17 Sep 2020 10:42 amEditorial

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தமிழ் வளர்ச்சித்துறை சென்னை மற்றும் மயிலாடுதுறை தேனமுதத் தமிழ்ச்சங்கம் இணைந்து தமிழ்த்திரு.முனைவர் வதிலை பிரதாபன் அவர்களுக்கு திருவள்ளுவர் ஆண்டு 2051 ஆவணி 13 மற்றும் 14 ஆம் நாளில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்னும் தலைப்பில் நடைபெற்ற பன்னாட்டு நேரலைக் கவியரங்கத்தின் வழியே அன்னாரின் தமிழிலக்கியப் பணி, தமிழ்த்தொண்டு மற்றும் பொதுநலச் சேவையைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்த்தாய் விருது வழங்கிப் பாராட்டப்பட்டது.

உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் தமிழ்கிழார் கோ.விசயராகவன், தேனமுதத் தமிழ்சங்க நிறுவனத் தலைவர் முனைவர் லதா சந்துரு, அனைத்திந்தியத் தமிழ்ச்சங்க நிறுவனர் சொல்லின் செல்வர் ஆவடிக்குமார், தேனமுதத் தமிழ்ச்சங்கப் பொதுச்செயலாளர் நல்லாசிரியர் ரத்னா ச.ம.மாசிலாமணி, சர்வதேசத் தமிழ்ப் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி ஐக்கிய அரபு அமீரகம் திரு.நாகர்கோயில் சலீம், தேனமுதத் தமிழ்சங்கத் துணைத்தலைவர் கவிமாமணி எழுத்தாளர் விசயலட்சுமி ஆகியோர் பாராட்டி வழங்கிய தமிழ்த்தாய் விருது மும்பை வாழ்த் தமிழர்களுக்குக் கிடைத்த பெருமைக்குரிய ஒன்றாக அறியப் படுகின்றது.
தமிழ்த்தாய் விருது பெற்றுள்ள மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவரும், மும்பை புறநகர் மாநில திமுக துணைச்செயலாளரும் தென்னரசுவின் சிறப்பு ஆசிரியருமான முனைவர் வதிலை பிரதாபன் அவர்களை தென்னரசு குழுமம் வாழ்த்தி மகிழ்கிறது






Users Today : 26
Total Users : 106472
Views Today : 30
Total views : 434199
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37