Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

களங்கமில்லாக் கதிரவன் – அலிசேக் மீரான்

01 May 2025 3:08 pmFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Pictures alishek bd

திருநெல்வேலியிலிருந்து 'தொட்டுவிடும் தூரத்தில் உள்ள சிறு நகர் ஏர்வாடியில் 1-5-1956-ம் ஆண்டு பிறந்தார் மீரான். அப்பா பெயர் அலிசேக் மன்சூர். பெற்றோர் இவருக்கு மீரான் என்று பெயர் சூட்டினாலும், அம்மா பெயர் அலி பாத்திமா, அப்பாவின் பெயரான அலிசேக் இவரது பெயரோடு இணைத்து அலிசேக் மீரான் என்று அடையாளம் காணப்படுகிறார்.

வசதியான விவசாய குடும்பத்தில் பிறந்தவர். இவரைப் பற்றி எழுவதற்கு முன் இவர்கள் தகப்பனார் அலிசேக் மன்சூர் பற்றி எழுத வேண்டியது அவசியம்

தந்தை அலிசேக் மன்சூர்

அலிசேக் மன்சூர் நெல்லை மாவட்ட திமுக தூண்களில் ஒருவர் ஆவார். காங்கிரஸ் கோட்டையாக இருந்த நெல்லை மாவட்டத்தை திமுக கோட்டையாக மாற்றியவர். அண்ணாவுக்கு மிக நெருக்கமாக இருந்தவர் பல பத்திரிகைகள் நடத்தியவர் சிறந்த எழுத்தாளர். மேடையில் உணர்ச்சிப் பிளம்பாக பேசக்கூடிய ஆற்றல் படைத்தவர், கட்சிக்காக தனது சொத்துகளை செலவு செய்தவர் இப்படி பன்முகம் கொண்டவர் அலிஷேக் மன்சூர்.

திமுக தனது முதல் மாநாட்டை நெல்லையில் நடத்திய போது அந்த மாநாட்டுச் செயலாளராக பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு.

கட்சியின் நட்சத்திர பேச்சாளராக புகழ் பெற்றிருந்த அண்ணா, கலைஞர், பேராசிரியர் க.அன்பழகனார், எம்.ஜி.ஆர், சி.பி சிற்றரசு, மதுரை முத்து போன்றவர்களோடு சகஜமாக பழகும் அளவுக்கு நெருக்கமான நட்பு கொண்டிருந்தார்.

1955 ஆம் ஆண்டு கலைஞர் ஏர்வாடியில் அலிசேக் மன்சூர் வீட்டில் நான்கு நாட்கள் தங்கி இருந்து நெல்லை மாவட்டத் திமுக பிரச்சார கூட்டங்களில் கலந்து கொண்டு இருக்கிறார்.

இதை கலைஞர் 1994 ஆம் ஆண்டு நெல்லையில் நடந்த ஒரு கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார் அவர் உயிருடன் இருக்கும் வரை கலைஞர் பேராசிரியரிடம் இருந்து தங்கள் கைப்பட எழுதி நலம் விசாரிக்கும் கடிதங்கள் வந்து கொண்டிருந்தன என்பது சிறப்பம்சமாகும்.

அலிசேக் மீரான்

கட்சித் தலைவர்கள், கட்சி பிரமுகர்கள், கட்சிக் கூட்டம் என்று திராவிட இயக்கச் சூழலில் வளர்ந்தார் மீரான். பூவோடு சேர்ந்து நாரும் மணம் கொள்ளுவது போல அப்பாவை சந்திக்க வரும் தலைவர்களின் நட்பு சின்ன வயதிலேயே இவருக்கு எளிதாக கிடைத்தது.

பள்ளிப்படிப்பை ஏர்வாடியிலும் பட்டப் படிப்பினை பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் கல்லூரியிலும் முடித்தார். கல்லூரியில் படித்த காலத்தில் திமுகவில் தீவிர ஈடுபாடு காட்டிக் கொண்டிருந்தார். கட்சியில் இருந்த ஆர்வம் காரணமாக கல்லூரியில் படிக்கும் போதே அன்றைய ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளராக இருந்தார் (அன்றைய நெல்லை மாவட்டம் என்பது இன்றைய திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கியது)

அந்த நேரம் மாணவரணி அமைப்பாளராக வைகோ இருந்தார் 1973 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிந்து போனபோது இனி கட்சிக்கு கூட்டம் சேராது என்று பரவலாக பேசப்பட்ட போது துரைமுருகன் ரகுமானை அழைத்து வந்து நெல்லை டவுணில் திமுக மாணவர்களை கூட்டம் நடத்தி கூட்டத்தை வெற்றி பெறச் செய்தார்.

1975 ஆம் ஆண்டு கல்லூரியில் நடந்த மாணவர் தேர்தலில் வெற்றி பெற்று மாணவர் தலைவரானார். சில அரசியல் காரணங்களால் கல்லூரி நிர்வாகம் இவர் மீது கோபத்தில் இருந்தது.

