16 May 2026 3:39 amFeatured

தென்னரசு மின்னிதழின் ஏழாம் ஆண்டு விழா, இலக்கிய விழா, முத்தமிழ் விருதுகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா 17.05.2026 அன்று மாலை 5.45 மணியளவில் டோம்பிவிலி மேற்கு ஜோந்தலே பள்ளி குளிரரங்கத்தில் வைத்து நடைபெறவிருக்கிறது.
நிகழ்ச்சியின் துவக்கமாக இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆர்.டி ராஜன் தமிழ் மொழி வாழ்த்து பாடுகிறார். அதனைத் தொடர்ந்து தென்னரசின் துணை ஆசிரியர் கவிஞர் வெங்கட சுப்பிரமணியன் வரவேற்புரையாற்றுகிறார்
நிகழ்வினை தென்னரசு மின்னிதழின் பொறுப்பாசிரியர் கருவூர். இரா பழனிச்சாமி தலைமை தாங்குகிறார்,
தொழிலதிபரும், தென்னரசின் புரவலரும், மும்பை புறநகர் திமுக பொறுப்பாளருமான அலிசேக் மீரான் முத்தமிழ் விருதுகளை வழங்கி சிறப்பிக்கிறார்.
தென்னரசின் சிறப்பாசிரியரும், மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவருமான முனைவர் வதிலை பிரதாபன் முத்தமிழ் விருதுகள் பெற்றவர்களைப் பாராட்டி பேசுகிறார்.
தொழிலதிபரும், தென்னரசின் புரவலருமான ந.வசந்தகுமார் வாழ்த்துரை வழங்குகிறார்.
தென்னரசு மின்னிதழின் முதன்மை ஆசிரியர் வே.சதானந்தன் மகிழ்வுரை மற்றும் நன்றியுரையாற்றுகிறார்
நிகழ்வன
நூல் அறிமுகம்
முன்னதாக நடைபெறும் நூல் அறிமுக நிகழ்வில் கவிஞர் இரஜகை நிலவனின் ”தேவதைகள் தூங்குவதில்லை” என்ற சிறுகதைத் தொகுப்பு நூலினை ந.வசந்தக்குமார் அறிமுகப்படுத்த முனைவர் ஜே. இரவிக்குமார் ஸ்டீபன் முதல் பிரதியினை பெற்றுக்கொள்கிறார்.
கார்கர் தமிழ்ச் சங்க மேனாள் செயலாளர் செல்வி ராஜ் நூல் அறிமுகவுரையாற்றுகிறார் நூலாசிரியர் கவிஞர் இரஜகை நிலவன் ஏற்புரையாற்றுகிறார்.
இளம் தலைமுறையின் இலக்கிய உரை
டோம்பிவிலி சவுத் இந்தியன் பள்ளியின் (எஸ்.ஐ.ஏ) பத்தாம் வகுப்பு மாணவி செல்வி. ரியா சுரேஷ் ”சிலப்பதிகாரம் ஓரு நீதியின் குரல்” என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
டோம்பிவிலி சவுத் இந்தியன் பள்ளியின் (எஸ்.ஐ.ஏ) ஒன்பதாம் வகுப்பு மாணவி செல்வி. உத்விதா அருண் ”மணிமேகலை ஓர் அறத்தின் அடையாளம்” என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
பிவாண்டி விஸ்டம் அகாடமி ஆங்கிலப் பள்ளி மாணவி செல்வி எம் எம் ஜீனத் நபிலா “அமுத சுரபி - அள்ளக் குறையாத அன்பின் ஊற்று” என்ற தலைப்பில் உறையாற்றுகிறார்
முத்தமிழ் விருதுகள் வழங்கும் விழா
மும்பையில் ”இயல்”, ”இசை”, ”நாடக”த் துறையில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டி சிறப்பு செய்யும் வகையில் தென்னரசு மின்னிதழ் ”முத்தமிழ் விருதுகளை” வழங்குகிறது.
இயற்றமிழ் விருது
அந்த வகையில் முறையாக இலக்கணம் பயின்று மரபுக் கவிதைகளை எழுதி வருபவரும், பல இலக்கிய பணிகளை ஓய்வின்றி ஆற்றிவருபவருமான பாவலர் முகவை திருநாதன் இயற்றமிழுக்காக “செம்மொழிச் செம்மல்” விருதினைப் பெறுகிறார்.
இசைத் தமிழ் விருது
மும்பையில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழிசைப்பணி ஆற்றி வருபவர், டி.எம்.எஸ் என்று மும்பை மக்களால் அன்பொழுக அழைக்கப்படுபவர், தொய்வின்றி ஆற்றிவரும் தனது இசைத்தமிழ்ப் பணிகளுக்காக (டி.எம்.எஸ்) எம்.என் நரசிம்மன் ”இன்னிசைச் செம்மல்” விருதினைப் பெறுகிறார்.
