12 Mar 2022 12:57 amFeatured

பணப் பரிவர்த்தனை விதிமுறைகளை முறையாக பின்பற்றாத காரணத்தால் பேடிஎம் பேமண்ட் வங்கி (Paytm Payment Bank) புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்லாமல் பிற சேவைகளுக்காக பணத்தை வழங்குவதற்கும் கூகுள் பே, பேடிஎம், ஃபோன் பே உள்ளிட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த செயலிகள் (App) பதிவிறக்கம் செய்வதும், அவற்றில் நமது வங்கிக் கணக்கு விவரங்களை இணைப்பதும் மிகவும் எளிமையாக இருப்பதால் இந்தியாவில் கோடிக்கணக்கானோர் இதுபோன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஆப்களை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த செயலிகளை நிர்வகிக்க தனித்தனியாக வங்கிகள் செயல்படுகின்றன. அவையாவும் ரிசர்வ் வங்கி வகுத்துக் கொடுத்த விதிமுறைகளின் கீழ் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், பேடிஎம் ஆப்-ஐ நிர்வகிக்கும் பேடிஎம் பேமண்ட் வங்கி பணப்பரிவர்த்தனை விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கி விசாரணை நடத்தி வந்த நிலையில், இது தொடர்பாக, ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயாள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
"இந்திய ரிசர்வ் வங்கி இன்று, அதன் அதிகாரங்களைப் பயன்படுத்தி, வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 35A இன் கீழ், Paytm Payments Bank Ltd- ஐ புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கி அதன் தகவல் தொழில்நுட்ப அமைப்பின் விரிவான கணினி தணிக்கையை நடத்த ஒரு ஐடி தணிக்கை நிறுவனத்தை நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பணப்பரிவர்த்தனை விதியை முறையாகப் பின்பற்றாத காரணத்தால் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. Paytm Payments Bank Ltd மூலம் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பது, IT ஆடிட்டர்களின் அறிக்கையை மதிப்பாய்வு செய்த பிறகு ரிசர்வ் வங்கி வழங்கும் குறிப்பிட்ட அனுமதிக்கு உட்பட்டது." இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






Users Today : 15
Total Users : 105749
Views Today : 22
Total views : 433263
Who's Online : 0
Your IP Address : 18.97.14.90
பயனுள்ள தகவல்