16 Nov 2022 10:02 pmFeatured

மும்பை மாநகர மற்றும் புறநகர் திமுக நிர்வாகிகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை மும்பை மாநகர மற்றும் புறநகர் திமுக நிர்வாகிகள் இன்று 16.11.2022 அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது மும்பையில் தமிழ்நாடு பவன் கட்டிடம் விரைவில் கட்டப்பட்டு திறக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மராட்டிய மாநிலத்தில் மும்பைக்கு வெளியே நவிமும்பை பகுதியில் குஜராத், கேரளா, ராஜஸ்தான். ஆந்திரா, ஒரிசா போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு அந்தந்த மாநில பவன்கள் அங்கே அமைந்துள்ளன.
இந்த பவன்கள் மும்பை பகுதியில் மராட்டியத்திலும் அந்தந்த மாநிலங்களின் கலாச்சாரம் விளையாட்டு பண்பாடுகளை வளர்க்கவும் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் அந்தந்த மாநில உணவு வகைகளை மராட்டியத்தில் அறிமுகப்படுத்தவும் பெரும் பங்கு வகிக்கின்றன.
அந்த வகையில் தமிழ்நாடு பவன் மும்பைக்கு வெளியே நவிமும்பை பகுதியில் அமைய வேண்டும் என்பதற்காக நிலம் ஏற்கனவே தமிழ்நாடு அரசால் வாங்கப்பட்டுள்ளது. வாங்கப்பட்ட நிலத்தில் விரைவில் கட்டிடம் கட்டி அதனை தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் அவர்களின் திருக்கரங்களால் திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மும்பை புறநகர் மாநில செயலாளர் அலிசேக்மீரான், மும்பை மாநகர திமுக பொறுப்பாளர் கருவூர். இரா பழனிச்சாமி. மும்பை மாநகர அவைத்தலைவர் வே.ம.உத்தமன்.மும்பை மாநில இளைஞரணி அமைப்பாளர் ந. வசந்தகுமார் ஆகியோர் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
அப்போது இத்துறையை சார்ந்த மாண்புமிகு தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு . முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி கே எஸ் இளங்கோவன் ஆலந்தூர் ஆர் எஸ் பாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.
அதுசமயம் கருவூர் இரா.பழனிச்சாமி அவர்கள் தொகுத்த திருக்குறள் மும்மொழி நூல் மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் வழங்கப்பட்ட போது மகிழ்ச்சி தெரிவித்தார்.






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37