வே.சதானந்தன், தி.சூரியநாராயணன், சுதா ராமர் ஆகியோரும் வாதிடுகின்றனர்
நூல் வெளியீடு
இந்நிகழ்வில் கவிஞர் இரஜகை நிலவனின் ”உறவின் மாறாட்டம்” என்கின்ற சிறுகதை தொகுப்பு நூல் வெளியிடப்படுகிறது ந.வசந்தகுமார் இந்த நூலை வெளியிடுகிறார், கே.வி.அசோக்குமார் முதல் நூலைப் பெற்றுக்கொள்கிறார்
தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தென்னரசு வாசகர்கள் பெருவாரியாக கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி தென்னரசு முதன்மை ஆசிரியர் வே.சதானந்தன், சிறப்பாசிரியர் வதிலை பிரதாபன், பொறுப்பாசிரியர் கருவூர் இரா பழனிச்சாமி, துணை ஆசிரியர் வெங்கட் சுப்ரமணியன், விளம்பரப் பிரிவு பொறுப்பாளர் வீரை சோ பாபு ஆகியோர் அழைக்கின்றனர்
Vazthukal.Good wishes.