23 Mar 2020 8:15 pmFeatured

கொரோனா வைரசை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இந்த மாவட்டங்களில் ஊரடங்கை கடுமையாக பின்பற்றுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட வேண்டிய மாவட்டங்களின் பட்டியலில் தமிழகத்தில் உள்ள சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் இடம் பெற்றிருந்த நிலையில்
தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாநிலத்தில் நாளை மாலை 6 மணி முதல் மாவட்ட எல்லைகள் மூடப்படும் என்று சட்டசபையில் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்றால் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டத்தை மத்திய அரசு முடக்க பரிந்துரை செய்த நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்ட எல்லைகள் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும் என்ற ஒரு உத்தரவை தமிழக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதே போல நாளை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்படுவதாக தெரிவித்தார். அத்யாவசிய தேவைகளை தவிர மற்ற நடவடிக்கைகள் ஈடுபடக் கூடாது என்றும் மருந்து, காய்கறி, மளிகைக்கடைகள் ஆகிய அத்தியாவசியப் பொருட்களுக்கான விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் அனைத்து மாவட்ட எல்லைகள் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும்
தமிழகத்தின் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வரும்.
கட்டுப்பாடுகள் தொடர்பான விரிவான அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும்.கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பால், காய்கறி, மளிகை, இறைச்சி,மீன் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகள், வணிக வளாகங்களை மூட உத்தரவு
மருத்துவம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள் இயங்கும்.
அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். பார்சல் மூலம் மட்டுமே உணவுகள் வழங்க உணவகங்களுக்கு உத்தரவு
அவரச உதவிக்கான ஆம்புலன்ஸ் சேவை, அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துக்கு தடையில்லை.
பொதுப் போக்குவரத்து, தனியார் பேருந்துகள், ஆட்டோ, டேக்சிகள் உள்ளிட்டவை இயங்காது.
மாவட்டங்களுக்கு இடையே அத்தியாவசியப் பொருட்கள் போக்குவரத்து தவிர மற்றவற்றுக்கு தடை
அத்தியாவசியப் பணிகள் மற்றும் அவசர அலுவல்கள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது.
மாவட்ட நிர்வாகம், நீதித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சி துறை, தீயணைப்பு துறை ஆகியவை தொடர்ந்து செயல்படும்.
தனியார் நிறுவனங்கள் வீட்டில் இருந்தே ஊழியர்கள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.
அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும்.
தடை உத்தரவு நாட்களில் வேலைக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக் கூடாது.
அத்தியாவசிய கட்டிடப் பணிகள் தவிர பிற கட்டுமானப் பணிகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்படுகிறது.
வீடுகள் தவிர விடுதிகளில் தங்கியிருப்போருக்கு உணவுகள் கிடைக்கும் விதத்தில் உணவகங்கள் செயல்பட அனுமதி
தமிழகம் முழுவதும் மதுபான கடைகள் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும்.
அத்தியாவசியமான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த *பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
பிற இடங்களுக்கு சென்று வந்தவர்கள், கொரோனா அறிகுறி தென்பட்டால் தனிமைப்படுத்திக் கொண்டு சோதனைக்கு உட்படுத்த வேண்டும்
குடும்ப உறுப்பினர்கள், மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பது முக்கியமானது.
வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள், உடனடியாக அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
தடை உத்தரவால் கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு ஏற்படும் இடையூறை களைய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு.
அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை, மருந்து பொருட்கள் விற்பனைக்கு எந்த தடையும் கிடையாது.
இதேபோல் புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது.






Users Today : 8
Total Users : 108821
Views Today : 8
Total views : 436857
Who's Online : 0
Your IP Address : 216.73.216.150