1976 ஆம் ஆண்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு வந்த அண்ணா பிறந்தநாளுக்கு போலீஸ் காவலையும் மீறி நெல்லை ஜங்ஷனில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற போது இவரை போலீஸ் விரட்டியது. ஆனால் மாநகராட்சியில் இருந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு தப்பிச்சென்றார். இதன் காரணமாக கல்லூரியில் இருந்து இவரை சஸ்பெண்ட் செய்தது.

கட்சியில் தீவிரமாக இருந்தாலும் படிப்பில் படு சுட்டியாகவே இருந்தார் அலிஷேக் மீரான்.

தமிழர் படை என்கின்ற அமைப்பு ஏற்படுத்தி அதில் தமிழ், தமிழ் சமுதாய உணர்வு போன்ற கருத்துக்களை கூறி வந்தார்.

கலைஞர் மீது கொண்ட பற்றுக் காரணமாக கலைஞர் கருணாநிதி ரத்ததான மன்றம் நடத்தி இருக்கிறார்.

1971 ஆம் ஆண்டு கூட்டுறவு பற்றிய பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசையும் மாநில அளவில் இரண்டாம் பரிசையும் அப்போதைய சபாநாயகர் சி.பா ஆதித்தனார் சென்னையில் இவருக்கு வழங்கி இருக்கிறார்.

கட்சியில் மகன் காட்டும் தீவிரம் கண்டு கவலை கொண்ட இவரின் தந்தை தனது அன்பு மகன் மீரானை 1978 ஆம் ஆண்டு மும்பை அனுப்பி வைத்தார்.

அந்தக் காலகட்டத்தில் மும்பை திமுகவின் முக்கிய தூண்களில் ஒருவராக இருந்த தியாகராஜனுக்கு கலைஞர் கருணாநிதி சிபாரிசு கடிதம் எழுதி மீரானிடம் கொடுத்திருக்கிறார். மும்பை வந்த மீரான் கடல் உணவு ஏற்றுமதி தொடர்பான டிப்ளமோ படித்துவிட்டு ஏற்கனவே மும்பையில் தொழில் செய்து கொண்டிருந்த தனது மாமனாருக்கு உதவியாக தன்னை இணைத்துக் கொண்டார்.

தனது மாமா மறைந்த தொழிலதிபர் மன்னன் சேட் கவரிங் வளையல்கள் கவரிங் நகைகள் தயாரிப்பதில் மிகவும் புகழ்பெற்று விளங்கினார். இந்தியாவுக்கே கவரிங் நகைகளை அறிமுகப்படுத்தி அந்தத் துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்படுத்தியவர்.

இத்தகைய பெருமை கொண்ட தனது மாமாவிடம் தானும் தொழில் கற்று மாமாவின் துணை நிறுவனமாக தனித் தொழில் செய்யத் தொடங்கினார் மீரான்.

அந்தக் காலகட்டத்தில் இவரது நிறுவனத்தில் 40-க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள்.

அரசியல் வளர்ச்சிக்கு அப்பா காரணம் என்றால் தொழில் வளர்ச்சிக்கு தனது மாமனார் தான் காரணம் என்று பெருமை பொங்க சொல்லுகிறார் மீரான்.

தனது திருமணத்தைப் பற்றி இவர் சொல்லும்போது பிரமிப்பாக இருக்கிறது தனக்கு தொழில் கற்றுத் தந்த ஆசானும் தனது மாமாவுமான மன்னன் சேட்டின் மகள் பாத்திமுத்துவை தான் இவர் திருமணம் செய்துள்ளார்.

இவர்களது திருமணம் சொந்த ஊர் ஏர்வாடியில் நடந்தது. திருமணத்திற்கு மூன்றடைப்பு ஊரிலிருந்து ஏர்வாடி வரை வரவேற்பு வளைவுகள் வைத்து கலைஞர் கருணாநிதி தலைமையில் அன்பில் தர்மலிங்கம், ரகுமான்கான், துரைமுருகன், எஸ்.எஸ்.தென்னரசு போன்றோர் கலந்து கொள்ள வரவேற்புரையை வைகோ நிகழ்த்தி இருக்கிறார்.

அதற்கு முன்னரும் அப்படி ஒரு திருமணம் நடந்ததில்லையென்று வியக்கும் அளவுக்கு கட்சி மாநாடு போல் அவரது திருமணம் நடந்துள்ளது.

இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் என இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். மகன் இம்ரான் பி.இ. (இந்தியா) எம்.எஸ் (யுஎஸ்ஏ), எம்.பி.ஏ முடித்துவிட்டு தற்போது லண்டனில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். இவரது மகள் ரதி லண்டன் பல்கலைக்கழகழகத்தில் முதுகலைப் படிப்பு முடித்தவர்

இவரது மகனுக்கு இரண்டு மகன்களும், மகளுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர்

தெளிந்த நீரோடை போல் ஓடிக் கொண்டிருந்த இவரது வாழ்க்கையில் புனித ஹச் பயணம் முடித்து திரும்பிய இவரது மனைவி பாத்திமா முத்துவின் திடீர் மரணம் 5.7.2003 ஆம் ஆண்டு இவரது வாழ்க்கை புரட்டி போட்டு விட்டது

இல்லற வாழ்விலும் பொதுவாழ்விலும் தனக்கு துணையாக இருந்து தோள் கொடுத்த அன்பு மனைவி பாத்திமாவின் மரணத்தை இன்றளவும் தன்னால் நம்ப முடியவில்லை என்று சொல்லும் போதே இவரது கண்களின் கரையோரத்தில் கண்ணீர் கசிகிறது.

வளர்ந்த குழந்தைகள் அவர்களின் உலகம் வேறு இவரின் தனிமையின் சோகம் காணப் பொறுக்காத பெற்றோர் இவருக்கு மறுமணம் பற்றி பேச ஆரம்பித்தனர் பல இடங்களில் இருந்தும் பெண் வீட்டார் படையெடுத்தனர். நீண்ட யோசனைக்கு பின் பிள்ளைகளின் சம்மதத்துடன் தனது சொந்த ஊரிலிருந்தே கைம்பெண் ஒருவரை மறுமணம் செய்துள்ளார் அலிஷேக் மீரான்.

(சி.ஏ தேர்வில் தேசிய அளவில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்ற மாணவியை பாராட்டி பரிசு தொகை வழங்கியபோது)

1988 ஆம் ஆண்டிலிருந்து திமுக இளைஞரணி அமைப்பாளராக, 1997 ஆம் ஆண்டு திமுக தலைமைக் கழக செயற்குழு உறுப்பினராகவும், கலைஞரின் நேரடி சிபாரிசில் மும்பை துறைமுக கழக மும்பை துறைமுக கழக அறங்காவலராக தொடர்ந்து நான்கு வருடங்கள் இருந்துள்ளார். மீண்டும் கலைஞரின் நேரடி சிபாரிசில் மத்திய அரசுக்கு சொந்தமான ஜவஹர்லால் நேரு துறைமுக கழகத்தின் அறங்காவலர் ஆகி இருந்திருக்கிறார்.

தற்போது மும்பை புறநகர் மாநில தி.மு.க வின் செயலாளராக சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அலிசேக் மீரானை அயலகத் தமிழர் நல வாரியத்தில் ஒரு உறுப்பினாக சேர்த்துள்ளது இவரது பணிக்கு கிடைத்த சிறந்த அங்கிகாரமாக பார்க்கப்படுகிறது

இடைத்தேர்தல் பொதுத் தேர்தலுக்கு இப்போதும் தலைமை கழகத்தின் அழைப்பின் பேரில் தாயகம் சென்று கட்சி பணியாற்றுகிறார்

தான் மும்பை வந்த காலகட்டத்தில் அறிமுகமாகி பின்னர் நெருக்கமான நட்பு வட்டத்துக்குள் வந்த திருவாளர்கள் தியாகராஜன் தா.மு ஆரியசங்காரன், தா.மு.பொற்கோ, பொ.அப்பாதுரை, வி தேவதாசன் சீர்வரிசை சண்முகராசன், சமீரா மீரான், எஸ் பி முருகேசன், கோ வள்ளுவன், நெல்லை வளவன், சற்குணம், பத்தமடை தூ.ம.பீர், சு.குமணராசன் போன்றவர்களை இந்தக் கட்டுரை வாயிலாக நினைவில் கொள்வதாக பெருமையோடு குறிப்பிடுகிறார் அலிஷேக் மீரான்

இவரது நிறுவனம் அமைந்துள்ள 17 நிறுவனங்களைக் கொண்ட ஸிராப் கஸ்கர் தொழில்பேட்டையில் செயலாளராக கடந்த 25 வருடங்களாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். கட்சி, தொழில் இலக்கியம் பட்டிமன்றம், பாடகர் என்று இவர் தொடாத துறைகள் இல்லை இந்திய பொருளாதாரத்தையும் இந்திய அரசியலையும் விரல் நுனியின் வைத்துக் கொண்டு புள்ளி விவரத்துடன் புட்டுப் புட்டு வைக்கிறார்.

படித்த ஒரு சாதாரண கிராமத்து இளைஞனாக மும்பை வந்து இன்று பல கௌரவ பொறுப்புகளை வகிக்கும் அளவுக்கு தனது திறமையால் வளர்ந்து வெற்றித் திருமகனாக வலம் வரும் அளவுக்கு தனது திறமையால் இன்றைய இளைஞர்களுக்கு உதாரண புருஷராக திகழ்கிறார் என்றால் அது மிகையாகாது.

You already voted!
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Jheeva
Jheeva
2 months ago

Very much appreciated.

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

102611
Users Today : 20
Total Users : 102611
Views Today : 30
Total views : 428013
Who's Online : 0
Your IP Address : 18.97.14.81

Archives (முந்தைய செய்திகள்)