நாடகத்தமிழ்
எழுத்தாளர், கவிஞர்; பேச்சாளர், தனித்தமிழ் மேம்பாட்டாளர், ஆடல், பாடல், நடிப்பு, கதை வசனம், கலை வடிவமைப்பு இவைகளுடன் இயக்கத்திலும் முத்திரை பதித்து நாடகத் துறைக்கு உயிரூட்டி வருபவர். பாவலர் நெல்லை பைந்தமிழ் இவர் ஆற்றிவரும் நாடகத்தமிழ் பணிகளுக்காக ”நாடகத் திலகம்” விருதினைப் பெறுகிறார்
பட்டிமன்றம்
கவிஞர் வாலியின் திரையிசையில் மிளிர்வது கொள்கைப் பிடிப்பா? காதல் துடிப்பா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது
பட்டிமன்ற நடுவராக சொல்லேருழவர் அலிசேக் மீரானும்
”கொள்கைப் பிடிப்பே !” என்ற அணியில் பாவலர் நெல்லைப் பைந்தமிழ்,
கி. வெங்கடேஷ் , சு. கதிரேசன் ஆகியோர் வாதிடுகின்றனர்
”காதல் துடிப்பே” என்ற அணியில் வே. சதானந்தன், கவிஞர் வெங்கட சுப்பிரமணியன், மு. மகேஷ் ஆகியோர் வாதிடுகின்றனர்
முன்னிலை
கே.வி.அசோக்குமார், டி.என்.முத்துகிருஷ்ணன், சிவக்குமார் சுந்தர்ராஜ், ஜெயா ஆசீர், தமிழ் அறம் ராமர்,அ. ரவிச்சந்திரன், பெ.கணேசன், வெ.இராஜேந்திரன், ஜெ.ராஜா,ஐயம்பெருமாள்,முத்தமிழ் தண்டபாணி, முனைவர் B வெங்கடரமணி , தி. அப்பாதுரை, சோ.வேல்முருகன், வழக்கறிஞர் சாக்ரடீஸ் கணேசன், ஆர்.டி.ராஜன், கோபால் (LIC) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்
சிறப்பு அழைப்பாளர்கள்
P.கிருஷ்ணன், அ. இளங்கோ, அ.வேலையா , வீரை சோ பாபு, அ.அருணாச்சலம், சோ.பா. குமரேசன், ஜைனுலாபுதின், க.ஜீவானந்தம், முஷ்டாக் அலி, பாண்டு (கோரேகாவ்), க. நந்தகோபால், எல்.என் ஹரிஹரன், L.இரமேஷ் பாபு, மெஹ்பூப் பாஷா ஷேக், செல்லப்பா, மா. கதிரவன் , கலியபாபு, சிந்து (தினகரன்), அ.பாலசுப்ரமணியன், இ.பெருமாள் , என்.இரத்தினம், பாலமுருகன், ரகுநாத பெருமாள், அனந்த ரமேஷ் பொன்னையா, காரை கரு.ரவீந்திரன், ஜஸ்டின் துரைராஜ், எஸ். பெருமாள், ஜே.சுபா லாரன்ஸ், சுரேஷ் சதானந்தம், தமிழரசன், கண்ணன் (T.C),லலிதா பர்குரு, திருஞானசுந்தரம், ரவி முனியசாமி, அப்துல் லத்தீப் , சூரியநாராயணன் , உ. சுரேஷ், புவனேஸ்வரி, மீரா ஸ்ரீராம், உமா சுந்தர் , பவானி, பவுல் சத்தியராஜ், ஜெ.கலைச்செல்வன், சௌந்தர்ராஜன், வைத்தியநாதன், கலைவாணி, சரவணக்குமார், எம். அசோக்குமார், வானுமாமலை, அருண் ஆறுமுகம் , பார்த்த சாரதி, சு. சுவாமி, வி. கோபால், முத்து, முத்து கிருஷ்ணன் , சுப்பிரமணி, ராமு (அம்பர்நாத்), கிருஷ்ணன் (அம்பர்நாத்), எஸ் சாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர்.
நிகழ்வின் இறுதியாக சிற்றுண்டியுடன் விழா இனிதே நிறைவுறுகிறது
அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க தென்னரசு குழுமத்தினர் அன்புடன் அழைக்கின்றனர்






Users Today : 34
Total Users : 116011
Views Today : 45
Total views : 445920
Who's Online : 0
Your IP Address : 18.97.14.80