21 Dec 2019 7:52 pmFeatured
மும்பையில் குமரேசன் என்பவர் கோரேகான் பகுதியில் வசித்து வருபவரும் சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருபவரும், சமூக சேவகருமாவார்
இவர் சமீபத்தில் சென்னை மாங்காட்டில் உள்ள கெருகம்பாக்கத்தில் தொழில் நிமித்தமாக 7,200 சதுர அடி நிலத்தை சிவா என்ற சிவக்குமார் மற்றும் அவரது தந்தை சுந்தரராஜன் ஆகியோரிடம் ரூ 50 லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கியிருக்கிறார். பின்னர்தான் இந்த இருவரும் அரசு நிலத்தை ஏமாற்றி தன்னிடம் விற்றது தெரியவந்துள்ளது.
குமரேசன் இது தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வனாதனிடம் முறையிட்டிருக்கிறார். ஆணையரின் அறிவுறுத்தலின் படி, மாங்காடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் சிட்டிபாபு துரித நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இதேபோன்று தங்களையும் ஏமாற்றியதாக பாலசேகர், சார்லஸ், அருள்செல்வம், ஏழுமலை ஆகியோரும் புகார் அளித்துள்ளனர், ஆய்வாளர் சிட்டிபாபுவின் துரித நடவடிக்கையால் சிவா என்ற சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது பற்றி தென்னரசு ஆசிரியரிடம் பேசிய குமரேசன் ”பெரும்பாடு பட்டு சம்பாதித்த பணத்தை ஏமாந்துவிட்டோம் என்றதும் அதிர்ச்சியடைந்தேன். காவல்துறை ஆணையரி அறிவுருத்தலும் ஆய்வாளரின் துரித நடவடிக்கையாலும் எனது பணம் திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தந்திருக்கிறது” என்றார்.