01 Oct 2019 6:17 pmFeatured

தமிழகத்தில் 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவுவை விட அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இன்பதுரை 69590 வாக்குகளும், அப்பாவு 69541 வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், வாக்கு எண்ணிக்கையின்போது 203 தபால் வாக்குகளை எண்ணாமல் அதிகாரிகள் நிராகரித்ததாகவும், அந்த வாக்குகளை எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மனுதாரர் அப்பாவு கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
மேலும், 19, 20 மற்றும் 21வது சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டது.
தடைவிதிக்க அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை மனுதாக்கல்
ராதாபுரம் தொகுதி தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டத்தை எதிர்த்து அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை மனுதாக்கல் செய்துள்ளார். மறுவாக்கு எண்ணிக்கை நடத்த நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்குமாறு இன்பத்துறை கோரிக்கை விடுத்துள்ளார்.






Users Today : 62
Total Users : 105931
Views Today : 97
Total views : 433513
Who's Online : 0
Your IP Address : 18.97.14.90